Monday 14 December 2009

வேட்டைக்காரனும் சில வலிகளும்

1.
இப்போது வலையுலகில் சூடாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற 'தமிழீழம் காண' புதிய வழி இதுதான். ‘வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்'.

அப்பர் அடிக்கடி ஒரு வாய்வார்த்தை சொல்லுவார். 'அழுவார் அழுவாரெல்லாம் தன் கவலை, திருவன் பெண்டிலுக்கு அழ ஆளில்லை' என்று. அப்படியாகிவிட்டது ‘தமிழ் உணர்வாளர்கள்' நிலமை.

இந்தப் படத்தைப் புறக்கணிக்கவேண்டுமா இல்லையா என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. ஆனாலும் ஈழப் பிரச்சினையோடான தேவையில்லாத தொடர்புபடுத்தலாகவே இந்தப் புதிய புறக்கணிப்பைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக facebook ல் வேலையில்லாமல் இருக்கும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் விசமமாகவே இதைக் கருதவேண்டியதாய் உள்ளது. ஆயிரத்துக்குமேல் நண்பர்களைச் சேர்த்த வினை ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து ‘வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்' என்றும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத விகிதத்தில் இந்தப் ‘புறக்கணிப்பைப் புறக்கணிப்போம்' என்கிற மாதிரியும் facebook pages அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தக் கடுப்பில் எழுத உட்கார்ந்தாயிற்று.

2.
கொஞ்சக் காலத்துக்கு முன்னர்தான் அஜித்தின் ஏகனை புலம்பெயர் தமிழ் மக்களால் நடாத்தப்படுகிற திரையரங்குகளில் புறக்கணிப்போம் என்று ஒரு கோஷம் எழுந்ததாக ஞாபகம். Facebook முழுவதும் ‘ஏகனைப் புறக்கணிப்போம்' என்று தனுஷின் உடம்புக்கு அஜித்தை ஒட்டிக் கதறினார்கள். பின்னர் அஜித் சும்மா ஒரு இரண்டு வார்த்த பேசியதும் ஏகனைப் புறக்கணித்தல் புறக்கணிக்கப்பட்டது. இந்த முறை விஜய் காங்கிரஸ் கட்சியோடு சேரப்போவதாய் வந்த செய்திகளுடன், இராஜ் வீரரட்ன என்கிற சிங்களவரோடு சேர்ந்து விஜய் அன்ரனி பணியாற்றினார் என்கிற காரணத்தையும் சேர்த்து வேட்டைக்காரனைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் புறக்கணிப்பு சம்பந்தமான சர்ச்சையைச் சற்றே உற்றுப்பார்த்தால் தெரியும். இது ஒன்றும் ஈழ மக்கள் சார்பான சர்ச்சை அல்ல. விஜய் ரசிகர்கள், அவர்களின் எதிரிகள் விளையாடுவதற்கு ஈழ மக்களின் அவலத்தைப் பந்தாக உருட்டுகிறார்கள், அவ்வளவுதான். வேட்டைக்காரனைப் புறக்கணிப்பதால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடப்போவதுமில்லை, புறக்கணிக்காமல் விடுவதால் நிலமை இன்னும் மோசமாகிவிடப்போவதில்லை. இது சமீபகாலமாக நிலவிவருகிற மோசமான ஒரு பற்று (fad). ஏதாவது புதுப்படம் வந்தால் அதற்குரிய சர்ச்சைகளும் கூடவே வருவது இப்போது அவசியமாகியிருக்கிறது. தம் இருப்பைக் காட்டிக்கொள்ள கிருஷ்ணசாமி, திருமாவளவன், இராமதாசு ஆகியோர் ஆரம்பித்த இந்தப் பற்று இப்போது நம்மவர்களைத் தொற்றிக்கொண்டு ஆட்டிவைக்கிறது என்றே சொல்வேன்.

