முதல் பாகத்தை இங்கே பாருங்கள்
நூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.
தில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).
அவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.
அவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.
செல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)
‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
உரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.
சில எண்ணங்கள்

- அகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.
- ‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள்? அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.
- வாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.
- சுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.