Tuesday 28 July 2009

உன் லாஜிக் நல்ல லாஜிக்!

வெடிவால் முளைத்து மூன்றரை அடிக்கு மேல் நீண்டிருந்த காலம். மாணவர் தலைவர்கள் என்ற பேரில் எங்கள் வகுப்பில் ஒரு 15 பேரின் சந்தோசமான பாடசாலை வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க பள்ளி நிர்வாகம் முயன்றாலும், நாங்களெல்லாம் சிங்கம்ல என்ற ரீதியில் அவர்களுக்கு கடுக்கா கொடுத்து நண்பர்களோடு கூத்தடித்த காலம் அது. நாங்கள் கொஞ்சமே பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று கூடச் சொல்லலாம். நாங்கள் 10ம் வகுப்புப் படிக்கும்போது அந்த ரீச்சர் வந்து சேர்ந்தா எங்களின் பள்ளிக்கூடத்தில். 80-90களில் கமல், ரஜினியின் ஆதர்ச தேவியாக விளங்கிய நாயகியின் பெயர் அவருக்கு. நம்ம பசங்களுக்கு ஏனோ ஒரு தனிப்பாசம் அவ மேல. அவவைப் பற்றி பள்ளிக்கூடம் பூரா கதைகள் உலாவின. அவ வந்த ஆரம்பகாலத்தில் எங்களின் பள்ளிக்கூட அதிபர், அந்த ரீச்சரின் ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரீச்சருக்கு மரியாதை இருந்தது. அவர் போனதும் அதுவும் இல்லை. ஆனா ரீச்சருக்கும் இளம் வயது என்பதால் அவவும் பகிடியா கதைப்பா.

நாங்கள் 12ம் வகுப்புக்கு வந்திருந்த காலம் அது. ரீச்சர் 11ம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான் வகுப்பெடுப்பா. எங்கடை வயதுப் பசங்களுக்கு ஒரே ஒரு பெம்பிளை மலர் ரீச்சர் மட்டும்தான். அவங்களைப் பற்றி நான் ஒண்டும் சொல்ல விரும்பேல்லை. சொன்னா, மகியும், நிதியும் டிக்கட் போட்டுவந்து எனக்கு அடிப்பாங்கள். இவங்கள் எப்பவும் மலர் ரீச்சரிண்ட வகுப்பில Out-Standing Students. இவங்களோட சோமு எண்டு ஒரு ரொம்ப நல்லவன் இருந்தான். இவங்கள் கொஞ்சப் பேர் சேர்ந்து வகுப்பை கண்டம் பண்ணிக் கொண்டே இருப்பாங்கள். இவங்கள் இல்லாமல் வகுப்பில ஒரு களையே இருக்காது. ஒரு நாள் அப்பிடித்தான், மலர் ரீச்சர் நாலு பீரியட் தொடர்ந்து அறுத்த அறுவையால உடம்பும், மனமும் சோர்ந்து போய் இவங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிற நேரம் பாத்து, வேற ஒரு வகுப்புக்கு பாடம் எடுக்க அந்த 'கதாநாயகி' ரீச்சர் போய்க்கொண்டிருந்தது இவங்களிண்ட கண்ணில பட்டுட்டுது.