3.
விஜய், விஜய் அன்ரனி ஆகிய இருவரும் இன்னொரு நாட்டவர்கள். அவர்களுக்கும் ஈழவர்களுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. முன்பு தொப்பூள்கொடி உறவு இருந்ததாகக் கேள்வி. ஆனால் தெலுங்கானா மாநிலத்துக்கான அறிவிப்புடன் அந்தத் தொப்பூள்கொடி கொடூரமான முறையில் கூர் மங்கிப்போன, கறள்பிடித்த இறையாண்மை என்னும் கத்தியால் வெட்டியறுக்கப்பட்டு விட்டது. ஆகையால் அவர்கள் இனிமேலும் எங்கள் நலன்களை மனதில் வைத்துச் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அடிமுட்டாள்தனம். வேற்று மொழிகளில் உருவாகிற திரைப்படங்களைக் கண்டுமகிழும் அதே மனநிலையில் அவர்களின் படங்களைக் கண்டுமகிழ வேண்டியதுதான். விஜய் மட்டுமல்ல, இனிமேலும் எந்த ஒரு நாட்டைச்சேர்ந்த அரசியல் பிரமுகரையோ, அல்லது பிரபலத்தையோ அவ்வாறு எதிர்பார்ப்பது தவறு.

இதையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன். வேட்டைக்காரன் படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் விடுவதும் எங்கள் கையில்தான் இருக்கிறது. படத்தைப் பார்க்க வரும்படி எந்த நடிகனோ, தயாரிப்பாளனோ உங்களையும் என்னையும் வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கப்போவதில்லை. வேட்டைக்காரனைப் புறக்கணிக்கும்படி விஜயையும், விஜய் அன்ரனியையும் தாக்கித் துண்டுப்பிரசுரம் அடிக்க உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அந்தளவு உரிமை காங்கிரசில் சேர விஜய்க்கும், இராஜ் வீரரட்னேயுடன் பணியாற்ற விஜய் அன்ரனிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வளவுதான் விஷயமே. மற்றபடி, தயவுசெய்து ஈழவர் பிரச்சினையை இப்படியெல்லாம் சில்லறைத்தனமாகப் பயன்படுத்தாதீர்கள். வலிக்கிறது.

4.
சயந்தன் சமீபத்தில் twitter ல் ஒரு நக்கல் அடித்திருந்தார். ‘நாங்க சிவாஜியைப் புறக்கணிச்சிட்டு இண்டர்நெட்டில இறக்கிப் பாக்கிறனாங்களாகும்' என்று அவர் நக்கலுக்காகவே சொல்லியிருந்தாலும், சுருக்கென்று தைக்கிற உண்மை, ‘எங்கள் புறக்கணிப்பும், ரோசமும் வெறும் வாய்ப்பேச்சோடு மட்டும்தான்' என்பதே.

49 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தம் இருப்பைக் காட்டிக்கொள்ள//

இதற்காகத்தான் சொல்கிறார்களோ என்னமோ..,

Unknown said...

சரியாகச் சொன்னீர்கள்...

நாங்கள் இங்கே இலங்கையில் இராஜின் பாடல்கள் எல்லாம் கேட்கிறோமே?
அப்போ எங்களையும் புறக்கணிக்க வேண்டுமா?

படம் நல்லா இருந்தா பாருங்கோ, இல்லாட்டி போகாதேயுங்கோ....

சும்மா எல்லாத்துக்கும் அரசியல் வேணாம்....

வந்தியத்தேவன் said...

இன்னொரு விடயம் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைச் செய்திகளை இரட்டடித்த சன் குழுமத்தின் படங்களை ஏனோ இவர்கள் புறக்கணிப்பதில்லை. நீங்கள் சொன்னது போல் இராமதாசு, திருமாவளவன் போல் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள இவர்கள் போடும் நாடகம் தான் இது.

ARV Loshan said...

சரியாக சொன்னீர்கள் கிருத்திகன்..
இவங்கள் திருந்தப் போவதில்லை..
வெறித்தனமான ரசிகர்களுக்கும், இந்த சிலரைத் தனமான பிரசாரங்களுக்கும் வித்தியாசமில்லை..

ரசனைக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத விசர் வெங்காயங்கள்..

தர்ஷன் said...

சிறப்பான கருத்துக்கள் கிருத்திகன்
கிட்டத் தட்ட இதையொத்த கருத்துக்களுடன் நானும் ஒரு பதிவிட்டேன். நான் சொல்ல வந்த விடயத்தின் தெளிவின்மையோ ஏதோ ஏராளம் எதிர்ப்புகள் .
ஆனால் மிகுந்த நிதானம் உங்கள் எழுத்துக்களில்

கலையரசன் said...

