Friday 31 July 2009

பெண்ணும் புலியும் (மிகக் கண்டிப்பாக 18+)

இது கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு. மீறி உள்ளே நுழைந்து வாசித்துவிட்டு என்னைத் திட்டி நல்லவன்/நல்லவள் வேஷம் போடக்கூடாது.

ஜூலை மாதக் கடைசி நாளில் இரண்டு அரசியல் பதிவுகள் போட்டு போரடித்து விட்டேன். வந்தியண்ணா கூட என்னாச்சு என்று கேட்டிருந்தார். அவருக்காகவும், அரசியல் பதிவு கண்டு கடுப்பான மற்றைய இனியவர்களுக்கும் கிளு கிளுப்பாக ஒரு பதிவு. இதுவும் சுஜாதா உபயத்தில் நெட்டில் சுட்ட ஒரு கதைதான்.

செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத்தை பின் லேடன் ஆட்கள் தகர்த்ததுதான் தகர்த்தார்கள், நம்ப ஜார்ஜுக்கு நிம்மதியே போச்சு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டின்னு சந்தோசமா அமெரிக்க விமானப்படையில் விமானங்களை துடைச்சுக்கிட்டிருந்தவனுக்கு ஆஃப்கானிஸ்தான் போர் முனைக்குப் போகும்படி கட்டளை. இரண்டு பிள்ளை பெத்தபின்னும் உருக்குலையாம, ஒரு இரவுகூட ஜார்ஜை விட்டுவைக்காம விருந்து வைக்கும் அழகு மனைவி ஜில்லைப் பிரிஞ்சு போறதுதான் ஜார்ஜுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், கடமையையும் விடமாட்டாமல் பிரிய மனமில்லாமல் பிரிந்து போர்க்களம் போனால் ஜார்ஜ். ஜில் அவனுக்கு ‘உங்க கைய நம்புங்க, கவலையே இருக்காது'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணி அனுப்பினா.

ஓயாத சண்டை. ஒரு ஹெலிகாப்டரைத் தந்து ஓட்டச் சொல்லிவிட்டார்கள். ஓயாமல் பறந்ததால் தனிமையில் இனிமை காணவும் முடியாமல் வாடிப்போய்ட்டான் ஜார்ஜ். வெறுப்பான வெறுப்பில் அவன் ஹெலிகாப்டர் ஓட்டும் போது, தலிபான்காரன் சுட்ட குண்டை கவனிக்காம விட்டுட்டான். அது ஹெலிகாப்டரில் பட்டு, அது விழமுன்னமே பாரசூட்டில குதிச்சுட்டான் நம்மாள். ஆனா துரதிர்ஷ்டம் அவன் இறங்கின இடம் தலிபான்காரனோட ஏரியா. சுத்திவந்து நின்னுக்கிட்டாங்க. நோ எஸ்கேப். ஜார்ஜுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. அந்தத் தலிபான்களில் தலைவன் போல் இருந்தவன் ஏதோ சொல்ல ஜார்ஜோட பாக்கெட் எல்லாம் காலி பண்ணி அவனை நிராயுதபாணி ஆக்கினாங்க. என்னது, ட்ரெஸ் இல்லாம பண்ணாங்களா.. யோவ் அது நிர்வாணம். இது நிராயுதபாணி.. அப்டீன்னா எல்லா ஆயுதங்களையும் புடுங்கினாங்கோ. எல்லா ஆயுதமும்னா, எல்லா செயற்கை ஆயுதத்தையும் புடுங்கினாங்கோ.

ஜார்ஜ் கர்த்தரை வேண்டிக் கொண்டான். அப்போ தலிபான்காரன் தூக்கிப்போட்ட அவனோட பர்ஸுக்குள் அவனது மனைவி, குழந்தைகளின் படம் வெளியே எட்டிப்பார்க்க ஜார்ஜ் பிரகாசமானான். ‘ஐயா, எசமானரே! நான் வெறும் கூலி. இதப் பாருங்க. எனக்கு மனைவி, பிள்ளை குட்டிங்கன்னு குடும்பம் வேற இருக்கு. தயவு செய்து என்ன விட்டுடுங்க'ன்னு தலிபான் தலைவனின் காலைப் பிடிச்சுக் கெஞ்ச அவனும் ‘அட, அமெரிக்கனும் அழுவானா!' என்று இரக்கமானான். மெல்ல ஜார்ஜ் கிட்ட வந்து சொன்னான், ‘நண்பா, நான் உன்னை விட்டுடறேன். ஆனா, நான் சொல்ற மூணு விஷயத்தை நீ செய்யணும். அதுக்கு ரெடியா?'. ஜார்ஜ் உடனேயே ரெடின்னான். தலைவன் சொன்னான், 'அதோ பார் வரிசையா மூணு கூடாரங்கள் இருக்குல்ல, அதுக்குள்ள தான் உனக்கு வேலை.
  • முதல் கூடாரத்துக்குள்ள ஒரு டஜன் வோட்கா பாட்டில்கள் இருக்கு. அதை நீ ஒரு மணித்தியாலத்துல காலி பண்ணணும். இது முதல் நிபந்தனை.
  • இரண்டாவது கூடாரத்தில ஒரு புலி இருக்கு. அதுக்கு ஒரே பல்வலி. அதோட கடவாய்ப் பல்லுலதான் பிரச்சினை. அந்தப் பல்லைப் புடுங்கிடணும். இது இரண்டாவது நிபந்தனை.
  • மூணாவது கூடாரத்தில ஒரு பொண்ணு இருக்கா. அவளை நம்ப கூட்டத்தில யாராலையும் திருப்திப்படுத்த முடியல. அவளை நீ திருப்திப் படுத்தணும். இது மூணாவது நிபந்தனை.
இது மூணுக்கும் நீ தயாரா?'ன்னு கேட்டான் தலைவன். ஜார்ஜ் யோசித்தான். 'கடைசிக் கூடாரத்தில கரும்பிருக்கு. கரும்பு தின்னக் கைக்கூலியா வோட்கா வேற முதல் கூடாரத்தில இருக்கு. வோட்கா அடிச்ச புலி பத்திக் கிலி வருமா?' ஆக 'நான் ரெடி' என்றான் ஜார்ஜ்.

