Tuesday, 1 September 2009

மனக் கோணல்..

வந்தி அண்ணா சமீபத்தில் எழுதிய மீண்டும் துளிர்க்கும் விஷச் செடி- பகிடிவதை என்ற பதிவில் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கும் எனக்கும் இடையில் நடந்த ஒரு சின்னச் சண்டை பற்றி நான் பதிவிடப் போவதாக ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். மொறட்டுவைப் பல்கலைக் கழக நண்பர்கள் பலரும் இந்தப் பதிவுகளைப் படிப்பீர்கள், எனக்கும் ஒரு தெளிவான கோணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். முக்கியமாகக் கவனியுங்கள், மொறட்டுவைச் சூழல் தெரியாத எனக்கும், மொறட்டுவை மாணவன் ஒருவனுக்கும் இடையில் நடந்த ஒரு சின்னக் கருத்து யுத்தத்தில் நான் விளங்கிக் கொண்ட பக்கங்களைத் தருகிறேன். விளங்காத பக்கங்களுக்கு விளக்கம் தருவதும் தராமல் போவதும், பதிவுலகில் இருக்கும் மொறட்டுவை மாணவர்களின் கையில்.

நான் குறிப்பிடும் அந்த மாணவன் என்னை விட இரண்டு அல்லது மூன்று வயது இளையவன். எங்கள் பாடசாலையில் படித்தவன். பாடசாலை நாட்களில் நல்ல பொடியன். நன்றாகப் படித்தவன். ஃபேஸ் புக்கில், இவன்தான் அவன் என்று தெரியாமல் அவனை நான் கொஞ்சக் காலம் இணைத்திருந்தேன். அங்கிருந்து அவனது இணையம் ஒன்றுக்கு இணைப்புக் கிடைத்தது. அதிர்ந்தேன். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான ஒருவனது மனதில் என்ன மாதிரியான அழுக்குகள் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தான், திருகோணமலையான், மட்டக்களப்பான், வன்னியான் என்று கேவலமாகப் பிரிந்து போயிருக்கும் எமது சமூக அமைப்பில், இவன் வலிகாமத்தான்- வடமராட்சியான் என்று பிரித்து எழுதியிருந்தான். (நண்பர் ஒருவரும் இதைப் பற்றியா பதிவிடுகிறாய் என்று கேட்டு விளக்கமும் சொல்லியிருந்தார், வடமராட்சியைப் பிரிப்பன் என்பது இவனது மகுட வாசகமாம்). சரி சின்னப்பிள்ளை, ஏதோ லூசுத்தனமாச் செய்யிறான் என்றுவிட்டு பேசாமல் இருக்க, மறுபடி சுனாமியாய்ப் பொங்கினான் பொடியன்.

ஃபேஸ் புக்கில் இவனது ஸ்ரேற்றஸ்கள் அதிர்ச்சிகரமாய் இருந்தன. அவற்றில் கேவலமும், ஆபாசமும் குறைந்த ஒன்றைத் தருகிறேன். ‘முலை மசாஜ் செய்து இன்பம் காண வேணும் என்றால் மூடிய அறைகளுக்குள் செய்து கொள்ளுங்களேன். எதற்காக விரிவுரை செய்யும்போது உள்ளாடையைத் திருத்துவது போல எங்களுக்கு முன்னாலேயே மசாஜ் செய்கிறீர்கள்' இதுதான் கொஞ்சமாவது ஆபாசம் குறைந்த ஒன்று. ஏற்கனவே பாழாய்ப்போன பிரதேசவாதம் பேசுகிற பிள்ளை திடீரென்று வயதில் மூத்த விரிவுரையாளர்களைத் திட்டுகிறதே என்றுவிட்டு, ‘தம்பி, உன் மனம் விகாரப்பட்டுப் போய் விட்டது. ஆடை அசௌகரியமாக இருந்தால் சரி செய்வது இயல்பான ஒன்று. உன் போன்றவர்களுடன் தனியாக அம்மாவோ, சகோதரிகளோ இருந்தால்கூட ஆபத்து போலிருக்கிறது. நல்ல மன நல மருத்துவரிடம் ஆலோசனை கேள்' என்று ஒரு சின்ன மடல் அனுப்பினேன்.