சோமன் அன்றைக்கு ரொம்பவே கடுப்பில இருந்தான். ரீச்சரைக் கண்டதும் ‘குக்குகூய்' என்று வித்தியாசமாய் ஒரு குரலைக் கொடுத்துத் தொலைத்தான். அவ்வளவு காலமும் எங்களோட பகிடியாய் பேசிப்பழகின ரீச்சருக்கு, அப்பிடி பள்ளிக்கூட வளாகத்திலேயே வைச்சு குரலடிச்சது துண்டற பிடிக்கேல்லை. அந்த வயதில எங்களுக்கு அது பகிடியாய் தெரிஞ்சாலும், ரீச்சர் கடுப்பாகீட்டா. போய் எங்கட செக்‌ஷனுக்கு (12ம், 13ம் வகுப்புகளுக்கு) பொறுப்பாயிருக்கிற, அண்ணன் கரவைக்குரலான் ‘காந்தர்வ ராஜா' என்றும், பொதுவாக மாணவர்களால் 'முயலகன்', 'முயல்குட்டி' என்றும் அழைக்கப்படும் ஆசிரியரிடம் சொல்லிவிட்டார். அப்போதான் எங்களுக்குப் புரிந்தது விளையாட்டு வினையாகிப் போச்சு எண்டு. முயலகன் வந்து 'இண்டைக்கு உங்கட வகுப்புக்கு டிற்றென்சன்' என்று சொல்லீட்டுப் போய்விட்டார்.

பள்ளிக்கூடம் முடிய மணி அடித்து, பாடசாலைக் கீதம் எல்லாம் பாடி எல்லா வகுப்பும் போய் முடிஞ்ச பிறகுதான் முயல் வந்தது. நான் 12ம் வகுப்பு ‘ஏ' பிரிவு. இவங்கள் ‘பி' பிரிவு. ஆனால் இவங்களோடதான் ஒவ்வொரு நாளும் வீட்டை போறனான். முயலகனின் விசாரணை பாணியும் வித்தியாசமாக இருக்கும். ஆக வேடிக்கை பார்க்க ஆயத்தமானேன். முயலகன் முதலில் மிரட்டினார். ‘அடே, கூக்காட்டினது ஆரெண்டு சொல்லாட்டா, ஒருத்தரும் வீட்டை போகேலாது'. ம்ஹூம், ஒருத்தனும் அசையவேயில்லை. கொஞ்சம் பயந்த மாணவர்கள்கூட முயலின் மிரட்டலுக்குப் பணியவேயில்லை. பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார். 'ஒருத்தன் செய்த பிழைக்கு எல்லாரும் தண்டனை அனுபவிக்கிறியள்' எண்டும் சொல்லிப் பார்த்தார். எங்கட பொடியள் இந்த விஷயத்தில தங்கங்கள். ஒரு எட்டப்பன் கூட எழும்பேல்லை. அலுத்துப்போய் முயலகன் சமாதானம் பேச முயன்றார்.

‘எடே, தம்பியவை. இது வாலிப வயசு எண்டு எனக்குத் தெரியும். இந்த வயசில நாங்கள் மலையில் ஏறி அந்தர் அடித்து கடலிலும் குதிப்போம், கப்பலையும் கவிழ்ப்போம் எண்ட மாதிரி மனசு இருக்கும். இந்த வயசில ரீச்சருக்கு கூக்காட்டிறது, விசிலடிக்கிறது எல்லாம் சகஜமடா. என்ன செய்யிறது, நீங்கள் தனிய பொடியள் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிச்சு காய்ஞ்சு போயிருப்பியள். நீங்கள் செய்ததை பிழை எண்டு சொல்லேலாது. ஆனால், ஆர் செய்தது எண்டு மட்டும் சொல்லுங்கோடா. நான் ஒண்டுமே செய்யமாட்டன். ஆரெண்டு தெரிஞ்சவுடன இந்தப் பிரச்சினையை அப்பிடியே முடிக்கிறன். ஒரு பனிஷ்மெண்டும் கிடையாது' என்று உருக்கமாய் முயலகன் பேசிமுடிக்கவும், நிதி மெதுவாக எழும்பவும் சரியாயிருந்தது. முயல் முகத்தில் சந்தோஷம்; ‘ஒன்றில் தான் செய்ததாக இவன் ஒப்புக்கொள்வான், இல்லை செய்தவனைக் காட்டித்தரப் போகிறான். நம்ம திட்டம் பலித்தது' என்பதாய் பெருமிதம். மெதுவாய் எழுந்த நிதி சொன்னான், ‘சேர், குரலடிச்சவனுக்குத் தண்டனை குடுக்கப்போறதில்லை எண்டால், அவன் ஆர் எண்டு கண்டுபிடிக்கிறதில என்ன லாபம் சேர்?' என்றான். வகுப்பே சிரிக்க், முயல் முகத்தில் ஈயாடவில்லை. கொஞ்சநேரம் யோசித்தார். ‘மோனே, உண்ட லொஜிக் நல்ல லொஜிக், எல்லாரும் பிழைச்சுப் போங்கடா' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார் முயல்.

