Monday, 20 July 2009

வாயகரா தாத்தா-3 (18+)


வாயகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள் என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன் வந்த வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்.

தன்னோட தோழி ராஜியம்மாகிட்ட ஜாலியம்மா ஒருநாள் கவலையா சொன்னாளாம், 'என்னடி வாழ்க்கை இது! சொந்த வீட்டுக்குள்ள இருந்துகிட்டே அவரோட அரை மணிநேரம் கூட நிம்மதியா இருக்கமுடியலை!' ‘ஏன்? குழந்தை தொல்லை பண்ணுதா?'னு கேட்டா ராஜியம்மா. ‘இல்லையே... குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்குப் போன பிறகுகூட எங்க ரெண்டு பேராலயும் சந்தோஷமா இருக்க முடியலை'ன்னா ஜாலியம்மா.

ராஜிக்கு ஒரே குழப்பமாப் போச்சு. இருந்தாலும் ‘எனக்குத் தெரிஞ்ச சைக்காலஜியைச் சொல்றேன். அந்த மாதிரி சமயத்தில உன் கணவரோட முகத்தை நீ நேரா பாத்ததுண்டா?'ன்னு கேட்டா. ஜாலியும் அசராம ‘ ஒரே ஒரு தடவதான் பார்த்தேன். அதுவும் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நின்னு எங்களையே வெறிச்சு பார்த்துக்கிட்டிருந்தாரு. அப்போ அவர் முகம் எவ்ளோ ஆக்ரோஷமா இருந்துச்சு தெரியுமா? அப்புறம் நாங்க எப்படி சந்தோஷமாக இருக்கிறதாம்.
<---><---><---><--->

ஒரே சமயத்துல தன் பெரியவீடு சின்னவீடு மீது மண்ணைய்யாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாது என்பதால் இருவரையும் ஒரே கப்பலில் ஏத்தி உல்லாசப்பயணம் அனுப்பிவெச்சான். பயணம் முடிஞ்சு வந்ததும் மனைவிகிட்ட பிரயாண அனுபவங்களைக் கேட்கிற மாதிரி, ஒவ்வொரு பயணி பத்தியும் விசாரிச்சான். கடைசியா தன் சின்னவீட்டை அடையாளம் சொல்லி அவன் கேட்க ‘பொம்பளையா அவ! ச்சீ.. கப்பல்ல வந்த உருப்படியான எந்த ஆம்பளையையும் அவ விட்டு வைக்கலை!' என்றாள் முகத்தைச் சுளித்தபடி. கெட்டவார்த்தை சொல்லி சின்னவீட்டை திட்டியபடியே அவளை நேரில் பார்க்கப் போனான் மண்ணைய்யா.

எதுவும் தெரியாத மாதிரி தன் மனைவியை அடையாளம் சொல்லி அவளிடம் விசாரித்தான். சின்ன வீடு முகம் மலர்ந்து, 'ஆஹா, அந்தக் கப்பலில் வந்ததிலேயே அவதான் பெரிய உத்தமி' என்று சொல்லவும், மனசுக்குள் ஆண்டவனுக்கு நன்றி சொன்னபடியே எழுந்தான் மண்ணைய்யா. சின்ன வீடு மீதியை முடித்தாள், ‘அந்தப் பெம்பளை கடைசி வரை தன் புருஷனை விட்டு ஒரு நிமிஷம்கூட நகரலை. எப்பவும் அவங்க ரெண்டு பேர் மட்டும் ரூமுக்குள்ளேயே இருந்தாங்க'.
<---><---><---><--->
நன்றி: ஆனந்த விகடன்

15 comments:

வந்தியத்தேவன் said...

கீத் பழைய விகடன் நினைவுகளை மீட்டுவதற்க்கு நன்றிகள்.

Unknown said...

இது அவ்வளவு பழைய விகடன் இல்லை... இந்த வருடத்து விகடன்தான் வந்தி

கலையரசன் said...

:-))

//பின்னூட்டம் போடாமப் போனீங்கன்னா உங்க Blogஐ அனானிங்க அட்டாக் பண்ணும்//

ஏனிந்த கொலவெறி மச்சி?

Unknown said...

என்னா பண்றது கலை... இப்ப பதிவர்களை மிரட்ட அனானிங்கதான் நல்ல ஆயுதம்...lol

ச ம ர ன் said...

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ... ?? முடியல‌

Unknown said...

எது முடியல சமரன்... அடடே..நம்ம மாத்ருபூதம் வேற இப்ப இல்லையே

வால்பையன் said...

ரெண்டாவது ஜோக் செம காமெடிங்க!

Unknown said...

///ரெண்டாவது ஜோக் செம காமெடிங்க!///
கிண்டலா பாராட்டா வால்பையன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Subankan said...

//Anonymous said...
This post has been removed by a blog administrator.//

அப்ப அட்டாக் பண்ணிட்டாங்களா?

Unknown said...

ஆமா சுபாங்கன்... ஒண்ணும் நம்ம கையில இல்லையே...

குறை ஒன்றும் இல்லை !!! said...

Both are read already some where.. But its nice to read again here !!!

Unknown said...

குறை ஒன்றும் இல்லை... ஏங்க.. அது ஆனந்த விகடன்ல ஏற்கனவே வந்ததுன்னு போட்டிருக்கேனோல்லியோ... அப்புறம் ஏற்கனவே படிச்சதுன்னு ஒரு காமெண்ட் தேவையா???

நிலாமதி said...

இரண்டு பொண்ணுங்களும் பலே கிலாடிங்க. பொண்ணுங்க நல்ல ஸ்மாட் ஆக தான் இருக்காங்க. ரண்டு பேரும் வச்சாளுங்க ஆப்பு ....

Unknown said...

அவங்க ஆப்பு வச்சது ஓ.கே.ங்க நிலாமதி... ஆனா ஆப்பு வாங்கினவன் பாவமோ பாவம்