Thursday, 6 August 2009

வலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்கிறதா?

பதிவுலகத்துக்கு புதுசா? இன்னொரு வலைமனையில் டைப் செய்து அவர்கள் தரும் தமிழாக்கத்தைக் வெட்டி ஒட்டி அல்லாடுகிறீர்களா? உங்களுக்குதான் இந்தப் பதிவு. நானும் கூகிளின் மொழிபெயர்ப்பு, கோபியின் யுனிகோடு, எழில் நிலா யுனிகோடு என்று அலைந்தவன்தான். அப்புறம் எங்கோ முட்டி மோதி நான் கண்ட இந்த நல்ல மென்பொருளை உங்களுக்கும் அறிமுகப் படுத்துகிறேன். இது நிச்சயம் பதிவுலகில் பிரபலமாயிருக்கும் என்ற என்னுடைய நம்பிக்கை காரணமாக கடந்த 5 மாதங்களாக நான் பாவிக்கும் இந்த மென்பொருள் பற்றிய சிறிய அறிமுகத்தைத் தராமல் விட்டது என்னுடைய தப்பு. சமீபத்தில் சில நண்பர்களோடு பேசியபோதுதான் அவர்களும் இன்னமும் வெட்டி ஒட்டுகிறார்கள் என அறிந்து கொண்டேன். ஆக, NHM Writer பற்றிய ஒரு அறிமுகம் இங்கே.

NHM Writer சில தகவல்கள்

இந்த மென்பொருள் 10க்கு மேற்பட்ட இந்திய மொழிகளுக்கான யுனிகோடுகளை உள்ளடக்கியது.
  • Firefox, Internet Explorer, Google Chrome, Safari உட்பட அனைத்து ப்ரவுசர்களிலும் வேலை செய்வதுடன் கிட்டத்தட்ட எல்லா மைக்ரோசொஃப்ட் மென் பொருள்கள், எல்லா மைக்ரொசொஃப்ட் ஒஃபிஸ் மென்பொருள்கள், எல்லா மெசஞ்சர்கள் ஆகியவற்றிலும் நேர்த்தியாகப் பங்காற்றுகிறது.
  • தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கான சில எழுத்துருக்களைக் கொண்டுள்ள இந்த மென்பொருள், தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
  • எல்லா விண்டோஸ் இயங்கு தளங்களிலும் சிறப்பாக நிறுவிக்கொள்ளலாம் இந்த மென்பொருளை.

NHM Writer எங்கே கிடைக்கும்?

New Horizon Media என்ற ஒரு நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருள் இது. கூகிளாண்டவரிடம் NHM Writer என்று கேட்டால் முதலாவதாகப் பட்டியலிடுவார். இல்லை அப்படி கூகிளாண்டவரிடம் தலைவணங்க மாட்டோம் என்றால் இங்கே அழுத்தி திறக்கும் பக்கத்தில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கும் NHMWriterSetup1511.exe என்ற ஃபைலை உங்களுக்கு இலகுவான இடத்தில் சேமித்துக் கொண்டால் உத்தமம். பக்கத்திலேயே அறிவுறுத்தலகள் கொண்ட ஒரு PDF File இருக்கிறது.

எப்படி இன்ஸ்டால் செய்வது?

வழமை போலத்தான். NHMWriterSetup1511.exe ஃபைலில் இரண்டு முறை க்ளிக் செய்ய NHM Set-up Wizard உங்களை மீதிப்படிகளில் வழிநடத்திச் செல்லும்.
லைசென்ஸ் அக்ரீமெண்டை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்கும். (ஏற்றுக்கொள்ளாமல் எப்பிடி இதை நிறுவலாம்?). ஆகவே, கை கட்டி வாய் பொத்தி ஏற்றுக்கொள்ளவும்
லைசன்ஸ் அக்ரீமெண்டை ஏற்றுக் கொண்டதும் எங்கே இன்ஸ்டால் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். பயப்படாமல் Next பொத்தானை அழுத்துங்கள். கூடுதலான பி.சி.கள் தாமாகவே சரியான இடத்தைத் தேர்வு செய்வன.
அடுத்த ஸ்டெப்தான் ரொம்பவே முக்கியம். உன்னுடைய மொழி என்னவென்று கேட்கும். அதில் தமிழைத் தேர்வுசெய்து விடுங்கள்.
அதன் பின்வரும் ஸ்டெப்பைப் பற்றிக் கவலையே படாமல் Next பொத்தானை அழுத்துங்கள். அடுத்த ஸ்டெப்பில் Create Desktop Icon, Create Quick Launch Icon ஆகிய இரண்டு தெரிவுகளையும் தேர்ந்தெடுங்கள். மீண்டும் Next பொத்தானை அழுத்த NHM Writer மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.