//இது ஒன்றும் ஈழ மக்கள் சார்பான சர்ச்சை அல்ல. விஜய் ரசிகர்கள், அவர்களின் எதிரிகள் விளையாடுவதற்கு ஈழ மக்களின் அவலத்தைப் பந்தாக உருட்டுகிறார்கள், அவ்வளவுதான். //

5 பாய்ண்ட்ஸ் எல்லாம் வேண்டாம்! இந்த இரண்டு வரி போதும் கீத்!!

siva said...

ஒரு பொருளையோ அல்லது நிறுவனத்தையோ புறக்கணிப்பது தமது கருத்தை வெளிப்படுத்துவதர்க்கான ஒரு ஜனநாயக வெளிப்பாடுதான் .இது ஜனநாயாக நாடுகளில் குறிப்பாக மேற்கு நாடுகளில் பல காலமாக நடை பெற்று வருகிறது.
நிறவெறி ஆட்சி தென்னாபிரிக்காவில் நடந்த போது அதை எதிர்ப்பதற்காக அந்த நாட்டின் பொருள்களையும் அந்த நாட்டு கிரிக்கெட் அணியையும் பல நாட்டு மக்கள் புறக்கணித்தார்கள் ,இங்கிலாந்தின் சன் பத்திரிக்கை லிவெர்பூல் நகர மக்கள் பற்றி கேலியாக எழுதியதற்காக அந்த நகர மக்கள் அந்த பத்திரிக்கை வாங்குவதை நிறுத்தினார்கள் ,பின்பு அந்த பத்திரிக்கை அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டபின்புதான் அதனை திரும்பவும் வாங்கத் தொடங்கினார்கள்.
விஜயும் விஜய் அந்தோனியும் ஏதோ ஈழத்தமிழர்களுக்கு பிடிங்கி எடுக்கபோகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் புறக்கணிப்பதின் மூலம் ஒரு செய்தியை சொல்வதும் வர்த்தக ரீதியில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும்தான் இதன் நோக்கம் ,சாமானியர்கள் எங்களால் செய்ய கூடியதை நாம் செய்கிறோம் .விஜய் காங்கிரசில் சேர்ந்தாலும் சரி அல்லது தமிழர்களைக் கொடுமைப் படுத்தும் கழகம் என்று கட்சி வந்தால் அதில் சேர்ந்தாலும் சரி நீர் சொல்வது மாதிரி அவருக்கு அதில் சேர உரிமை உண்டு ,அதே மாதிரி விஜயின் பல கோடி சம்பளத்திலும் சன் குழுமத்தின் பல்லாயிரம் கோடி லாபத்திலும் ஒரு சில கோடிகளையாவது குறைக்க
எமக்கும் உரிமை உண்டு அத்துடன் விஜய் அன்ட்டன்யின் சிங்கள இசை அமைப்பாளரை எதிர்ப்பது அவர் சிங்களவர் என்ற அடையாளத்துக்காக அல்ல ,அந்த இசை அமைப்பாளர் தமிழரை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தை புகழ்ந்து பாடியவர் என்பதற்காகவும் தமிழரின் மன உணர்வுகளை மதிக்காத இந்த விஜய் ,விஜய் அண்டினி வகையறாக்களுக்கு எமது டொலர்களையும் யூரோக்களையும் பவுண்டுகளையும் ரூபாய்களையும் கொடுத்து வீணாக்க கூடாது என்பதற்குத்தான் ,அதை விட அந்தப் பணத்தை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கலாம் .

Nimal said...

Facebookல இந்த தொல்லை இப்ப பெரும் தொல்லை.

இந்தப் புறக்கணிப்புக்கள் நிச்சயம் அர்த்தமற்றவை என்பதுடன் ஒருவகையில் நகைப்புக்கிடமானவை.

அரைநாள் உண்ணாவிரத நாடகங்களை போலவே இவையும் நாமும் ஏதோ செய்தோம் என்று கூறிக்கொள்ள சிலருக்கு வாய்ப்பு. மற்றப்படி சயந்தன் சொன்னபடி 'புறக்கணிச்சிட்டு இண்டர்நெட்டில இறக்கிப் பாக்கிற' ஆக்கள் தான் பெரும்பாலும்...!

பால்குடி said...

// ‘எங்கள் புறக்கணிப்பும், ரோசமும் வெறும் வாய்ப்பேச்சோடு மட்டும்தான்' என்பதே.

இதை விட உண்மையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

Unknown said...