பி.கு: படத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட, சம்பவத்தை எழுத்துருவாக்குகின்ற அத்தனை ‘மங்கீஸும்' இருக்கின்றன. அரைவாசி மறைந்து தெரியும் ஒரேயொரு முகம் ‘லாஜிக்' பேசிய நிதியினுடையது. முன்வரிசையில் இருப்பவர்களில் வலதுபக்கம் இருப்பது சோமு.

16 comments:

jeya said...

intersting....
thanks for sharing.

நிலாமதி said...

மீண்டும் பழைய பசுமையான நினைவுகளை ..அசை போட வைத்து விடீர்கள் இந்தகால் பிள்ளைகளின் வாழ்கை ஒரு வாழ்க்கையா நாம எவ்வளவு சந்தோசமாய் ...இருந்தோம். இல்ல விளையாடுபோட்டிகள் ..பங்களிப்புகள்....சோடினைகள் என்று எத்தனையோ ..ஒரு புத்தகம் போதாது அதை வரைய ........தங்கத்தாலான நி னைவுகள்.

கலையரசன் said...

நல்லாயிருக்கு கீத்...
வாழ்கையில் ஆனந்தமே, நினைவுகளை அலசுவதுதான்!!

பால்குடி said...

// out-standing students.... உங்களின் மொழி புலமையை ரொம்பவே ரசித்தேன்.
மகி, நிதி, சோமுவின் நகைச்சுவைகளை நினைத்து நினைத்து எந்தக் காலத்திலும் சிரிக்கக் கூடியவை.
இதே ஆசிரியருக்கு நேற்று பள்ளிக்கூடம் வராததற்கான கரணத்தை அவரின் காதுக்குள்ளே சொன்னதை மறக்கவா முடியும்...
உண்மையில் அந்த காலத்தில் எங்களிடையே நிலவிய ஒற்றுமையை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கு... (HEPP மேலுமொரு உதாரணம்.)

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயா, நிலாமதி அக்கா..
உண்மை கலை.. அதுவும் பள்ளிப்பருவ நினைவுகள் என்றுமே பசுமையானவை.
பால்குடி...out-standing students பிரயோகத்தை யுவன்ஷங்கர் ராஜாவின் ஒரு பேட்டியிலிருந்து சுட்டேன். HEPP பற்றி எழுதலாம் ஒருநாள்.. அண்ணன் கரவைக்குரல் அடிக்க வராவிட்டால்.. ஹூம் அதெல்லாம் ஒரு காலம்

வந்தியத்தேவன் said...

நாங்கள் படிக்கும்போது ஒரு டீச்சர் வந்தார் அவரின் பட்டப்பெயர் ஒரு பிரபல ஆங்கில இசைக்குழுவினுடையது, இடையில் ஏனோ பாடசாலை மாறிவிட்டார். நீங்கள் சொல்ற டீச்சர் நாங்கள் படிக்கும்போது வரவில்லை,

Unknown said...

யாருங்க வந்தி அது... கணக்கியல் படிப்பிச்சாங்களே அவுங்களா?

வந்தியத்தேவன் said...

//கீத் குமாரசாமி said...
யாருங்க வந்தி அது... கணக்கியல் படிப்பிச்சாங்களே அவுங்களா?//
அவங்க என்ன பாடம் படிப்பிச்சாங்கள் என்றே மறந்துபோனேன். நல்ல ஹீல்ஸ் வைத்த செருப்புடன் வருகின்றவர்.

