Friday, 17 July 2009

தாலாட்டும் பூங்காற்று

ராஜாவின் இசையில் எஸ். ஜானகி பல பாடல்களைப் பாடியிருக்கிறார். பல பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அழகான வரிகளுக்கு ராஜா அமைத்திருக்கும் அற்புதமான இசை, பிரியதர்ஷன் அதற்கு கார்த்திக், பானுப்ரியா மூலம் வடிவம் கொடுக்க, கிட்டத்தட்ட முழுமையான ஒரு மெலடி இந்தப் பாடல். பாடல் வரிகளைக் கீழே தருகிறேன். காட்சியோடு கானமும் கேட்க இங்கே அழுத்துங்கள்.


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும் பூங்காற்று)

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும் பூங்காற்று)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும் பூங்காற்று)

ராஜா என்றைக்குமே ராஜாதான். இதே கோபுர வாசலிலே படத்தில் ‘காதல் கவிதைகள்' என்று இன்னொரு அற்புதமான பாட்டுப் போட்டிருப்பார். வரிகள் கிடைத்ததும் பதிவிடுகிறேன்.

No comments: