Thursday 28 May 2009

ஜெயிப்பது நிச்சயம்- சொல்கிறார் சச்சின்


5ம் திகதி தொடங்குகிறது ICC World T20. சச்சினும் அது பற்றி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இந்தக் கோப்பையும் இந்தியாவுக்கே என்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
  • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தில் விளையாடுவதற்கு ஏற்றவர்கள். இசாந்த் சர்மா, ஜாகீர் கான், ஆர்.பி. சிங், இர்பான் பதான் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரைத்தெரிவு செய்திருப்பது இந்தியத் தேர்வாளர்களின் நல்லதோர் தீர்மானம் ஆகும். இவர்கள் அனைவரும் பந்து வீசும் வகையில் நிறைய variety இருக்கிறது. அவர்களுக்கான நாளில் உலகின் எந்த அணியின் துடுப்பாட்ட வரிசையையும் நாசம் செய்யக்கூடியவர்கள்.
  • IPL போட்டிகளில் கைவரிசை காட்டத்தவறிய சேவாக்கும் காம்பிரும் உடல் அசதியை தவிர்த்தால் சோபிக்க முடியும் எனவும், சேவாக் மிகவிரைவில் நல்ல ஃபார்முக்கு வருவார் எனவும் எதிர்வு கூறிய சச்சின். ஃபார்ம் ஏற்ற இறக்கங்கள் ஒரு கிரிக்கெட்டருக்கு சகஜம் என்றும் கூறினார்.
  • மேலும் இந்திய அணியின் ‘அணிச் சமநிலை' (Team Balance) அற்புதமாயிருப்பதாயும், அணிச் சமநிலையைப் பொறுத்தவர இந்தியாவே சிறந்தது எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என்கிறார் ‘லிட்டில் மாஸ்டர்'. மேலும் இந்த அணிச்சமநிலையை தான் குலைக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். (விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை...அட அவருக்குதான் மீசையே இல்லையே)
சச்சினிடம் நான் வேண்டி விரும்பிக்கேட்க விரும்பும் சில உதவிகளின் தமிழாக்கங்கள் இதோ:
  1. சச்சின், ஒரு நாள் போட்டிகளில் நீங்கள் சாதிப்பதற்கென்று ஏதாவது இருக்கிறதா? தயவு செய்து ஒதுங்கிக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தலாமே? (பாண்டிங் டெஸ்ட் சாதனைகளை வைத்திருப்பது கிரிக்கெட்டுக்கே அவமானம்)
  2. தயவு செய்து லலித் மோடி நடத்தும் விளம்பரக் களியாட்டங்களை தவிருங்கள். Twenty Twenty இந்தியாவுக்காக ஆடினால் சந்தோசம். மும்பை இண்டியன்ஸுக்காக வேண்டாமே!! உங்களுக்கு T20 வேண்டாமென்பேன். இருக்கிற பெயரை ரிப்பேராக்காதீர்கள்.
  3. தயவுசெய்து எந்த அணிக்கும் தலமையேற்காதீர்கள். மும்பை இண்டியன்ஸ் கேப்டனாக நீங்கள் ஆடிய கூத்துக்கள் புச்சானன் மற்றும் நைட் ரைடர்ஸ் இல்லையென்றால் இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடியாகியிருக்க வாய்ப்புகள் உண்டு. வந்தோமா, 'பேட்'டை எடுத்தோமா, பவுண்டரி அடித்தோமா என்று எங்களை மகிழ்ச்சிப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி ‘கேப்டன்' என்ற பெயரில் காமடி பண்ண வேண்டுமா சச்சின்?
  4. கடைசி வேண்டுகோள்: தயவுசெய்து உங்கள் கருத்துக் கந்தசாமி வேலையை விட்டுவிடுங்கள். இந்திய தேசத்தின் செல்வமாக, தலைமுறைகள் கடந்த ஆதர்ச நாயகனாக, உங்கள் நாட்டில் மட்டுமல்ல, பக்கத்து நாட்டிலும், ஏன் உலகம் பூராவும் உள்ள பலரது காயங்களுக்கு மருந்தாக (96ல் இந்தியா செமிஃபைனலில் இலங்கையிடம் தோற்ற போது ஏதோ இழவு விழுந்தது போல திரிந்த பாலகுமார் அண்ணா ஞாபகம் வருகிறார்) இருந்த நீங்கள் இப்போது ஒரு கிண்டல் மையமாக (Laughing Stock க்கு தமிழ் தெரியவில்லை) மாறி வருவது வேதனை.
நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கியதே சச்சின் 1996 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே சதம் அடித்ததிலிருந்துதான். அப்போ அவர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் கிடைத்த கரகோசம் தான் என்னை கிரிக்கெட் நோக்கி திருப்பியது. (பின் கிரிக்கெட் பைத்தியமாகி வாழ்வைத் தொலைத்த கதை வேறு). சச்சினை விமர்சித்த ஒரு நண்பனை அடித்துமிருக்கிறேன். அப்படி ஒரு ‘கிரிக்கெட் பைத்தியம்' நான். அதனால் தானோ என்னவோ சச்சினை ஒரு காமெடியனாகப் பார்க்க முடியவில்லை. (இப்போதெல்லாம் அவர் அதுதான் செய்கிறார் என்பது வேறு விடயம்). அந்த ஆதங்கம் தான் இந்தப் பதிவு.