எப்படிப் பயன்படுத்துவது?

நீங்கள் வழமையாக ஒரு மென்பொருளை எப்படி ஆரம்பிப்பீர்களோ, அவ்வாறே இதையும் ஆரம்பியுங்கள். உங்கள் கணனியின் Task Barன் வலது மூலையில் (இன்னும் பாமரத்தனமாகச் சொல்வதானால், கணனித் திரையின் வலது மூலையில்) ஒரு மணி உருவம் தென்படும். அந்த மணி சாதாரண வெண்கல நிறத்தில் இருந்தால் நீங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யலாம். அந்த மணி மீது உங்கள் Mouseஐ நகர்த்தி, Left Click செய்ய இந்த மென்பொருளில் உள்ள நான்கு தமிழ் யுனிகோடு மென்பொருள்களையும் இது பட்டியலிடும். அதில் ஒன்றைத் தெரிவு செய்து நீங்கள் ஜமாய்க்க வேண்டியதுதான். தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் Alt+2 ஐ அழுத்தினால் வரும் யுனிகோடை பாவியுங்கள். உள்ளதிலேயே இலகுவானது இதுதான்.
நீங்கள் தமிழில் டைப் செய்யும் நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தங்க நிறத்தில் ஒளிரும் மணி மூலம் உறுதி செய்யலாம். மணி சாதாரண வெண்கல நிறத்தில் இருக்கும்போது ஆங்கிலத்தில் மட்டுமே டைப் செய்யலாம். ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் Alt உடன் உரிய பொத்தான்களை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

வேறு Options களுக்கும், Settings க்கும் என்ன செய்வது?

இதற்கு Mouseஐ மணிக்கு மேல் வைத்து Right Click செய்யுங்கள். உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் தேவை, என்ன உதவி தேவை, அப்டேட் ஏதாவது தேவையா, On Screen Keyboard தேவையா என்று கேட்டு எல்லாவற்றையும் வழங்குகிறார்கள்.

NHM Writer எவ்வளவுக்கு உபயோகமானது?
  • வெட்டி ஒட்டுவதிலுள்ள எரிச்சல்கள் இதில் இல்லவே இல்லை.
  • Tamil Phonetic Unicode இருப்பதால் இதைவிட இலகுவான தட்டச்சு மென்பொருள் உங்களுக்குக் கிடைக்காது என்றே சொல்லலாம்
  • MS Office இலுள்ள அனைத்து மென்பொருளிலும் வேலை செய்கிறது
  • அனைத்து Chat களிலும் பயன்படுத்தலாம்
  • Alt உடன் இன்னொரு 'கீ'யை மட்டும் பயன்படுத்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி டைப் செய்யலாம்
  • பந்தி பிரித்து நேர்த்தியாக உங்களது படைப்புக்களை டைப் செய்யலாம்.
  • ப்ளாகரில் புதிய பதிவுகளை நேரடியாக இடலாம்
பின்குறிப்பு: படங்கள் என்னுடையவை அல்ல. பதிவர் Faizal உடையவை. அவருக்கு நன்றி. கிட்டத்தட்ட இதே போல் ஒரு பதிவை மேலும் சில விபரங்களோடு அவரும் இட்டிருக்கிறார். அவரது அனுமதியின்றி படங்களைப் பயன்படுத்தியதுக்கு மன்னிப்பாராக.

17 comments:

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்று அய்யா. மேலும் NHM writer உபயோகப் படுத்துவர்களுக்கு, படுத்தப் போகின்றவர்களுக்கு கீழ் கண்ட தகவல்கள் உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

q - ஃ
z - ழ்
nj - ஞ் (அ) J (Capital J) - ஞ்
ng - ங் (அ) G (Capital G) - ங்
l - ல்
L (Capital L) - ள்
r - ர்
R (Capital R) - ற்
w - ந்
n - ன்
N (Capital N) - ண்
au - ஔ
ள வரும் எழுத்துகளுக்கு - உதாரணமாக - அக்கௌண்ட் என்று அடிக்க வேண்டுமானால் akkauNt என்று அடிக்க வேண்டும் - kau - கௌ என்று வரும்.
sri என்று அடித்தாலே ஸ்ரீ என்று வந்துவிடும்.

