ஆனந்த விகடனில் வெளியான 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியான வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்சின் தொகுப்பு இது. 'A' ஜோக்ஸ் பிடிக்காதவங்க இப்பவே தெறிச்சு ஓடிடுங்க.
சின்னக்கண்ணுக்கும் அவன் மனைவி பொன்னுக்கண்ணுக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பிதழ் வந்தது. வித்தியாசமான மாறு வேடத்தில்தான் அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருந்தார்கள். பார்ட்டிக்கு கிளம்பும் தினத்தன்று பொன்னு கண்ணுக்கு தலைவலி மண்டையை பிளக்க... 'நான் வரலை... நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க' என்று அனுப்பி வைத்தாள். சின்னகண்ணு குடுகுடுப்பைக்காரன் வேஷத்துக்கான மாறுவேஷ ட்ரெஸ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போன கொஞ்ச நேரத்தில் பொன்னுக்கண்ணுக்கு தலைவலி போய்விட... இவளும் தான் வாங்கிவைத்த மாறுவேஷ ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
பார்ட்டிக்குப் போனபோது குடுகுடுப்பை ட்ரெஸ்ஸோடு தன் புருஷன் வேறு பல பெண்களோடு ஜாலியாக ஆடிப்பாடுவதும், சான்ஸ் கிடைத்தால் முத்தா கொடுப்பதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவன் எந்த ரேஞ்சுக்குப் போகக் கூடியவன் என்று ஆழம் பார்க்க இவளும் அருகே போனாள். மாறு வேஷத்தில் இருப்பது யார் என்றே தெரியாமால் அவனும் இறுக்கி அணைத்தான். புருஷன் தானே என்ற தைரியத்தில் இவளும் சும்மா இருக்க... அவன் இவள் காதில் குனிந்து ஏதோ கிசுகிசுக்க... இவளும் 'எந்தளவுக்கு நம்ம புருஷன் மோசமானவன்' என்று தெரிந்துகொள்ள முடிவெடுத்து அவனோடு சேர்ந்து பார்ட்டி பங்களாவுக்கு வெளியே இருட்டுப் புல்தரைக்குப் போனாள்.
எல்லாமே ஆகிப் போச்சு அங்கே. அப்பவும் தன் மாறுவேஷத்தைக் கலைக்காமல், யாரென்றும் சொல்லாமல் குடுகுடுவென வீட்டுக்குத் திரும்பி வந்தாள் பொன்னுக்கண்ணு. புருஷனின் சபல புத்திக்கு சூடு வைப்பதற்காகக் காத்திருந்தாள். கோபத்தின் உச்சியில் அவள் காத்திருக்க சின்னக்கண்ணுவும் திரும்பி வந்தான்.
‘எப்படிக் கழிஞ்சிச்சு இந்த ராத்திரி?' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில்! நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன்!'
நன்றி: ஆனந்த விகடன்
வாயகரா தாத்தா இத்துடன் விடை பெறுகிறார்
நன்றி: ஆனந்த விகடன்
வாயகரா தாத்தா இத்துடன் விடை பெறுகிறார்
5 comments:
அடப் பாவிங்களா.
வானம்பாடிகள் சொன்னது
///அடப் பாவிங்களா.///
ஏன் பாலா.. ஏன்? அடப்பாவிங்களா. க்குப் பக்கத்தில ஒரு புள்ளிய விட்டுடீங்க..
வாங்க வாங்க!
வந்து கலக்குங்க லோகு!
அது மாறி வந்த பின்னூட்டம் தலைவா!
உங்களுக்கு போடவிருந்த பின்னூட்டம்
அதுகுள்ள முடிஞ்சிருச்சா!
முடிந்தால் தொடரவும்!
அதானே பார்த்தேன் வால்பையன்.. கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல.. இதுக்கு என்ன பதில் போடறதுன்னு குழம்பியிருந்தேன்
Post a Comment