இது ஒன்றும் பெரிய ‘சீரியஸ்' பதிவு இல்லை. ஆனால் இது பற்றி நான் எழுதியே ஆகோணும். இல்லாட்டா, உவன் ஜெயன் எனக்குச் செய்யிற தொல்லைகள் அடங்காது பாருங்கோ.
ஜெயன் வந்து எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவன். நான் ‘பி' வகுப்பிலையும், ‘டி' வகுப்பிலையும் ஆறாம் வகுப்புத் தொடக்கம், 11ம் வகுப்பு வரை படிக்கேக்கை, இவன் ‘ஏ' வகுப்பில படிச்சவன். நித்துவும் ‘ஏ' வகுப்பு எண்டபடியால் ‘நண்பனின் நண்பன்' எனக்கும் நண்பன் என்ற கோட்பாட்டின்படிதான் எனக்கு இவனை முதலில தெரியும். 12ம் வகுப்புக்கு வந்த பிறகு, இவனும் நானும் 'ஏ' வகுப்பாப் போக, அதுக்குப் பிறகுதான் நெருங்கின நண்பர்களானோம். அப்ப இருந்தே உவன் என்னைப்போட்டு வதைக்கத் தொடங்கீட்டான். ஆள் ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம். அடிச்சும் கலைக்கேலாது. கதைக்க வெளிக்கிட்டான் எண்டால் விசர் பத்திக்கொண்டு வரும். இருந்தாலும் ஆள் என்னெண்டு எங்கட நட்பு வட்டத்துக்க(அதாவது நான், மகி, நித்து, நிதி, கப்பி) வந்தவன் எண்டு தெரியேல்லை. இவன்ர நல்ல மனம் காரணமாய் இருந்திருக்கலாம்.
இவனை நாங்கள் அடிக்காத நக்கல் இல்லை. இவன் ஒரு மோட்டர் சைக்கிள் வச்சிருந்தவன். அருமையான ஜப்பான் மொடல் மோட்டர் சைக்கிள். அது உற்பத்தி செய்யிறதையே ஜப்பான் காரன் நிப்பாட்டிக் கனகாலம். ஆனா, எல்லாரும் ஓட ஆசைப்படிற மோட்டர் சைக்கிள், Honda CG125. அதுவும் பெரிசா ஒருத்தரும் வச்சிருக்காத ஒரு இளம் நீலக் கலரில இவன்ர தகப்பன் ஓடித் திரிஞ்ச மோட்டர் சைக்கிள். அந்தாளை சைக்கிள்ள அனுப்பீட்டு இவன் அதிலை ஊர் சுத்துவான். சாட்டுக்கு ஒரு ஹெல்மெட் ஹாண்டில் பாரில தொங்கும். அவ்வளவுதான். ‘டுக்கு டுக்கு' எண்டு தூரத்தில கேக்கிற மோட்டர் சைக்கிள் சத்தத்தில நிதி சொல்லுவான், 'டே சாணம் வாறாண்டா' எண்டு. அப்பிடி நக்கலும் விக்கலுமா எங்கட நட்பு தொடர்ந்தது.
எங்கட பக்கம் இந்த லாண்ட் லைன் ஃபோன் வந்தாப்பிறகு இவன்ர அட்டகாசம் இன்னும் கூடிப்போச்சு. என்னெண்டா ஃபோன் இருக்கிற எல்லா வீட்டுக்கும் லைன் போட்டு ஆக்களைக் கடுப்படிக்கிறது இவன்ர முழுநேரத் தொழிலாப் போச்சு. ஒரு முறை எங்கட வீட்ட ஃபோன் எடுத்து குரலை மாத்திக் கதச்சு தொல்லைதந்தான். ஆரெண்டு கண்டுபிடிக்க முடியேல்லை, ஆனால் இவர்தான் ஆள் எண்டு எனக்கு ஒரு சந்தேகம். உடனே சின்னதாய் ஒரு ஜோக் அடித்தேன். ஆள் மாட்டுப்பட்டார். என்னெண்டு தெரியுமோ? ஆளின்ர என்ன மாறினாலும் சிரிப்பு மட்டும் மாறாது. ஆள் சிரிக்கேக்கை ‘அஹு அஹு அஹு' எண்டுதான் சிரிப்பர். நானடிச்ச ஜோக்குக்கும் ஆள் இப்பிடியே சிரிச்சு மாட்டிக்கொண்டார்.
இவனும் நானும் சேர்ந்து சன் சேரிட்ட கெமிஸ்ட்ரி படிச்சது ஒரு பெரிய கதை. அதை ஒரு காவியமா எழுதலாம். அதே மாதிரி கொழும்பில நான் இருக்கேக்க இவன் செய்த உதவிகளையும் உபத்திரவங்களையும் பற்றியும் கனக்க எழுதலாம். ஆனா, இந்தப் பதிவின்ர நோக்கம் அது இல்லைப் பாருங்கோ.