///இதற்காகத்தான் சொல்கிறார்களோ என்னமோ..,///
அதற்காகத்தான் தல

Unknown said...

///நாங்கள் இங்கே இலங்கையில் இராஜின் பாடல்கள் எல்லாம் கேட்கிறோமே?
அப்போ எங்களையும் புறக்கணிக்க வேண்டுமா?///
கிழிஞ்சுது போ சஸ்பென்ரர். இனி கனககோபியைப் புறக்கணியுங்கள் எண்டு ஆராவது திடங்கப்போறாங்கள்... (சும்மா, பகிடிக்கு)

Unknown said...

///இன்னொரு விடயம் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைச் செய்திகளை இரட்டடித்த சன் குழுமத்தின் படங்களை ஏனோ இவர்கள் புறக்கணிப்பதில்லை. நீங்கள் சொன்னது போல் இராமதாசு, திருமாவளவன் போல் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள இவர்கள் போடும் நாடகம் தான் இது.///
சன் குழுமத்தை எப்படிப் புறக்கணிப்பார்கள்???? குடும்பத்தில குழப்பமெல்லோ வரும்..

Unknown said...

///ரசனைக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத விசர் வெங்காயங்கள்..///
வெங்காயங்கள்.... பெரியார் பாவிக்கிற சொல். உண்மைதான் லோஷன் அண்ணா. எது எதோடையெல்லாம் உணர்வைச் சம்பந்தப் படுத்துகிறார்கள் பாருங்கள்

Unknown said...

///சிறப்பான கருத்துக்கள் கிருத்திகன்
கிட்டத் தட்ட இதையொத்த கருத்துக்களுடன் நானும் ஒரு பதிவிட்டேன். நான் சொல்ல வந்த விடயத்தின் தெளிவின்மையோ ஏதோ ஏராளம் எதிர்ப்புகள் .
ஆனால் மிகுந்த நிதானம் உங்கள் எழுத்துக்களில்///
நானும் வாசித்தேன் தர்ஷன். தெளிவின்மை உங்களிடம் இல்லை என்பதை மட்டும் பதிகிறேன்

Unknown said...

///விஜய் அன்ட்டன்யின் சிங்கள இசை அமைப்பாளரை எதிர்ப்பது அவர் சிங்களவர் என்ற அடையாளத்துக்காக அல்ல ,அந்த இசை அமைப்பாளர் தமிழரை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தை புகழ்ந்து பாடியவர்///
இது சம்பந்தமாக ஆதிரை ஒரு பதிவு போட்டிருக்கிறார். வாசியுங்கள் சிவா. என்னுடைய sadebarல் அவருக்கான இணைப்பு இருக்கிறது. வலைப்பூவின் பெயர் ‘கடலேறி'.

புறக்கணிக்க வேண்டுமானால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் புறக்கணிக்க வேண்டும். ஆகக்குறைந்தது இந்தியாவின் தமிழ் சினிமா industry முழுவதையும் புறக்கணிக்க வேண்டும். அதைவிடுத்து அஜித்தின் படங்களைப் புறக்கணி என்று விஜய் ரசிகர்களும், விஜய் படங்களைப் புறக்கணி என்று அஜித் ரசிகர்களும் வேறு விதமாகச் சண்டை போடாமல், அதற்குள் எங்கள் அவலத்தையும் இணைத்தல் தவறல்லவா சிவா???

Unknown said...

///அரைநாள் உண்ணாவிரத நாடகங்களை போலவே இவையும் நாமும் ஏதோ செய்தோம் என்று கூறிக்கொள்ள சிலருக்கு வாய்ப்பு.///
ஒரு மோசமான மனோநிலைக் கோளாறு இது நிமல்.

Unknown said...

///இதை விட உண்மையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.///
விபரணம் இல்லை பால்குடி. ஒப்புதல் வாக்குமூலம் அது.

ஆதிரை said...

என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது...
"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"

சயந்தன் said...

இந்த விளம்பரத்தில கடைசியில "இல்லைனா சும்மா அதிரப்போகுது" என்று எழுதியிருக்கே..
அதிலையிருந்தே விளங்குதுகிறது.. இதை முன்னடுக்கிற "போராளிக்கு" இருக்கிற அரசியல்..

யாரோ ஒரு சீனிமா ஆர்வக் கோளாறுக் குஞ்சுதான் இதைத் தயாரித்திருக்கோணும்.