வந்தியத்தேவன் said...

கேட்க மறந்த கேள்விகள் :
யாரப்பா அந்த முயலகன்?
உந்தப்படம் வைஎம்சிஏற்கு முன்னால் நின்று எடுத்தது தானே.

எங்கட காலத்திலை குணத்திலை சீலம் மிக்கவர் தான் டிசிப்பிளின் வாத்தியார். நாங்கள் அவருக்கு பயம் அப்படியிருந்தும் அவரின் மகளுடன் லொள்ளுப்பண்ணியவர்கள் எங்கட பொடியள்.

Unknown said...

வந்தி அண்ணா... முயலகன் வல்லிபுரக் கோயில் செல்லும் வழியிலுள்ள ஒரு ஊரைச் சேர்ந்த ‘உயரமான' கணித வாத்தியார், படம் எடுத்த இடம் நீங்க சொன்ன அதே வை. எம். சி. ஏ தான்... அப்புறம் குணத்தில சீலமானவரிண்ட பெட்டைய எங்கட நண்பன் ‘அசமுகி' என்று வர்ணிப்பான்.. அதோட போய் லொள்ளுப் பண்ணியிருக்கீங்களே... உங்கள... ம்ம்ம்ம்

வந்தியத்தேவன் said...

அடப்பாவிங்களா அவருக்கா இந்தப்பெயர் வைத்தீர்கள். என்ன செய்வது அவரைப் பழிவாங்கவேண்டும் என்றால் அசமுகியுடன் சண்டைபோடுவதுதான் எங்கள் கொள்கை. காந்தமான கணிதவாத்தியாரும் எங்களுடன் ஒரே கொழுவல்தான். கடந்த ஞாயிறு பழைய மாணவர்கள் சங்க கூட்டம் வாதுவையில் நடந்தது. உங்கள் வகுப்பு மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள். வயசை வைத்து உங்கள் வகுப்பு எனக் கணித்தோம்.

Unknown said...

கண்டுபிடித்துவிட்டீர்கள் வந்தியண்ணா... காந்தமானவரின் தலையின் இரு புறமும் சில முடிகள் சேர்ந்து (இருக்கிற கொஞ்ச முடியில்) முயலின் காதுபோல் அவர் நடக்கும்போது ஆடும்... அதனால் வந்த காரணப்பெயர் அது...வாதுவைக்கூட்டப் படங்களைப் போடுங்களேன்... உங்களையும் அடையாளம் கண்டுகொள்ளலாம்

பால்குடி said...

வந்தி அண்ணா, வாதுவைக்கு நானும் வந்திருந்தேன்... இருந்தாலும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் அறிமுகம் செய்ய முடியாமல் போய் விட்டது... இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்?
நீங்கள் அனுமானித்ததைப் போல கீத்தினுடைய வகுப்பு மாணவர்கள் அறுவர் கலந்து கொண்டோம்.

vasu balaji said...

நனவோட்டம் அருமை.

கரவைக்குரல் said...

என்ன கதைக்கு நாயகனாய் வந்திருக்கும் காந்தமானவரை இப்படி போட்டு போட்டு வாங்குறீங்களே?
அப்ப நாங்க வந்தியின் பதிவில் குணமான சீலம் கொண்டவரோடு பண்ணிய லொள்ளுகளை எதிர்பார்ப்பம் என்ன?
வந்தியின் மொழி நடையில் அது சிறப்பாக இருக்கும்.

இன்னும் வரட்டும்,வாழ்த்துக்கள் கீத்

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ஆக்களைத்தெரியுது, அந்த ரீச்சர் எங்கடை காலத்திலதான் பள்ளிக்கூடத்துக்கு வந்தவா எண்டு நினைக்கிறன்...