அங்கிருந்து ஏராளமான ஆங்கிலக் கெட்டவார்த்தைகளால் அர்ச்சித்து ஒரு மடல் திரும்பி வந்தது. அதாகப்பட்டது, அவன் பெண்ணினத்தை அவமானப் படுத்தவில்லையாம். அந்த விரிவுரையாளர் சிங்களப் பெண்ணாம். சிங்கள விரிவுரையாளர்கள் அனைவரும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடந்து கொள்வதால் தான் அவ்வாறு அவர்களைத் திட்டுகிறேனாம். அப்படி இப்படி என்று ஒரு பெரிய கடிதம். அதற்கு முன் பதிவுகள் சிலவற்றில் மொறட்டுவையில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை அறிந்திருந்தேன். அந்தச் சிக்கல்களுக்குரிய எதிர்ப்பை நேர்த்தியாக வலிகுன்றாமல் பதிவேற்றி இருந்தார்கள். அதைவிட, சில பல்கலைக்கழக கலை கலாசாரக் குழுமங்களில் என்னுடைய நண்பர்கள் மற்றும் அண்ணன்கள் இருந்தார்கள். அவர்களும் இப்படியான நிகழ்வுகளுக்கான எதிர்ப்புகளை வலி குன்றாமல் காட்டுவதில் வல்லவர்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் பெயரையும் ஒரு அண்ணனின் பெயரையும் சொல்லி, 'எதிர்ப்பை நாகரிகமாகவும், வலி குன்றாமலும் எப்படி வெளிக்காட்டலாம் என்று அவர்களிடம் கற்றுக்கொள் தம்பி' என்று ஒரு சின்னத் தகவல் அனுப்பினேன்.

அட, வேதாளம் இப்போது இன்னொரு முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. 'அவர்கள் எல்லாம் முன்னுதாரணமான சீனியர்களா? என்னுடைய காதலியை சிலர் கேவலமான கேள்விகள் கேட்கும்போது பார்த்துக்கொண்டு நின்றவர்கள்தானே. ஒருவன் என் காதலியைக் கூப்பிட்டு, 'உனக்குக் காதலன் இருக்கிறானா?', 'அவனோடு _த்திருக்கிறாயா?' ‘என்னோடும் _ப்பாயா?' என்றெல்லாம் கேட்டபோது பார்த்துக்கொண்டு இருந்தவர்கள்தானே அவர்கள். அவளை அவர்கள் கேட்ட கேள்விகளால் உடைந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டாள். நான்தான் சமாதானம் செய்தேன். அத்துடன் அவளைக் கேள்வி கேட்டவர்கள் காசு கொடுத்து சுகம் காணும் அயோக்கியர்கள். அவர்கள் எயிட்ஸ் வந்துதான் சாவார்கள். இவர்கள் சொன்னதைச் செய்யாத காரணத்தால் என்னை தமிழ் மாணவர் நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கி விட்டார்கள்' என்பதாக படுபயங்கரமாகத் திட்டினான். (இது கொஞ்சம் நாகரிகப்படுத்தி நான் வெளியிடுவது என்பதை நினைவில் கொள்க). எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று.

அவனுக்குக் கடைசியாக நான் ஒரு மடல் அனுப்பினேன். ‘தம்பி, முதலில் பிரதேச வாதம் பேசினாய். பின் ஆடையைச் சரி செய்யும் பெண்ணைக் கொச்சையாய் திட்டினாய். அதற்கு நான் கண்டனம் தெரிவிக்க சிங்களர்கள் அடக்குகிறார்கள் என்றாய். அந்த அடக்கு முறைக்குரிய எதிர்ப்பை உன் பல்கலைக்கழக அண்ணன்கள் போல் நாகரிகமாகக் காட்டு என்றால் அவர்களும் சரியில்லை என்று திட்டுகிறாய். அதாவது, உன்னைத் தவிர எதையும் உனக்குப் பிடிக்கவில்லை. கொஞ்ச நாளில் உன்னை உனக்குப் பிடிக்காமல் போய்விடலாம். ஆகவே அதற்கு முன் ஒரு மன நல மருத்துவரை அணுகு' என்ற தொனிப்பட என் கடைசி மடலை அனுப்பிவிட்டு உடனடியாக அவனை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டேன்.