Anonymous said...

oru padam oduna vungalakuku porukathey.......... vudaney purakanipu nu vetti velaya arambhichuduvingaley......

செந்தா said...

தெலுங்கானாவுக்கும் நாம் கூறிக்கொண்ட தொப்புள் கொடிக்கும் என்ன சம்பந்தம் ?

Unknown said...

///நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்///
சுடுகிறது ஆதிரை. இருந்தாலும் மறுக்கப்போவதில்லை இந்தக் குற்றச்சாட்டை.

Unknown said...

///இந்த விளம்பரத்தில கடைசியில "இல்லைனா சும்மா அதிரப்போகுது" என்று எழுதியிருக்கே..
அதிலையிருந்தே விளங்குதுகிறது.. இதை முன்னடுக்கிற "போராளிக்கு" இருக்கிற அரசியல்..///

அட... இத நான் கவனிக்கேலை அய்யா.

///யாரோ ஒரு சீனிமா ஆர்வக் கோளாறுக் குஞ்சுதான் இதைத் தயாரித்திருக்கோணும்.///
இஞ்சேரும் சயந்தன்... அதென்ன சீனிமா...

Unknown said...

///oru padam oduna vungalakuku porukathey.......... vudaney purakanipu nu vetti velaya arambhichuduvingaley.....///
ஓடுமா ஓடாதா என்பது பிரச்சினை இல்லை அனானி. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடேலாது சரியோ. அவ்வளவுதான்

Unknown said...

///தெலுங்கானாவுக்கும் நாம் கூறிக்கொண்ட தொப்புள் கொடிக்கும் என்ன சம்பந்தம் ?///
ஒருவர் சாகப் போகிறார் என்ற பதற்றத்திலே புது மாநிலம். கொத்துக்கொத்தாய் செத்தபோது பாராமுகம். அதுதான் சம்பந்தம் செந்தா

செந்தா said...

/////தெலுங்கானாவுக்கும் நாம் கூறிக்கொண்ட தொப்புள் கொடிக்கும் என்ன சம்பந்தம் ?///
ஒருவர் சாகப் போகிறார் என்ற பதற்றத்திலே புது மாநிலம். கொத்துக்கொத்தாய் செத்தபோது பாராமுகம். அதுதான் சம்பந்தம் செந்தா
//


ஆந்திரா என்பது இந்திய மாநிலம் அதை பிரிக்க இந்திய மத்திய அரசுக்கு முடியும். ஆனால் இலங்கை அவ்வாறல்ல.
அத்துடன் கருணாநிதியின் 4 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரசேகர் ராவின் 11 நாள் உண்ணாவிரதத்துடன் எவ்வாறு ஒப்பிடமுடியும்?
நீங்களும் மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்களே? மற்றபடி உங்கள் பதிவு அருமை

Unknown said...

செந்தா
ஈழத்தைப் பிரிக்க முடியாது. ஆனால் அவலங்களைத் தடுத்து நிறுத்த இந்தியாவால் முடிந்திருக்கும் இல்லையா? அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் வேறொரு நாடு. நாங்கள்தான் அவர்களைத் தொப்பூள்கொடி உறவுகளாக நினைத்தோம். இந்தியாவால் தமிழீழத்தைப் பிரித்திருக்க முடியாது. இருந்தாலும் எமது பகுதியின் பெரியண்ணன்களான அவர்கள் உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. காரணம் நாங்கள் நம்பியது போல் அவர்கள் தொப்பூள்கொடி உறவுகள் அல்ல. அதை இந்த ஆந்திரப் பிரிப்பு மூலமாக மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்

ஆதிரை said...

//கருணாநிதியின் 4 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரசேகர் ராவின் 11 நாள் உண்ணாவிரதத்துடன் எவ்வாறு ஒப்பிடமுடியும்?//

கருணாநிதியா... யாரது?

தீயினில் உயிரினைக் கருக்கினார்களே உறவுகள்... நாம் மறக்கவில்லை.

sellamma said...

