வந்தி அண்ணா சமீபத்தில் எழுதிய மீண்டும் துளிர்க்கும் விஷச் செடி- பகிடிவதை என்ற பதிவில் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கும் எனக்கும் இடையில் நடந்த ஒரு சின்னச் சண்டை பற்றி நான் பதிவிடப் போவதாக ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். மொறட்டுவைப் பல்கலைக் கழக நண்பர்கள் பலரும் இந்தப் பதிவுகளைப் படிப்பீர்கள், எனக்கும் ஒரு தெளிவான கோணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். முக்கியமாகக் கவனியுங்கள், மொறட்டுவைச் சூழல் தெரியாத எனக்கும், மொறட்டுவை மாணவன் ஒருவனுக்கும் இடையில் நடந்த ஒரு சின்னக் கருத்து யுத்தத்தில் நான் விளங்கிக் கொண்ட பக்கங்களைத் தருகிறேன். விளங்காத பக்கங்களுக்கு விளக்கம் தருவதும் தராமல் போவதும், பதிவுலகில் இருக்கும் மொறட்டுவை மாணவர்களின் கையில்.
நான் குறிப்பிடும் அந்த மாணவன் என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது இளையவன். எங்கள் பாடசாலையில் படித்தவன். பாடசாலை நாட்களில் நல்ல பொடியன். நன்றாகப் படித்தவன். ஃபேஸ் புக்கில், இவன்தான் அவன் என்று தெரியாமல் அவனை நான் கொஞ்சக் காலம் இணைத்திருந்தேன். அங்கிருந்து அவனது இணையம் ஒன்றுக்கு இணைப்புக் கிடைத்தது. அதிர்ந்தேன். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான ஒருவனது மனதில் என்ன மாதிரியான அழுக்குகள் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தான், திருகோணமலையான், மட்டக்களப்பான், வன்னியான் என்று கேவலமாகப் பிரிந்து போயிருக்கும் எமது சமூக அமைப்பில், இவன் வலிகாமத்தான்- வடமராட்சியான் என்று பிரித்து எழுதியிருந்தான். (நண்பர் ஒருவரும் இதைப் பற்றியா பதிவிடுகிறாய் என்று கேட்டு விளக்கமும் சொல்லியிருந்தார், வடமராட்சியைப் பிரிப்பன் என்பது இவனது மகுட வாசகமாம்). சரி சின்னப்பிள்ளை, ஏதோ லூசுத்தனமாச் செய்யிறான் என்றுவிட்டு பேசாமல் இருக்க, மறுபடி சுனாமியாய்ப் பொங்கினான் பொடியன்.
ஃபேஸ் புக்கில் இவனது ஸ்ரேற்றஸ்கள் அதிர்ச்சிகரமாய் இருந்தன. அவற்றில் கேவலமும், ஆபாசமும் குறைந்த ஒன்றைத் தருகிறேன். ‘முலை மசாஜ் செய்து இன்பம் காண வேணும் என்றால் மூடிய அறைகளுக்குள் செய்து கொள்ளுங்களேன். எதற்காக விரிவுரை செய்யும்போது உள்ளாடையைத் திருத்துவது போல எங்களுக்கு முன்னாலேயே மசாஜ் செய்கிறீர்கள்' இதுதான் கொஞ்சமாவது ஆபாசம் குறைந்த ஒன்று. ஏற்கனவே பாழாய்ப்போன பிரதேசவாதம் பேசுகிற பிள்ளை திடீரென்று வயதில் மூத்த விரிவுரையாளர்களைத் திட்டுகிறதே என்றுவிட்டு, ‘தம்பி, உன் மனம் விகாரப்பட்டுப் போய் விட்டது. ஆடை அசௌகரியமாக இருந்தால் சரி செய்வது இயல்பான ஒன்று. உன் போன்றவர்களுடன் தனியாக அம்மாவோ, சகோதரிகளோ இருந்தால்கூட ஆபத்து போலிருக்கிறது. நல்ல மன நல மருத்துவரிடம் ஆலோசனை கேள்' என்று ஒரு சின்ன மடல் அனுப்பினேன்.
