Tuesday 7 July 2009

வாயகரா தாத்தா-2 (18+)

வாயகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள் என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன் வந்த வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்.

ஆளில்லாத் தீவுல ராஜுவும் அவன் கேர்ள் ஃப்ரெண்ட் ஜிகினாவும் மாட்டிக்கிட்டாங்க. ஒரு வாரம் கிழங்கு பழங்களைத் தின்னுகிட்டே கப்பல் ஏதாச்சும் அந்தப் பக்கம் போகுதான்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ஒரு நாள் இவங்களைப் போலவே போராடி, நீந்தி, புதுசா ஒரு ஆளு கரையேறினான். கரைக்கு வந்ததுமே ஜிகினா மேலதான் அவன் கண்ணு போச்சு. அதைக் கவனிக்காத ராஜூ, ‘நல்லவேளை நீங்க வந்தீங்க, அதோ உயரமா இருக்கு பாருங்க வாட்ச் டவர், அதுமேல ஏறி கப்பல் வருதானு பார்க்க மூணாவது ஆள் கிடைச்சீங்க. இனி, ரெண்டு ஷிஃப்டுக்குப்பதிலா மூணு ஷிஃப்ட் போட்டுடலாம்'னு சொன்னான். முதல் ஷிஃப்ட், அந்தப் புது ஆளு வாட்ச் டவர் கோபுரத்து மேல ஏறி நின்னான். கீழே இலை தளை எல்லாம் சேர்த்துத் தீமூட்டி ஜிகினாவும், ராஜுவும் குளிர்காய ஆரம்பிச்சாங்க.

50 அடி உயர வாட்ச் டவரில் இருந்து அந்தப் புது ஆள் திடீரென்று கத்தினான், ‘இதோ பாருங்க, நான் புது ஆள். என் முன்னாடி இப்பிடியெல்லாம் தப்பு பண்ணாதீங்க!' என்று. உடனே ராஜூ,' யோவ், நாங்க தள்ளித் தள்ளித்தானே உட்கார்ந்திருக்கோம், உன் கண்ணு அவிஞ்சு போச்சா?' நு கேட்டான். கொஞ்ச நேரத்தில மறுபடியும் உச்சியிலிருந்து குரல், ‘ஏய், காதலர்களாகவே இருந்தாலும் அடுத்தவன் பாக்கிறானேன்னு கூச்ச நாச்சம் வேணாமா? தப்பு பண்ணாதீங்கப்பா!'. ராஜூவுக்கு கோபமாப் போச்சு. ‘டேய், நாங்க தூர தூரதானே இருக்கோம்'னு கத்தினான். இப்படியே எட்டு மணிநேரத்தில் பத்து தடவை புது ஆள் கத்த, கடுப்பான ராஜூ பதிலுக்குக் கத்த என்று முதல் ஷிஃப்ட் முடிவுக்கு வந்தது.

இப்போ ராஜூவோட ஷிஃப்ட். ஜிகினாவையும் புது ஆளையும் கீழே விட்டுட்டு, வாட்ச் டவர் மேல தன் ஷிஃப்ட்டுக்காக ஏற ஆரம்பிச்சான் ராஜு. பாதி தூரம் ஏணியில் ஏறும்போது திரும்பிப் பார்த்தான். வாய்விட்டுச் சிரிச்சான்.... மனதுக்குள் நினைத்தான்..' அடச்சே! வந்தவனையும் தப்பு சொல்ல முடியாது. இங்கிருந்து பார்த்தா ரெண்டு பேரும் இறுக்கமா கட்டிப் பிடிச்சுக்கிட்டிருக்கிற மாதிரிதான தெரியுது...'

நன்றி: ஆனந்த விகடன்

6 comments:

வெண்காட்டான் said...

viyaparathuku than vikadan pannninathu. neengalum athee kuppai endu kaati vitteerkal.

Unknown said...

ஏ ஜோக் சொல்பவர்கள் எல்லாம் குப்பை என்பது உங்கள் கருத்தென்றால் அதைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை...ஆனால் துரதிர்ஷ்டம் அதுதானே உங்களை என்பக்கம் இழுத்து வந்தது... சும்மா நடிக்காதீங்க..இயல்பாய் இருக்கப் பாருங்கள் வெண்காட்டான்

Cable சங்கர் said...

நம்ம ஆட்கள் எல்லாம் இம்மாதிரியான ஜோக்குகளை படித்துவிட்டு. பின்னூட்டமிடாமல் போய்விடுவார்கள். அல்ல்து. கேவலம். அசிங்கம் என்று சொல்வார்கள். ஹிப்போக்ரஸி டூ த கோர்.

ச ம ர ன் said...

//.ஆனால் துரதிர்ஷ்டம் அதுதானே உங்களை என்பக்கம் இழுத்து வந்தது... சும்மா நடிக்காதீங்க..இயல்பாய் இருக்கப் பாருங்கள் வெண்காட்டான்//

கரெக்ட்.. :)

THANGAMANI said...

அப்படி ஒன்றும் அதிக ஆபாசம் இல்லை.நகைச்சுவையை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வோம்.

Unknown said...

கேபிள் அண்ணா... உண்மைதான்.. முக்கியமாக உங்கள் கொத்து பரோட்டாவில் இப்படி ஒரு ஜோக் வரும் என்று தெரியும்... இருந்தும் படிப்பார்கள்.. படித்துவிட்டு கூச்சல் போடுவார்கள்...பிடிக்காவிட்டால் ஏன் படிக்கவேண்டும்?

கருத்துக்கு நன்றி சண்முகசுந்தரம சார்... சண்முகசுந்தரம் என்றாலே என்னுடைய வாத்தியார் ஒருவர் (அற்புதமானவர்) ஞாபகம் வருகிறார்.

நன்றி தங்கமணி