நண்பரே,,
வேட்டைகாரனை புறக்கணிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,,,
///ரசனைக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத விசர் வெங்காயங்கள்..///
அருமையான விளக்கம் ,,,
ஆனால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,,,
விஜயின் ரசிகனாய் இருப்பதும் அவரின் படங்களை பார்ப்பதும் உங்களின் உரிமை,,,
ஆனால் எதிர்ப்பை காட்டுபவர்களை உங்கள் கருத்துக்கள் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,
அவர்களும் எம்மவர்கள்,, ஆனால் ஒருசிலர் இந்த விடயங்களை வைத்துக்கொண்டு குளிர் காய்கிறார்கள்,,
அவர்கள் களையப்பட வேண்டுமே தவிர தமிழருக்கு சார்பான போராட்டங்கள் உங்களை போன்றோரின் புறக்கணிப்புகளால் கைவிடப்படக்கூடாது,,

Unknown said...

///விஜயின் ரசிகனாய் இருப்பதும் அவரின் படங்களை பார்ப்பதும் உங்களின் உரிமை///
நான் விஜயின் ரசிகன் இல்லை செல்லம்மா. மேலே சயந்தனின் பின்னூட்டத்தைப் படியுங்கள். இந்தப் புறக்கணிப்பின் பின்னால் இருக்கும் ‘அரசியல்' விளங்கும். இந்த எதிர்ப்பே எங்களின் சமுதாயத்தைக் காயப்படுத்துவது. புறக்கணிப்பதென்றால் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் புறக்கணித்து மரண அடி கொடுக்கத் தயாராகவேண்டுமேயல்லாது, ஏகனைப் புறக்கணிப்போம், வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என்றெல்லாம் கிளம்பக்கூடாது. பிறகு விஜய் வந்து ஒரு மன்னிப்புக் கேட்டவுடனே ஓடிப்போய்ப் படம் பார்க்கக்கூடாது.

///தமிழருக்கு சார்பான போராட்டங்கள் உங்களை போன்றோரின் புறக்கணிப்புகளால் கைவிடப்படக்கூடாது,///
இதைத் தமிழ்ருக்குச் சார்பான போராட்டம் என்றும், இது என் போன்றவர்களின் புறக்கணிப்பால் கைவிடப்பட்டுவிடும் என்றும் எப்படி நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை செல்லம்மா. இது எங்களின் அவலத்தைக் கேலிக்கூத்தாக்கும் ஏதோ ஒரு விசிலடிச்சான் குஞ்சின் வேலை. எல்லா விஷயத்திலும் என்னைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்தால் என்ன செய்யமுடியும்? என் மீதான முற்கூட்டிய கண்ணோட்டங்களை அகற்றிவிட்டு மீலவும் இந்தப் பதிவை வாசியுங்கள். நான் வேட்டைக்காரனைப் பார்க்கவோ, விஜய்க்கு ஆதரவளிக்கவோ சொல்லவில்லை. மாறாக எங்கள் வலிகளைக் கேலிக்கூத்தாக்கும் கேவலமான வேலைகளைத் தவிர்க்குமாறு கேட்டிருப்பது புரியும்

Unknown said...

///தீயினில் உயிரினைக் கருக்கினார்களே உறவுகள்... நாம் மறக்கவில்லை///
கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் ஆதிரை

Unknown said...

வனமங்களைக் கொட்டிச்சென்ற அனானிக்கு...

உம்முடைய பின்னூட்டத்தை நான் அழித்துவிட்டேன். என்னைத் திட்டும் போது கிருத்திகன் குமாரசாமி என்கிற தனி மனிதனைத் திட்டவும். என்னுடைய கருத்துக்களுக்கும், என்னுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கும் சம்மந்தமில்லை.

நாளைக்கு உங்கள் அப்பாவுக்கும் ஏடாகூடமான இடங்களில் சத்திரசிகிச்சை நடக்கலாம். அவரையும் அதே அடை மொழியுடன் அழைக்க நீங்கள் தயாரா?

இன்னொன்றையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிப்போக விரும்புகிறேன்:
கள்ள உறுதி எழுதி, மோசடி வழக்காடி என் அப்பா பிழைக்க வெளிக்கிட்டிருந்தால் இன்றைக்கு நாங்கள் கோடீசுவரர்களாய் வாழ்ந்திருப்போம்.

Anonymous said...

மச்சி நீயும் தனிப்பட்ட ஆக்களைப் பற்றி எழதி இருக்கிறாய். ஆசான்களேயே புண்படுத்தியுள்ளாய். What goes around, comes around. Be mindful of what you are really saying. Otherwise we have to do an exclusive on your family matters..SORRRY in advance.

Unknown said...