அங்கிருந்து ஏராளமான ஆங்கிலக் கெட்டவார்த்தைகளால் அர்ச்சித்து ஒரு மடல் திரும்பி வந்தது. அதாகப்பட்டது, அவன் பெண்ணினத்தை அவமானப் படுத்தவில்லையாம். அந்த விரிவுரையாளர் சிங்களப் பெண்ணாம். சிங்கள விரிவுரையாளர்கள் அனைவரும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடந்து கொள்வதால் தான் அவ்வாறு அவர்களைத் திட்டுகிறேனாம். அப்படி இப்படி என்று ஒரு பெரிய கடிதம். அதற்கு முன் பதிவுகள் சிலவற்றில் மொறட்டுவையில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை அறிந்திருந்தேன். அந்தச் சிக்கல்களுக்குரிய எதிர்ப்பை நேர்த்தியாக வலிகுன்றாமல் பதிவேற்றி இருந்தார்கள். அதைவிட, சில பல்கலைக்கழக கலை கலாசாரக் குழுமங்களில் என்னுடைய நண்பர்கள் மற்றும் அண்ணன்கள் இருந்தார்கள். அவர்களும் இப்படியான நிகழ்வுகளுக்கான எதிர்ப்புகளை வலி குன்றாமல் காட்டுவதில் வல்லவர்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் பெயரையும் ஒரு அண்ணனின் பெயரையும் சொல்லி, 'எதிர்ப்பை நாகரிகமாகவும், வலி குன்றாமலும் எப்படி வெளிக்காட்டலாம் என்று அவர்களிடம் கற்றுக்கொள் தம்பி' என்று ஒரு சின்னத் தகவல் அனுப்பினேன்.
அட, வேதாளம் இப்போது இன்னொரு முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. 'அவர்கள் எல்லாம் முன்னுதாரணமான சீனியர்களா? என்னுடைய காதலியை சிலர் கேவலமான கேள்விகள் கேட்கும்போது பார்த்துக்கொண்டு நின்றவர்கள்தானே. ஒருவன் என் காதலியைக் கூப்பிட்டு, 'உனக்குக் காதலன் இருக்கிறானா?', 'அவனோடு _த்திருக்கிறாயா?' ‘என்னோடும் _ப்பாயா?' என்றெல்லாம் கேட்டபோது பார்த்துக்கொண்டு இருந்தவர்கள்தானே அவர்கள். அவளை அவர்கள் கேட்ட கேள்விகளால் உடைந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டாள். நான்தான் சமாதானம் செய்தேன். அத்துடன் அவளைக் கேள்வி கேட்டவர்கள் காசு கொடுத்து சுகம் காணும் அயோக்கியர்கள். அவர்கள் எயிட்ஸ் வந்துதான் சாவார்கள். இவர்கள் சொன்னதைச் செய்யாத காரணத்தால் என்னை தமிழ் மாணவர் நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கி விட்டார்கள்' என்பதாக படுபயங்கரமாகத் திட்டினான். (இது கொஞ்சம் நாகரிகப்படுத்தி நான் வெளியிடுவது என்பதை நினைவில் கொள்க). எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று.
அவனுக்குக் கடைசியாக நான் ஒரு மடல் அனுப்பினேன். ‘தம்பி, முதலில் பிரதேச வாதம் பேசினாய். பின் ஆடையைச் சரி செய்யும் பெண்ணைக் கொச்சையாய் திட்டினாய். அதற்கு நான் கண்டனம் தெரிவிக்க சிங்களர்கள் அடக்குகிறார்கள் என்றாய். அந்த அடக்கு முறைக்குரிய எதிர்ப்பை உன் பல்கலைக்கழக அண்ணன்கள் போல் நாகரிகமாகக் காட்டு என்றால் அவர்களும் சரியில்லை என்று திட்டுகிறாய். அதாவது, உன்னைத் தவிர எதையும் உனக்குப் பிடிக்கவில்லை. கொஞ்ச நாளில் உன்னை உனக்குப் பிடிக்காமல் போய்விடலாம். ஆகவே அதற்கு முன் ஒரு மன நல மருத்துவரை அணுகு' என்ற தொனிப்பட என் கடைசி மடலை அனுப்பிவிட்டு உடனடியாக அவனை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டேன்.
