நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.
வேலு பிரபாகரனின் காதல் கதை

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

அச்சமுண்டு அச்சமுண்டு

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.
நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.
ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?
8 comments:
குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம். ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.
சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.
நல்ல அலசல் நண்பா...
காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம்.
இரண்டும் பொருந்தும் தானே...?
Your comments about the child abuse is 100% correct, it happened to me when i was below 10 years old (by my mom's younger brother still i hate the scoundral because of that but i can't do anything because he married to my elder sister)
Unmai nijathil mikavum sudum...
Nila..
சின்ன அம்மிணி..
///குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம்///
குட் டச் - பேட் டச் பற்றிக் குழந்தைகளோடு பேசவே தயங்கும் பல பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
///ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்///
நூறு சதவீத உண்மை.. ஆனால் இன்றைக்கும் உறவுகள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று பலர் நம்புவது இல்லை...அப்படிப் பாதிக்கப்பட்ட பெற்றோர் வேண்டுமானால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். மற்றவர் நிலை கேள்விக்குறி..
///பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.///
முதல் பகுதி செம கடுப்பில் எழுதியது
வானம்பாடிகள்
///சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.///
நன்றி தலை.. எனக்கு அந்த நறுக்ஸ் டெக்னிக் மட்டும் வரமாட்டேங்குது.. எப்பிடி உங்களால மட்டும் அதெல்லாம் முடியுது??
நையாண்டி நைனா
///நல்ல அலசல் நண்பா...
காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம். ///
உண்மைதான் நைனா... எல்லாம் ஒரு வட்டம்தான்..
நிலா...
எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் புரியவில்லை. உங்கள் அம்மாவின் சகோதரன் எப்படி உங்கள் அக்காவைத் திருமணம் செய்ய முடியும். எனக்கு இந்த உறவுமுறை புரியவேயில்லை... தாய் மாமன்களை மணம் செய்யும் இந்த முறைகூட இவர்கள் தப்பாய் நடக்கத் தூண்டுகிறது என்பேன்... என் அக்கா மகள்தானே என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம்...அக்காவைத் திருமணம் செய்துவிட்டான் என்பதால் பொறுத்துப் போகாதீர்கள்.. இப்போது வாலாட்ட முயன்றால் வாலை ஒட்ட நறுக்கிவிடுங்கள்... இதில் வலி என்ன தெரியுமா... அவனைப் பற்றி சின்ன வயதில் நீங்கள் போட்டுக் கொடுத்திருந்தால்கூட எதுவும் நடந்திருக்காது. அநேகமாக உங்கள் வாதம் எடுபட்டிருக்காது.. அவன் பக்கமே பேசியிருப்பார்கள்
Post a Comment