///மச்சி நீயும் தனிப்பட்ட ஆக்களைப் பற்றி எழதி இருக்கிறாய். ஆசான்களேயே புண்படுத்தியுள்ளாய். What goes around, comes around. Be mindful of what you are really saying. Otherwise we have to do an exclusive on your family matters..SORRRY in advance.///
அதுக்காக நான் எவரையும் இழித்துரைத்துப் பேசவில்லை. எவரது தனிப்பட்ட குடும்ப விஷயங்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டுவரவில்லை. என்னுடைய குடும்ப விஷயங்களையும், பொதுவாழ்வில் இருப்பவர்களையும் விமர்சித்திருக்கிறேன். அதற்கும், ஆதாரமில்லாமல் ஒருவரைத் திட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அனானி நண்பரே. இதுவரைக்கும் நான் எந்த ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் நடந்த விஷயத்தையும் புனைவு கலக்காமல் எழுதவில்லை. (என் குடும்ப விஷயங்களைமட்டும் உண்மையாய் எழுதி நானே என் குடும்பத்தைக் காயப்படுத்தி இருக்கிறேன்.) வேட்டைக்காரன் புறக்கணிப்பின் பின்னுள்ள அரசியலைச் சொன்ன காரணத்துக்காக நீர் சொன்ன வசவில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நான் அவ்வகையில் யாரையாவது திட்டியிருக்கிறேனா? பிறகெப்பெடி அனானி நீங்கள் அவ்வாறு திட்டலாம்?

இதுவரைக்கும் என் குடும்பத்துக்கு வெளியே எழுதிய ஒரே அனுபவப் புனைவு ஒரு நண்பனைக் காயப்படுத்திய காரணத்தால் அதை நீக்கிவிட்டேன். அதன்பின் குடும்பச் சிக்கல்கள் பற்றி எழுதும்போது வெளிக்குடும்பங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. நண்பர்கள் பற்றி எழுதுவதைக்கூட நிறுத்திவிட்டேன். இப்படி இருக்கையில் சும்மா வந்து என் அப்பாவை நீர் திட்டிவிட்டுப் போவதில் என்ன நியாயம் இருக்கிறது. நீர் பாவித்த வசைச் சொற்களில் எவ்வளவு கேவலமானவை? என் குடும்பத்து விஷயங்களின் exclusive ஐ, நீங்கள் உண்மையானவராக இருந்தால் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டியே செய்யலாமே????

இன்னொன்று, நீங்கள் யாரென்று கண்டுபிடித்தாயிற்று.

sellamma said...

நிச்சயமாக நண்பரே உங்களின் பதிவை நான் குறை கூறவில்லை,,

//////எதிர்ப்பை காட்டுபவர்களை உங்கள் கருத்துக்கள் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,
அவர்களும் எம்மவர்கள்,, ஆனால் ஒருசிலர் இந்த விடயங்களை வைத்துக்கொண்டு குளிர் காய்கிறார்கள்,,
அவர்கள் களையப்பட வேண்டுமே தவிர தமிழருக்கு சார்பான போராட்டங்கள் உங்களை போன்றோரின் புறக்கணிப்புகளால் கைவிடப்படக்கூடாது,////

குளிர் காய்பவர்களை நான் சாடிஉள்ளேன்,, மற்றும் நியாயமான போராட்டங்களுக்கு உங்கள் ஆதரவையும் நாடி உள்ளேனே தவிர இந்த புறக்கணிப்பை பற்றி கருத்துக்கூரக்கூட இல்லை,,

/////நான் வேட்டைக்காரனைப் பார்க்கவோ, விஜய்க்கு ஆதரவளிக்கவோ சொல்லவில்லை. மாறாக எங்கள் வலிகளைக் கேலிக்கூத்தாக்கும் கேவலமான வேலைகளைத் தவிர்க்குமாறு கேட்டிருப்பது புரியும்////////
உங்களின் நடுநிலையான இந்த கருத்துக்கு தலை வணங்குகிறேன்,,

Unknown said...

நன்றி செல்லம்மா... உங்கள் புரிந்துணர்வுக்கும் நியாயமான போராட்டங்கள் தேவை என்கிற ஆதங்கத்துக்கும். முடிந்தால் சயந்தனின் பதிவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இன்னும் விபரமாக அலசியிருக்கிறார். http://sayanthan.com/?p=330

Mohan said...

