ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
அரசியல்-பிறந்தகம்
வடக்குக் கிழக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட 150,000 சிங்களவர்களை மீளவும் அந்தப் பகுதியில் குடியேற்ற வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார். அண்மையில் அவரது நூல் ஒன்றை வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறபோதே அவர் இந்த கருத்தை அல்லது புனைவை வெளியிட்டிருக்கிறார். முட்கம்பி வேலிகளின் பின் அடைத்து வைக்கப் பட்டிருக்கிம் அந்த மண்ணின் குடிகளுக்கு சரியான வழி சொல்லி முடியமுன்னர் இந்தக் கதையெல்லாம் எதற்கு. இவ்வாறு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைவிட, வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படும் என்றே சொல்லிவிடலாம். இதே வேளை, முகாம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் விடுவிக்கப்படுவதும், சில பேர் மர்மமாகக் காணாமல்போவதும் நடந்துகொண்டிருக்கிறது.
இடம்பெயர்ந்து அகதிமுகாம்களுக்குள் இருக்கும் 58,000 பேரைப் பதினைந்து நாளைக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு வந்து சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் பேரிலேயே கருணாநிதி மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீளக் குடியமர்த்திவிட்டுப் போகட்டும், எதற்காக இப்படி ஒரு நாடகத்தைக் கருணாநிதி தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.
இடம்பெயர்ந்து அகதிமுகாம்களுக்குள் இருக்கும் 58,000 பேரைப் பதினைந்து நாளைக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு வந்து சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் பேரிலேயே கருணாநிதி மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீளக் குடியமர்த்திவிட்டுப் போகட்டும், எதற்காக இப்படி ஒரு நாடகத்தைக் கருணாநிதி தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.

அரசியல்-உலகம்
காஷ்மீரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரின் பையில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துத் துகள்கள் காணப்பட்டதால் இந்தியாவின் கர்னாடக மாநிலம் பெங்களூருவில் தீபாவளியன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சி.கே. நாயுடு தொடரில் பங்கேற்கவென பெங்களூரு வந்த ஜம்மு கஷ்மீர் 22 வயதுக்கு உட்பட்டோர் அணிவீரரான பர்வேஸ் ரசோல் என்பவரின் பையிலேயே இப்படியான துகள்கள் காணப்பட்டதாகவும், மேற்படி வீரரைக் காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்த போது போதிய ஆதாரங்கள் கிட்டாததால் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். சாம்பியன் லீக் போட்டிகள் நடக்கும் நகரங்களின் பெங்களூருவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ் வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். Gallon Group என்கிற நிறுவனத்தின் நிறுவுனரும் பெரும் செல்வந்தருமான இவர், insider trading எனப்படும் வர்த்தக உலகில் சர்வசாதாரணமாக இருக்கும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். பிடிபடும்வரை எல்லோரும் நல்லவர் என்ற ரீதியில் பல வர்த்தகர்கள், பங்குச்சந்தைத் தரகர்கள் எனப் பலர் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும், இருப்பினும் ஆதாரங்களோடு பிடிப்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இதே பிரச்சினையில் சிக்கிய மிகப் பெரும் பிரபலம் மார்த்தா ஸ்ரூவர்ட்.

விளையாட்டு
ஐ.பி.எல் சாம்பியன் லீக் போட்டிகள் அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறன. விளையாடிய மூன்று இந்திய அணிகளும் மண்ணைக் கவ்வ, அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளும், தென்னாபிரிக்காவின் கேப் கோப்ராஸ் அணியும், ட்ரினிடாட் & ரொபாகோ அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. அதிலும் டரன் கங்கா தலைமையில் ஆடும் ட்ரினிடாட் & ரொபாகோ அணி கோப்பையை வென்றால் ஆச்சரியம் ஏதுமில்லை. மேற்கிந்திய அணிகளிடம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர்களையும் என்கடன் மட்டையைச் சுற்றுவதே என்று ஆடும் துடுப்பாட்ட வீரர்களும், நல்ல அணித்தலைவரும் அணியின் பலம்.

சினிமா

அச்சச்சோ............
இந்தக் காட்சியைப் பாருங்கள். ஒரு குழந்தை Stroller உடன் சேர்ந்து ஒரு புகைவண்டிக்குள் விழுந்து, 131 அடி இழுத்துச் செல்லப்பட்டு சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் தப்பியிருக்கிறது. அவுஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த இந்தச் சம்பவத்தில் குழந்தை தப்பினாலும், குழந்தையின் தாய் தீவிர மன அழுத்தத்துக்கு உட்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படிக் குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போவதைவிட எங்களூர் போல் மார்போடு அணைத்து அள்ளிச்செல்லலாமே? பிள்ளைக்கும் பெற்றவர்களுக்கும் ஒரு பிணைப்பாவது இருக்கும். அதைவிடுத்து தள்ளுவண்டில்களில் குழந்தைகளை ஏதோ குப்பைபோல் வைத்து.... அடப்போங்கடா
2 comments:
/எதற்காக இப்படி ஒரு நாடகத்தைக் கருணாநிதி தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை./
மேலதிகமாக பிணைப்பணம் கொடுக்கத்தான் நாடகம். ஒரு அரசாங்கக் குழுவின் பரிந்துரைகளே ஏற்கப்படாத நாட்டில், ஒரு கட்சிக் குழுவின் அரசு அங்கீகாரமற்ற ஒரு பயணத்தின் பரிந்துரை(?) ஏற்கப்பட்டு அடுத்த 500 கோடிக்கு ப்ளீஸ் கேளேன்னு சொல்லாமல் சொல்லும் நாடகத்தின் கதாபாத்திரங்கள். சாவலாம் போல வருது கிருத்திகன்.
நாங்கள் சாக முன்னம் அந்தக் கிழம் சாகுதில்லையே பாலா... அதுக்குப் பாராட்டுத் தெரிவித்து தென்சென்னையில் அடிக்கப்பட்ட அந்தப் போஸ்டர் பார்த்தீர்களா பாலா???? இளிச்சவாயன் பட்டம் கட்டுகிறார்கள். (போஸ்டர் இங்கே இருக்கிறது http://kadaleri.blogspot.com/2009/10/blog-post_19.html)
Post a Comment