பி.கு: சச்சின் இந்திய T20 அணிபற்றிச்சொன்ன கருத்துக்களைப் படிக்க இங்கே அழுத்தவும்.

8 comments:

வால்பையன் said...

//தயவுசெய்து உங்கள் கருத்துக் கந்தசாமி வேலையை விட்டுவிடுங்கள்.//

இந்த சொல் ஒரு பூமரங்!
தெரியுமுல்ல!

Unknown said...

ஆகா...வந்துட்டான்யா...நிம்மதியா ஒரு கருத்து சொல்ல முடியல..@வால்பையன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டுவிட்டேன் தல..,

Unknown said...

நன்றி சுரேஷ்.... அது சரி..யாரந்த தல?

நிலாரசிகன் said...

எல்லாம் சரிதான் நண்பரே...உங்கள் ஆதங்கமும் புரிகிறது...ஆனாலும் என்போன்ற அறிவிலிகளெல்லாம் கிரிக்கெட் விளையாட்டை புரிந்துகொண்டதே சச்சினின் விளையாட்டை பார்க்கத்தான்.

92ல் சிட்னி போட்டியை எப்படி மறக்க முடியும்? "தல" ஒரு நாள் போட்டிகளில் இன்னும் 40 சதம் அடிக்கட்டுமே :)

Unknown said...

நிலாரசிகன்...
நீங்கள் கொஞ்சம் பொறுங்கள். சச்சின் என் காதலன் என்ற ரேஞ்சில் என் பதிவுகள் வரும்... இப்போதெல்லாம் சச்சினைப்பற்றி வரும் விமர்சனங்களைத் தாங்காமல் தான் சச்சினைக் கெஞ்சுகிறேன்...ஓய்வெடுங்கள் சச்சின்

priyamudanprabu said...

(பின் கிரிக்கெட் பைத்தியமாகி வாழ்வைத் தொலைத்த கதை வேறு).
/////


wht u loss????
every body say this ...............

Unknown said...

பிரபு...
சிறிலங்காவில் 13ம் வகுப்பு பொதுத் தேர்வுதான் எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். தேர்வு சமயத்தில் படித்ததை விட கிரிக்கட் ஆடியதும், பெற்றோரில்லா நண்பன் வீட்டில் கிரிக்கட் பார்த்ததும் தான் அதிகம். இழந்தது பற்றிச் சொல்ல ஒரு பின்னூட்டம் என்ன, ஒரு பதிவே போதாது. (இன்னமும் நான் கிரிக்கட் பைத்தியம் தான்)