Monday 13 July 2009

கிரிக்கெட் வசைபாடிகள்-1 (18+)

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:

ஃப்ராங் டைசன் - ராமன் சுப்பா ராவ் (Frank Tyson- Raman Subba Rao)- 1954

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி. ஓவல் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 133, இங்கிலாந்து 130. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஆடியபோது, டைசன் வீசிய ஒரு பந்து இம்தியாஸ் அகமதுவின் மட்டை விளிம்பில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற ராமன் சுப்பா ராவிடம் போனது. அல்வா மாதிரி வந்த கேட்சை விட்டதோடு மட்டுமல்லாமல் கால்களுக்கிடையே பந்தை நுழையவிட்டு 4 ஓட்டங்களையும் கொடுத்தார். ராமன் கொஞ்சம் ஜெண்டில்மேன் வேறு. ஓவர் முடிவில் டைசனிடம் சென்று, மன்னித்துவிடுங்கள் டைசன், நான் எனது கால்களை இறுக மூடியிருக்க வேண்டும்' என்றார். உச்சக்கட்ட கடுப்பிலிருந்த டைசன் சிம்பிளாகப் பதில் சொன்னார் ‘இல்லை அப்பனே, உன்னுடைய அம்மாதான் அவ்வாறு மூடியிருக்கவேண்டும்'.

கிளென் மெக்ராத்- எட்டோ ப்ராண்டெஸ் (Glen McGrath-Eddo Brandes)

ஸிம்பாப்வேயின் ப்ராண்டெஸ்சுக்கும் பேட்டிங்குக்கும் வெகு தூரம். ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவரைவிட மோசமான பேட்டிங் மெக்ராத்தினுடையது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியபோது மெக்ராத்தின் ஒரு பந்தையாவது தொடுகிற தூரத்துக்குக் கூட ப்ராண்டஸ்சால் நகர முடியவில்லை. ஆனால் அவுட்டாகிப் போகவும் இல்லை. கடுப்பான மெக்ராத் ‘ஏம்பா நீ இவ்ளோ குண்டா இருக்கே' அப்டீன்னு கேட்டார் ப்ராண்டஸ்சைப் பார்த்து. அவர் கூலாகப் பதில் சொன்னார் ‘அது வந்து எப்டீன்னா, உங்க வைஃப் கூட ஒவ்வொரு தடவையும் காதல் பண்ணும்போது, ரொம்பத் திருப்திப் பட்டு ஒரு பிஸ்கட் தருவாங்க. அதைத் தின்னு தின்னே கொழுத்துப் போயிட்டேன்'. மெக்ராத் முகத்தில் ஈயாடவில்லை.

ப்ரெட் லீ- இன்சமாம் உல் ஹக் (Brett Lee- Inzamam ul-haq)

பெண்களை மயக்கும் அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர் லீ. மைதானத்தில் கூட மற்ற ஆஸ்திரேலியர்களோடு ஒப்பிடும்போது சினேகபாவம் கொண்டவர் லீ. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி. பவுண்ஸர், ஜோக்கர் எல்லாம் போட்டுப் பார்த்தும் இன்சமாமை அசைக்க முடியவில்லை. கடுப்பான லீ, பந்துளை அதிவேகமாக வீச ஆரம்பித்தார். இன்சமாம் தொடவேயில்லை. இன்சமாமை வாய்ச்சண்டைக்கு இழுக்காமல் முறைத்துப் பார்த்தே கடுப்பேத்தியும் பிரயோசனமில்லை. 150 மைல் வேகமாக ஒரு பந்தை வீசிவிட்டு முறைத்த லீயைப் பார்த்து இன்சமாம் சொன்னார் ‘போப்பா போ... முதல்ல எனக்கு ஓஃப் ஸ்பின் போடுறத நிப்பாட்டு'. லீயின் ரியாக்‌ஷனை சொல்லியா தெரிய வேண்டும்.

சர். விவியன் ரிச்சார்ட்ஸ்- கிரெக் தாமஸ் (Sir Vivian Richards- Greg Thomas)

சர். விவ் உலக கிரிக்கெட் மட்டுமல்ல இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும் கலக்கியவர். ஒருமுறை க்ளமோர்கன் (Glamorgan) மற்றும் சமர்செட் (Somerset) அணிகளுக்கிடையே போட்டி. விவ் சமர்செட் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். க்ளமோர்கன் வேகப் பந்து வீச்சாளர் தாமஸ் இரண்டு மூன்று முறை விவ்வின் அடிக்கும் முயற்சிகளைத் தோற்கடித்த மமதையில் விவ்விடம் சொன்னார் விவ், கிரிக்கெட் பந்து தெரியுமா கிரிக்கெட் பந்து... அது சிவப்பாக, உருண்டையாக, ஐந்து அவுண்ஸ் நிறையில் இருக்கும். உனக்கு அது தெரியாது போலிருக்கிறது' என்றார். சிங்கம் சிலிர்த்து அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டுச் சொன்னது, ‘அடாடா தாமஸ், உனக்குதான் கிரிக்கெட் பந்து எப்படியிருக்கும் என்று தெரியுமே. ஓடிப்போய் எடுத்துட்டு வா பார்க்கலாம்'.

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன தல இது

18+ அப்படின்னு போட்டுவிட்டு வெறும் நாலும் மட்டும் இங்க இருக்கு

Unknown said...

சுரேஷ்
பொறுங்க தல...மீதியையும் போடுறேன்.... என்னா ஆர்வம்(லொள்ளு என்று வாசிக்கவும்) பாருங்க உங்களுக்கு...

வால்பையன் said...

இம்புட்டு கூத்து நடக்குதா!?

ரெட்மகி said...

நல்ல இருக்கு

இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்

Unknown said...

இன்னமும் கூத்து இருக்கு வால்பையன்
நன்றி ரெட்மகி

ARV Loshan said...

super.. i ve read them in English.. but when i read in ur tamil, simply superb.

Unknown said...

நன்றி லோஷன்....

Anonymous said...

ennathan sonnaalum intha BIGSHOW,,mudiyla
avan thaan

Unknown said...

ஆமா நண்பா...Big Show is always Big Show

அருண்சங்கர் said...

keep it up.nice

மணிகண்டன் said...

http://cricket.rediff.com/report/2009/jul/14/i-have-never-said-anything-against-sachin-kambli.htm

shabi said...

சூப்பர்

தும்பளையான் said...

வேறு எங்கோ ஒன்றைப் படித்த ஞாபகம், ஆனால் உங்களின் தமிழில் வாசித்த போது மிகவும் நன்றாக இருந்தது.