வேறு எதாவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்களேன்.

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில் சேர்க்கவில்லையே?

geethappriyan said...

super post
thanks for the sharing
share often

Unknown said...

மேலதிகத் தகவல்களுக்கு மிகவும் நன்றி இராகவன்... முக்கியமாக ள்,ழ், ஞ், ங், ற், ந்,ன்,ண் பற்றிய தகவல்களை நான் பதிவிலேயே சேர்த்திருக்க வேண்டும். பதிவு ரொம்பவே நீண்டதால் விட்டுவிட்டேன்.. On Screen Keyboard Option இருப்பதால் பயனாளர்கள் தாமே அறிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்

தமிழிஷில் சேர்த்திருக்கிறேன்..

Unknown said...

நன்றி கார்த்திகேயன்... நிச்சயமாகப் பகிர்ந்து கொள்கிறேன்

பொன் மாலை பொழுது said...

மிக நல்ல பயனுல்ல செய்தி.அறிய தந்தமைக்கு நன்றிகள்.
உங்களின் தமிழ் நடை மிக அழகாக உள்ளது.
பாராட்டுக்கள்.

Unknown said...

நன்றிங்க கக்கு-மாணிக்கம்... அப்புறம் நீங்க தப்பா நினைக்கலன்னா சொல்றேன்.... உங்க பெயர் வேற என்னத்தையோ ஞாபகப்படுத்துற மாதிரி இருக்குங்க..

நிலாமதி said...

நான் பெற்ற செல்வம் பெறுக வையகம் ( உலகம்) . உங்க உதவும் மனபான்மைக்கு நன்றி நான் இன்னும் கட அண்ட் பேஸ்ட் தாங்க. முயற்சிக்கிறேன். நன்றி .

R.DEVARAJAN said...

q - ஃ

Sa - ஸ

xa - க்ஷ

தேவ்

Unknown said...

நன்றிங்க தேவ்

நையாண்டி நைனா said...

"தமிழ் டைப்பிங் படுத்துகிறதா?" இல்லவே இல்லை, இதெல்லாம் ஒன்னும் செய்றதில்லை... சில பதிவுங்கதான்.... படுத்தோ படுத்துன்னு படுத்துது... அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...

Unknown said...

நைனா...அதுக்கெல்லாம் எப்டிங்க வழி சொல்றது...இஃகிஃகி

குடந்தை அன்புமணி said...

முதல்ல இந்த பின்னூட்ட முறையை மாற்றுங்கப்பா... பின்னூட்டமிடவே தொல்லையா இருக்கு...

நானும் என்.எச்.எம். தான் பயன்படுத்துகிறேன். நேரடி தமிழ் டைப்பிங்தான் எனது வழிமுறை. அதாவது Alt 3.

Thomas Ruban said...

நீங்கள் கூறீயபடி NHM writer பொட்டுவிட்டென். கொஞ்ச கஸ்ட்மாக உள்ள்து.ப்ழ்க ப்ழ்க வ்ந்து விடும் என நம்புகிறேன்.

உங்கள் ப்திவ்க்கு நன்றீ.

புதுப்பாலம் said...

தமிழா கீமேன் கிடைக்கிறதே, அதுவும் NHM writer போல தான் உள்ளது. முயன்று பார்க்கவும்

Unknown said...

அன்புமணி... புரியல தல... உங்க பக்கம்தான் தகராறு இருக்கு.. வேற யாரும் கம்ப்ளெய்ண்ட் பண்ணலீங்க

ரூபன்... கொஞ்ச நாளில் இலகுவாகிவிடும்

புதுப்பாலம்... கீமேன் பற்றி எனக்குத் தெரியல... ஒரு மென்பொருளே போதுமே

Pragash said...

nhm writer இல் பாமினி யுனிகோட் முறை விசைப்பலகையை பயன்படுத்தும் போது சில எழுத்துக்களை தட்டும் பொழுது எழுத்துக்களுக்கு இடையில் வட்டங்கள் தோன்றுகின்றது. இம்முறையை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும். மற்றபடி பெரிதாக குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. என் எச் எம் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.