இந்தப் பிரச்சினையில் இன்றும் என்னைக் குடையும் கேள்விகள் இவைதான்:
  • அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறான். பிரதேசவாதம் செய்பவன் என்றால், ஏன் தமிழ்-சிங்களப் பிரச்சினை பற்றிப் பேச விளைகிறான். தன் காதலியை ஒருத்தன் பழித்ததுக்காக கோபப்படுபவனால், தானும் இன்னொரு பெண்ணை பாலியல் ரீதியான கொச்சை வார்த்தைகளால் தூசிப்பது பிழை என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போனது எதனால்?
  • நன்றாகப் படித்த, நன்றாகப் பழகிய ஒருவனின் மனதில் இத்தகைய கோணலை உருவாக்கியது யார்?அவனாகவே அதிகம் கற்பனை பண்ணிக்கொண்டானா? இல்லை எங்களது உயர் சமூகம் அவனை அப்படிக் கற்பனை பண்ணத் தூண்டியதா?
  • அவனை ஒரு வயது மட்டும் பார்த்து வந்திருக்கிறேன். அவன் எங்கே பிறழ்ந்தான்? உயர்தர வகுப்பிலா? ஆனால் இப்படிப் பிறழந்தவன் சரியாக உயர்தரம் எழுதியிருக்க முடியுமா? பல்கலைக் கழகத்திலா? அவனது காதலிக்கு நிகழ்த்தப்பட்ட அந்த வன் கொடுமையாலா?
நான் மொறட்டுவை நண்பர்களைக் கேட்க விரும்பும் கேள்விகள்
  • உண்மையிலேயே மொறட்டுவையில் இப்படியான பகிடிவதைக் கொடுமைகள் இருக்கின்றனவா? ஆண்களைப் பெண்களிடம் பூக்கொடுக்கச் சொன்னார்கள். பின்னர் ஆண்களைத் தூசணம் பேச வைத்தார்கள். அந்தப் பரிணாம வளர்ச்சியில் பெண்களிடம் கேவலமாகப் பேசுவதுவரை வந்துவிட்டார்களா?
  • கல்வி பயிலும் இடங்களில் பிரதேசவாதம் எதற்காக? இப்படியும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களா எம்மவர்கள்? (இதுக்குள்ள நாடுகடந்த அரசாங்கம் கேக்குது இவையளுக்கு)
  • நான் கேள்விப்பட்டமட்டில் மொறட்டுவை கொஞ்சம் கண்டிப்பான பல்கலைக் கழகமாமே. ஆனால் புல்லட் கோபமாக வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றால் நிச்சயமாக அவர் மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும் அந்தக் ‘கண்டிப்பு' மாயத் தோற்றம்தானா?
  • சீனியர்கள் தாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் என்று நடந்து கொள்கிறார்களா? நான் கேள்விப்பட்ட வரையில், 04 பட்ச்சை, 03 பட்ச்தான் ராகிங் செய்யலாம். அதுதான் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் எங்கட பட்ச் பொடியளைத் தேடித்திரிஞ்ச கம்பஸ் முடிச்சாக்களையே நான் கண்டிருக்கிறன். இது வக்கிரமில்லையா?
என்னுடைய தனிப்பட்ட நண்பர்கள் இருவருக்கு (ஒருவர் என் வகுப்பு, மற்றவர் அண்ணன்) ஒரு கேள்வி. நான் பதிவில் சொன்ன மாணவனை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அவனுடன் உங்களில் யாராவது பேசிப் பார்க்க முயன்றீர்களா? (முயன்றிருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை). அவனது கோபத்தில் நியாயம் இருக்கிறதா?