நான் இப்ப கனடால இருக்கிறன். இவன் லண்டனில இருக்கிறான். அடிக்கடி ஃபோன் போட்டு என்னை இப்பவும் ரென்சனாக்கிறதில இவனுக்கொரு சந்தோசம். தொல்லை கலந்த அன்புதானே ஆளின்ர ஸ்பெசல். போனமாசம் இங்க இருந்து சுவிஸ்சுக்கு எங்களோட படிச்ச ரபிக்காந்த் போனவன். அப்ப ஜெயன் லண்டனில இருந்து சுவிஸ் போய் ரபிக்காந்தைச் சந்திக்கிறதா ஏற்பாடு. ஒருநாள் கனடா நேரம் இரவு 10 மணிக்கு (லண்டனில விடியக்காலமை 3 மணி) எனக்கு ஜெயன் ஃபோன் அடிச்சான். 11 மணி ஆகி, 12 மணி ஆகி .. 12:30ம் ஆகீட்டுது. சனியன் ஃபோன் வைக்க மாட்டன் எண்டுது. சாடைமாடையா நேரம் ஆகீட்டுது எண்டு சொல்லியும் கேட்கேல்லை. 'மச்சான் நான் சுவிஸ்சில ரபிக்காந்தை சந்திக்கேக்கெ உனக்கு ஏதாவது சாமான் குடுத்து விடோணும். என்ன வேணும் சொல்லு?' எண்டு அரிக்கத் தொடங்கினான்.
'தொடங்கீட்டான்...' என்று திட்டியவாறே, ‘ஒண்டும் வேண்டாமடா மச்சான்' எண்டெல்லாம் சொல்லிப் பாத்தன். ம்ஹூம்... கடைசி வரைக்கும் ஃபோனை வைக்காமல் அறுக்கத் தொடங்கினான். எனக்கு உச்சீல ஏறீட்டுது. 'சனியனே, ஒரு ரெண்டு ஜட்டி வாங்கி அனுப்பு' என்று கோபமாகத் திட்ட அதே ‘அஹு அஹு அஹு' வுடன் ஃபோனை ஒருவாறாக வைத்தான். நேரம் விடிகால 12:45. நித்திரையாகிப் போனேன். அப்பிடியே இந்தத் தொல்லை, நான் எரிச்சலின் உச்சியில் சொன்ன வசனம் எல்லாம் மறந்தும் போச்சு. ரபிக்காந்த் கொஞ்ச நாளில தன்ர சுவிஸ் சுற்றுப் பயணத்துக்குப் போய், ஜெயனோட நிண்டு படம் எல்லாம் எடுத்து ஃபேஸ் புக்கில போட்டிருந்தான்.
சுற்றுப் பயணம் முடிந்து கனடா வந்த ரபிக்காந்த் ஒரு மெசெஜ் அனுப்பியிருந்தான், ‘ஜெயன் உனக்கு ஒரு பரிசு தந்தவன். வந்து வாங்கீட்டுப் போ' எண்டு. முதலில சத்தியமா எனக்கு விளங்கேல்லை... பிறகு யோசித்துப் பாக்கேக்கைதான் நான் எரிச்சலின் உச்சியில் சொன்ன வார்த்தையின் விபரீதம் உறைச்சுது. ஜெயன் Medium Umbro Underwear (3-Pack) குடுத்து விட்டிருந்தான்.....(தலைப்பை திரும்பவும் படியுங்கோ)
மேலை இருக்கிற படத்திலை வலப் பக்கம் கறுத்த மேலங்கியோட இருக்கிறது மினக்கெட்டு லண்டனில இருந்து கனடாக்கு அண்டர்வேர் வாங்கிக் குடுத்த மங்கி, பக்கத்தில இருக்கிறது அதை அங்கையிருந்து இங்கை வரை காவிக் கொண்டுவந்த மங்கி.
23 comments:
துயரமும் சமாதானமும்.....
:-)
இது தான் உண்மையான நட்பு
க்ரித்திகன் உங்கள் தமிழ் அருமை.எழுத்து நடையும் அருமை
நிறைய படையுங்கோ.
ஒட்டு போட்டாச்சு
அருமையான நகைச்சுவையோடு நட்பின் ஆழத்தை விவரித்துள்ளீர்கள்.
//மேலை இருக்கிற படத்திலை வலப் பக்கம் கறுத்த மேலங்கியோட இருக்கிறது மினக்கெட்டு லண்டனில இருந்து கனடாக்கு அண்டர்வேர் வாங்கிக் குடுத்த மங்கி,//
இதான் ஹைலைட்டே.
மங்கிக்கு என் வாழ்த்தைத் தெரிவிக்கவும்.