ஜார்ஜ் அமெரிக்கனல்லவா. எஸ். ஏ. சி பையனுக்கு மொக்கை போடச் சொல்லித் தரணுமா? அரை மணித்தியாலத்தில் வோட்காவைக் காலி செய்துவிட்டு ஒரு வெற்றிச் சிரிபோடு புலிக் கூடாரத்துக்குள் நுழைந்தான். கச முசா என்று சத்தங்கள் கேட்டன. 'உனக்கு நள்ளது தானே பண்ழேன்.. கொஞ்ழம் அஷங்காம இழேன் புழி' என்று புலிக்கு அட்வைஸ் வேறு. ஒரு முக்கால் மணிநேரத்தின் பின் உடம்பெல்லாம் புலியின் நகக் கீறல்களோடு, மறுபடியு ஒரு வெற்றிச் சிரிப்போடு வெளியே வந்த கொடும் பாவி கேட்டானே ஒரு கேள்வி, தலிபான்காரன் மொத்தமும் காலி. ‘ஆமா, அந்த பழ் வழிப் பொண்ணு எங்கேழா இழுக்கு?'

பி.கு: அனைவருக்கும் இனிய ஆக்ஸ்ட் மாதப்பிறப்பு வாழ்த்துக்கள். இப்ப சந்தோசம்தானே வந்தியத்தேவன்?

11 comments:

cheena (சீனா) said...

அய்யொ அய்யொ - ஜார்ஜு - பலலுப் புடுங்கவா பொண்னெத் தேடற - வாழ்த்துகளுக்கு நன்றி

வந்தியத்தேவன் said...

ஆஹா சுஜாதா சொன்னதிலும் பார்க்க சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். சில இடங்களில் ஹைலைட் பண்ணிக்கூடக் காட்டியிருக்கிறீர்கள்.

Prathap Kumar S. said...

டாப்பு நகைச்சுவை... நல்லா சிரிச்சேன்

Unknown said...

cheena (சீனா) said... ///அய்யொ அய்யொ - ஜார்ஜு - பலலுப் புடுங்கவா பொண்னெத் தேடற ///...சீனா ஐயா.. அந்தப் பயபுள்ளைய என்ன செய்யலாம்?

வந்தியத்தேவன் said...
///ஆஹா சுஜாதா சொன்னதிலும் பார்க்க சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். சில இடங்களில் ஹைலைட் பண்ணிக்கூடக் காட்டியிருக்கிறீர்கள்/// போங்க வந்தி.. வெக்கமாயிருக்கு.

விமர்சகன் said...
///டாப்பு நகைச்சுவை... நல்லா சிரிச்சேன்/// அந்த ஜோக்கின் ஒரிஜினல் சொந்தக்காரனுக்கும், சுஜாதாவுக்கும் நன்றி

செல்வன் (அன்பு ) said...

வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

அன்புடன்
தமிழ்செய்திகள் team

துபாய் ராஜா said...

:))

ummar said...

nallave illai

Unknown said...

நன்றி பனையூரான், துபாய் ராஜா... ரசித்ததுக்கு..

உம்மர்... நால்லாவேயில்லைன்னு மட்டும் சொன்னா எப்புடி... கேவலமாயிருக்கு அப்பிடி இப்பிடின்னு இன்னும் கொஞ்சம் சேர்த்து சொல்லுங்க சகா.. என்னைய ஒருத்தனும் திட்டிறானில்லை

Anonymous said...

very old joke. but it seems funny u also for hits making cheap a jokes. periya periya eluthalakal maathiri neengalaumm i mean jeyamokan oru thani blog thaodangungo adult jokeku.

Unknown said...

வாங்க அனானி... என்ன செய்ய அனானி.. ஹிட்ஸ் வாங்கத்தான் ‘ஏ' ஜோக் போடுறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள்... ஆனால் நிங்கள் சொல்கிற பெரிய எழுத்தாளர் தன் வலைப்பக்கம் ஹிட்டாக செய்த பப்ளிசிட்டி ஸ்டண்டை விட என்னோடது எவ்வளவோ மேல்... அவர் இருப்பவர்களைத் திட்டினாலும் பரவாயில்லை... இறந்தவர்களை அல்லவா திட்டினார்!

Anonymous said...

I didn't understnad the last part. could you explain please...
Thanks.