பி.கு: இங்கே நான் படித்த கல்லூரியில் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. நாங்கள் எப்படி மற்றவர்களோடு பழகினோம், எப்படிக் கல்லூரிச் சூழலுக்குள் உள்வாங்கப் பட்டோம் என்ற விசயங்களை எல்லாம் என்னுடைய ஓ.. கனடா பதிவில் சொல்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்

23 comments:

அருண்மொழிவர்மன் said...

இதற்குரிய காரணம் என்னவென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சிலவேளைகளில் அவன் காதலி மீது செய்யப்பட்ட வன் கொடுமை கூட அவனது, மற்றவர் மீதான் வெறுப்பிற்கு காரணமாக அமையலாம். அதே நேரம் இன்னொரு கருத்தும் எனக்கு உண்டு. எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்று நினையாமல் இதில் இருக்கும் உண்மையை சிந்திப்பது நல்லதென்று நினைக்கிறேன். ஒரு மோசமான போர்சூழலில் வளர்ந்த எம் தலைமுறைக்கு சுயசிந்தனை என்பது ஓரளவுக்கு இல்லாமலே போய்விட்டது. எம்மை மையப்படுத்தி, எம் தரப்பு முழுக்க முழுக்க சரி என்று மட்டும் பார்க்கவே பலர் பழகிவிட்டோம். மேலும், எந்த ஒரு நேரத்திலும் எம்மை நாம் சுய கேள்வி செய்யாமல் எம்மைத் தவிர எல்லாவற்றையும் விமர்சிக்கவும் பழகிவிட்டோம். இது போன்ற நிலைகளில் எம் தலைமுறையில் பலருக்கு இது போன்ற கட்டற்ற வெறுப்பு பிறர் மீது இருப்பதை அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறோம். ஆத்திரப் படாமல் யோசித்தால், எமக்காக யாரும் கவலைப்படவில்லையே, குரல் தரவில்லையே என்று ஆத்திரம் கொள்ளும் நாம், எவருக்காக குரல் கொடுத்தோம்? வேதனைப் பட்டோம்..... இந்த அடிப்படையில் ஒரு உரையாடலை (கவனிக்க, நான் கேட்பது உரையாடலை, விவாதத்தை அல்ல) வளர்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உதாரணமாக தான் பதிக்கப்பட்டது தான் அந்த மாணவரின் கோபத்திற்கு காரணம் என்றால், அவரது செயல்களும் பிறரைப் பாதிக்கத்தானே செய்கின்றன?. பாதிக்கப்பட்டவன் அப்படித்தான் செய்வான் என்றால் அவர் காதலியை தரக்குறைவாகக் கேள்வி கேட்டவன் கூட முன்னொருமுறை பிறரால் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் தானே?

சுபானு said...

என்னால் அந்த நபரை(எனக்கு யூனியர்) ஊகிக்க முடிகின்றது.. ஏன் எனில் அவர் பற்றிய - அவரின் பிரதேசவாத நடவடிக்கைகள்- நான் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் இருக்கும் போது காதிற்கு எட்டியது. அத்துடன் அந்த நபர் எனது மட்ட மாணவர்களால் அழைத்து அறிவுரையும் கூறப்பட்டார். அப்படி அழைத்து அறிவுரை கூறியும் அவர் பிரதேசவாதத்துடன் தனது தமிழ் மாணவர்களை இரண்டாகப் பிரிப்பேன் நான் அதனை நடாத்திக் காட்டுவேன் என பிரிவினையும் பேசியதால் எமது மட்டத்தால் அவர் விலக்கி வைக்கப்பட்டார்!. அன்று அந்த நபர் பேசிய வார்த்தைக்ள் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.

//இவர்கள் சொன்னதைச் செய்யாத காரணத்தால் என்னை தமிழ் மாணவர் நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கி விட்டார்கள்.

:). நடந்தது எதோ.. அவன் சொன்னது ஏதோ..

உங்களுடைய ஐயங்களுக்கு விடை அடுத்த பின்னூட்டத்தில்...

சுபானு said...