Keith,
I liked these lines: "இதையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன். வேட்டைக்காரன் படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் விடுவதும் எங்கள் கையில்தான் இருக்கிறது.Do you remember, I told you the same for your post regarding Sripriya? To my knowledge only the Tamil (and Indian) people have the habit of taking movie actor/actress seriously. In this global economy Gandhian or M.L.King style goods/services boycott will not work.

Unknown said...

///Do you remember, I told you the same for your post regarding Sripriya?///
Dear Mohan,
That was a great piece of advise which I've been trying to follow whole hearted.

///In this global economy Gandhian or M.L.King style goods/services boycott will not work.///
May be.... but it still has some impact. But we are too spoiled to do so

Anonymous said...

//இன்னொன்று, நீங்கள் யாரென்று கண்டுபிடித்தாயிற்று.//

நீங்க IP Addressஜ Trace பண்ணிக் கணடு பிடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :D எல்லாரும் மாப்பிள்ளைக்கு ஒரு 'ஓ' போடுங்க. இனியாவது போதித்த வாத்திமாரை 'விசரன், பைத்தியக்காரன்' என்று திட்டுவதை நிப்பாட்டினா சரி?!

Harry, Italy said...

நீ என்ன பெரிய பருப்பா?!

Mathu, Ukraine said...

டேய்! அவனா இவன். வைக்கிறம்டி ஆப்பு.

French Tamilan said...

""'தமிழீழம் காண' புதிய வழி இதுதான். ‘வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்'.""

அதை நாட்டுக்காகப் பங்களிப்பு செய்தவன் சொல்லலாம். நீ சொல்லக்கூடாது.

Giri, Paris said...

Votre commentaire a été enregistré. Il sera visible une fois que le propriétaire du blog l’aura

SEOUL, KYONGGI-DO said...

Tracing IP 99.245.127.115 via blog http://kiruthikan.blogspot.com/

Unknown said...

///நீங்க IP Addressஜ Trace பண்ணிக் கணடு பிடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :D எல்லாரும் மாப்பிள்ளைக்கு ஒரு 'ஓ' போடுங்க. இனியாவது போதித்த வாத்திமாரை 'விசரன், பைத்தியக்காரன்' என்று திட்டுவதை நிப்பாட்டினா சரி?!///
நீங்கள் பெரிய பருப்புத்தான் ஐயா. அது சரி நான் எங்கே போதித்த வாத்திமாரை விசரன் பைத்தியகாரன் என்று திட்டினேன்????? சும்மா வாய்க்கு வந்ததைக் கதைக்கிறதா??

Unknown said...

///அதை நாட்டுக்காகப் பங்களிப்பு செய்தவன் சொல்லலாம். நீ சொல்லக்கூடாது.///
பார்றா.... நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர் அட்வைஸ் பண்ணுறார்

Unknown said...

///டேய்! அவனா இவன். வைக்கிறம்டி ஆப்பு.///
வை வை.... பிரச்சினையில்லை

sellamma said...

நண்பர்களே,
தனிப்பட்ட கோபங்களை காட்டும் இடம் இதுவல்ல,,
உங்களின் தனிப்பட்ட கொபங்களுக்குள் ஏன் தமிழீழத்தை இழுத்து உங்களை நீங்களே கொச்சை படுத்துகிறீர்கள்?

சொல்கிறவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்,,
நீங்கள் உங்கள் வழியில் போங்கள்,,
உங்கள் கருத்துக்கள் நியாயமானதாக இருக்கும் வரை எம் ஆதரவு உங்களுக்கு உண்டு,,

Mohan said...

Keith,

Happy to hear that you took my advice. Just want to clarify little bit more. I am not against non-violent tactics of Gandhi/M.L.King. In this global economy the right way to win against a commercial organization is to compete with your best goods/service. 1) I will give two examples: When Apple went down due to Windows success, they came back successfully with other hand-held devices (and softwares). Even though Windows Mobile CE OS came before Apple OS and Android OS, but in popularity it is at the last. 2) For the past two years all the (Indian) Tamil movie names are in Tamil, you cannot see names like JEANS, RUN, FRIENDS etc. Do you know why? All the producers believe that the profit provided by the Tax Free, is better than luck provided by the English Title superstition.

Why don't people unite and do some better entertainment stuff (movies, TV, Live Concert) to compete with the movies which they don't like.