ஏனென்றால் பத்து வருடம் முன்பு சினிமாத்துறையில் இசைக்கு வாய்ப்புதேடி அலைந்தபோது நானே எனக்கு சூட்டிக்கொண்ட பெயர் "இராஜா அமல் ஜெயன்."
சந்திரஜெயன் என்றொரு நாவலாசிரியர் அப்போது மிகப் பிரபலம். எனக்குப் பிடித்தமானவர். அவர் நினைவாக வைத்துக் கொண்டது.
எல்லாரும் இங்கே என்னை ஜெயன் என்றுதான் அழைப்பார்கள்.
விளங்கேல்லை கொழுவி
ஸ்மைலிக்கு நன்றி ஆதிரை அண்ணா
கார்த்திகேயன்... உண்மையான நட்பு அது இது எண்டு அவனை ஏத்திவிட்டு என்னைப் புண்ணாக்கப் போறியள்..உங்களுக்கு ஜெயனைப் பற்றித் தெரியாது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அந்தோனி முத்து...
உண்மைதான்.. ஜெயன் ஒரு தொல்லை வினைதரு தொல்லை.. ஆனால் அற்புதமான நண்பன்.. வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்
அட நட்பை இப்படியும் காடாலாமா ? பொருட்காட்சி மாதிரி போட்டு இருகிறீங்க. நல்ல நகைச் சுவை சுவை.........
ஒரு சமாதானமும் இரு துயரமும்.. /
இப்ப விளங்குதா
Die Person, verfehlt seine drei Unterwäsche beschwerte sich bei der Polizei und der Schweiz Polizei jetzt auf alle Medien informiert//
இது சுவிஸ் பேப்பரில போனவாரம் வந்த செய்தி.. கூகுளில் மாற்றிப் பார்க்கவும்
விளங்குது கொழுவி... திரும்பக் கொழுவி விடாதீங்கோ
சயந்தன் அண்ணா..
உந்தச் செய்தி வரும் முன்னரே ரபிக்காந்த் சுவிஸ்சில இருந்து வந்திட்டார்... ஆக இது திருடின ஐட்டம் இல்லை... ஐயோ ஐயோ
நிலாமதி அக்கா... இதைவிட வித்தியாசமாயும் காட்டலாம்
அழகான அறிமுகம்.
அதுபோல வாங்கி கொடுத்து.. நீங்க உங்க நட்பை எப்போது என்னிடம் காட்டபோறீங்கோ?
///வானம்பாடிகள் said...
அழகான அறிமுகம்.///
நன்றி பாலா
கலையரசன் said...
///அதுபோல வாங்கி கொடுத்து.. நீங்க உங்க நட்பை எப்போது என்னிடம் காட்டபோறீங்கோ?///
காட்டிட்ட போச்சு கலை. நம்ம அண்ணன் தினேஷ்னு ஒராள் அமீரகத்தில இருக்கார். (அண்ணாச்சி வீட்டு இஃப்தாருக்குக் கூட வந்தார்). அவர்கிட்ட என்பேரச் சொல்லி ரண்டு வாங்கிக்கங்க தலை... (எப்புடி.. எங்களுக்கு உலகம் பூரா ஆளிருக்கு)
இவன்ரை சிரிப்பு இருக்கெல்லோ ”அஹ் அஹ் அஹ் அஹ்”
அது எல்லாம் காட்டிகொடுத்திடும்,
கொஞ்ச நாள் இவனோடை ஒவ்வொரு நாளும் பின்னேரம் காலி வீதியிலை தான்,
ஆனால் ஒரு நல்ல விசயம் இவனிடம் இருந்தது அடிக்கடி தமிழ் சங்கத்துக்கு போறது, நானும் இவன் நல்ல பொடியன் போல எண்டு சொல்ல
அவன் சொன்னான் ”காலிவீதியிலை பார்க்கிறதை விட இங்கை கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கலாம் அது தான் போறது” எண்டு.
நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எண்டு வாயடைச்சுப்போனன்
இப்பிடி கனக்க கதை இருக்கு கிருத்திக்
சுவாரஷ்யமான பதிவெடா
தினேஷ் அண்ணா....
கலையரசன் உங்களிட்ட ஒண்டு கேப்பார்.. மறக்காம குடுங்கோ
ம்ம் நான் மறந்திட்டன் தம்பி,
இது பெரிய வில்லங்கமாபோச்சு
வாங்கி கொடுத்தாலும் பயன்படுமோ என்று தெரியவில்லை, அது வேற கதை
///வாங்கி கொடுத்தாலும் பயன்படுமோ என்று தெரியவில்லை, அது வேற கதை///
கலை... இப்பிடிச் சொல்லீட்டார் தினேஷ் அண்ணா... பாவம் நீ
ஜெயனின் அன்புத் தொல்லை நாடு தாண்டியும் வந்திடிச்சா... வாழ்க கனடா... வளர்க ஜெயனின் சேவை...
Post a Comment