1 - உண்மையிலேயே மொறட்டுவையில் இப்படியான பகிடிவதைக் கொடுமைகள் இருக்கின்றனவா?

அவன் சொல்வது போல் இல்லாவிட்டாலும் இருக்கின்றன. ஆனால் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினுள் இல்லை.. வெளியில் மாட்டுபவர்கள் இலக்கு வைக்காக்கப்டுவது தவிர்க்க முடியாது. நாங்கள் கனிஸ்ட மாணவர்களுக்கு வெளியில் யார் எங்கு கூப்பிடாலும் போகவேண்டாம் என்றுதான் கூறுகின்றோம்.. அத்துடன் இரட்டை வேடமிடும் சில குள்ள நரி நாய்களை யாராலும் தடுக்க இயாலது..

2 - கல்வி பயிலும் இடங்களில் பிரதேசவாதம் எதற்காக? இப்படியும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களா எம்மவர்கள்?

இங்கு யாரும் நண்பர்களிடையே பிரதேசவாம் பார்பதில்லை.. மாறாக தமது பிரதேச யூனியர்களிடம்- ஏற்கனவே அறிமுகமானவர்களிடம்- சிறிது நட்ப்பாரட்டி நடக்கும் போது, மற்றவர்களால் அது விகாரப் படுத்திப் பார்க்கப்படுகின்றது. இது அவரவர் கண்ணோட்டமே.. பிரச்சனை ஒன்றைத் தலைதூக்க என்ணிணால் முதலில் அதற்து எடுக்கும் காத்திரமான உறுதியான ஆதரவுத்தளம் தான் இந்த பிரதேசவாதம்.. அதைவிடுத்து வேறு ஏதும் கிடையாது..

3 - நான் கேள்விப்பட்டமட்டில் மொறட்டுவை கொஞ்சம் கண்டிப்பான பல்கலைக் கழகமாமே.

நிட்சயமாக. ராகிங் செய்யப்பட்டது நிர்வாகத்தளத்திற்கு அறியக்கிடைத்தால் விளைவு விபரீதமே...

4 - சீனியர்கள் தாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் என்று நடந்து கொள்கிறார்களா?

:). நானும் அதை தான் நினைக்கின்றேன். இது பொதுப்படையான கருத்தும் கூட. நான் பொதுவாக ராகிங் வாங்கவில்லை. எனவே கருத்துரைக்க தகுதியற்றவன்..

ராகிங் என்பது நிட்சயமாகத் தேவை. ஆனால் அளவோடு.. இதுவே என்கருத்து.. அது ஒரு இனிய அனுபவம். நினைக்க நினைக்க சிரிப்பு வரவேண்டுமே தவிர மனதில் விரக்தியோ கோபமோ வெறுப்போ வரக்கூடாது... !

Nimal said...

நானும் மொரட்டுவையில் படித்த மாணவன் என்றவகையில்... (என் சிலபதில்கள் hypocritical ஆகவும் இருக்கலாம்...!!!)

---

உண்மையிலேயே மொறட்டுவையில் இப்படியான பகிடிவதைக் கொடுமைகள் இருக்கின்றனவா?

இருக்கின்றன என்பது ஓரளவு உண்மையே...

அந்தப் பரிணாம வளர்ச்சியில் பெண்களிடம் கேவலமாகப் பேசுவதுவரை வந்துவிட்டார்களா?

ஆம்...!

கல்வி பயிலும் இடங்களில் பிரதேசவாதம் எதற்காக?

தெரியவில்லை...!

நான் கேள்விப்பட்டமட்டில் மொறட்டுவை கொஞ்சம் கண்டிப்பான பல்கலைக் கழகமாமே.

உண்மைதான்.

அந்தக் ‘கண்டிப்பு' மாயத் தோற்றம்தானா?

இல்லை, ஆனால் அனைத்து சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் ஏதாவது ஓட்டைகள் இருக்கும். இதுதவிர பாதிக்கப்படுபவர்கள் முறையிடுவதும் மிக மிக குறைவு.

சீனியர்கள் தாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் என்று நடந்து கொள்கிறார்களா?

இருக்கலாம்...(??)