இந்தப் பிரச்சினையில் இன்றும் என்னைக் குடையும் கேள்விகள் இவைதான்:

- அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறான். பிரதேசவாதம் செய்பவன் என்றால், ஏன் தமிழ்-சிங்களப் பிரச்சினை பற்றிப் பேச விளைகிறான். தன் காதலியை ஒருத்தன் பழித்ததுக்காக கோபப்படுபவனால், தானும் இன்னொரு பெண்ணை பாலியல் ரீதியான கொச்சை வார்த்தைகளால் தூசிப்பது பிழை என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போனது எதனால்?
- நன்றாகப் படித்த, நன்றாகப் பழகிய ஒருவனின் மனதில் இத்தகைய கோணலை உருவாக்கியது யார்?அவனாகவே அதிகம் கற்பனை பண்ணிக்கொண்டானா? இல்லை எங்களது உயர் சமூகம் அவனை அப்படிக் கற்பனை பண்ணத் தூண்டியதா?
- அவனை ஒரு வயது மட்டும் பார்த்து வந்திருக்கிறேன். அவன் எங்கே பிறழ்ந்தான்? உயர்தர வகுப்பிலா? ஆனால் இப்படிப் பிறழந்தவன் சரியாக உயர்தரம் எழுதியிருக்க முடியுமா? பல்கலைக் கழகத்திலா? அவனது காதலிக்கு நிகழ்த்தப்பட்ட அந்த வன் கொடுமையாலா?
நான் மொறட்டுவை நண்பர்களைக் கேட்க விரும்பும் கேள்விகள்
- உண்மையிலேயே மொறட்டுவையில் இப்படியான பகிடிவதைக் கொடுமைகள் இருக்கின்றனவா? ஆண்களைப் பெண்களிடம் பூக்கொடுக்கச் சொன்னார்கள். பின்னர் ஆண்களைத் தூசணம் பேச வைத்தார்கள். அந்தப் பரிணாம வளர்ச்சியில் பெண்களிடம் கேவலமாகப் பேசுவதுவரை வந்துவிட்டார்களா?
- கல்வி பயிலும் இடங்களில் பிரதேசவாதம் எதற்காக? இப்படியும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களா எம்மவர்கள்? (இதுக்குள்ள நாடுகடந்த அரசாங்கம் கேக்குது இவையளுக்கு)
- நான் கேள்விப்பட்டமட்டில் மொறட்டுவை கொஞ்சம் கண்டிப்பான பல்கலைக் கழகமாமே. ஆனால் புல்லட் கோபமாக வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றால் நிச்சயமாக அவர் மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும் அந்தக் ‘கண்டிப்பு' மாயத் தோற்றம்தானா?
- சீனியர்கள் தாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் என்று நடந்து கொள்கிறார்களா? நான் கேள்விப்பட்ட வரையில், 04 பட்ச்சை, 03 பட்ச்தான் ராகிங் செய்யலாம். அதுதான் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் எங்கட பட்ச் பொடியளைத் தேடித்திரிஞ்ச கம்பஸ் முடிச்சாக்களையே நான் கண்டிருக்கிறன். இது வக்கிரமில்லையா?
என்னுடைய தனிப்பட்ட நண்பர்கள் இருவருக்கு (ஒருவர் என் வகுப்பு, மற்றவர் அண்ணன்) ஒரு கேள்வி. நான் பதிவில் சொன்ன மாணவனை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அவனுடன் உங்களில் யாராவது பேசிப் பார்க்க முயன்றீர்களா? (முயன்றிருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை). அவனது கோபத்தில் நியாயம் இருக்கிறதா?
பி.கு: இங்கே நான் படித்த கல்லூரியில் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. நாங்கள் எப்படி மற்றவர்களோடு பழகினோம், எப்படிக் கல்லூரிச் சூழலுக்குள் உள்வாங்கப் பட்டோம் என்ற விசயங்களை எல்லாம் என்னுடைய ஓ.. கனடா பதிவில் சொல்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்