நான் கேள்விப்பட்ட வரையில், 04 பட்ச்சை, 03 பட்ச்தான் ராகிங் செய்யலாம். அதுதான் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் எங்கட பட்ச் பொடியளைத் தேடித்திரிஞ்ச கம்பஸ் முடிச்சாக்களையே நான் கண்டிருக்கிறன். இது வக்கிரமில்லையா?

செய்யிறது வக்கிரம் என்றான பின், அதை செய்ய ஒரு பட்ச்சுக்கு மட்டும் குத்தகை அடிப்படையில் உரிமை கொடுப்பது சிறந்ததோ... :)

புல்லட் said...

நீங்கள் குறிப்பிட்டது போல இருப்பவர்கள் விதிவிலக்குகள்.. மனநோயொன்றின் ஆரம்ப அறிகுறிகளாகவே நான் அதைப்பார்க்கிறேன்..
மேலும் நான் பிரச்சனைப்பட்டது 2004 இல்.... அதன் பிறகு தமிழ்ரக்ள ரகசியமாக செய்யும் ராகிங் குறித்து முறையீடுகள் கிடைத்தவேளை லெக்சரர்கள் களத்தில் இறங்கி கட்டுப்படுத்த வெளிக்கிட்டதில் தற்போது 2009 இல் எந்த ஒரு சீனியரும் ஜ+னியருடன் கதைக்க முடியாது என்றாக்கி விட்டார்கள்..அதனால் பெரும் சந்தோசம்... ஆனால' தனி ரூம்களுக்கு வரச்சொலலி வதைப்பதும் கோயிலுக்கு வரச்சொல்லி வதைப்பதும் தற்போதும் தொடர்கிறது.. ஆளால் பெரியளவுக்கு இல்லை... ராகிங் என்று கூப்பிடும் சீனியரினை பாவம் பார்க்காமல் பொலிசில் பிடித்து குடக்க அனைவரும் முன்வரவேண்டும் என்பதே தற்போதைய தேவை

ஆதிரை said...

கீத்...

//சிங்கள விரிவுரையாளர்கள் அனைவரும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடந்து கொள்வதால் தான் அவ்வாறு அவர்களைத் திட்டுகிறேனாம்.

ஏற்றுக் கொள்ள மாட்டேன். வேண்டுமானால், விரிவுரையாளர்கள் "அனைவரும்" என்பதை வலிதற்றதாக்க பல உதாரணங்களை என்னால் தர முடியும்.

ஆதிரை said...

உண்மையில் நீங்கள் இங்கு குறிப்பிட்ட மாணவன் தொடர்பாக நடந்தேறிய சம்பவங்களுக்கும் பகிடி வதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஆதிரை said...

இவர்கள் சொன்னதைச் செய்யாத காரணத்தால் என்னை தமிழ் மாணவர் நிகழ்வுகளில் இருந்து ஒதுக்கி விட்டார்கள்.


என் கடைசி மடலை அனுப்பிவிட்டு உடனடியாக அவனை என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டேன்.

:)

Unknown said...

அருண்மொழிவர்மன் அண்ணா... உங்களின் பெரும்பாலான கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். ஆனால் இங்கே வேறுபடுகிறேன்
///உதாரணமாக தான் பதிக்கப்பட்டது தான் அந்த மாணவரின் கோபத்திற்கு காரணம் என்றால், அவரது செயல்களும் பிறரைப் பாதிக்கத்தானே செய்கின்றன?. பாதிக்கப்பட்டவன் அப்படித்தான் செய்வான் என்றால் அவர் காதலியை தரக்குறைவாகக் கேள்வி கேட்டவன் கூட முன்னொருமுறை பிறரால் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் தானே?///

அப்படியானால இது ஒரு சங்கிலித் தொடர் போல் நீளுமல்லவா... இந்தக் கொடுமை என்னோடு போகவேண்டும் என்று ஒருவன் யோசித்தாலே நின்றுவிடும்.. (சமீப காலத்தில் அப்படி யோசிக்கிறார்கள். அண்ணான் ஒருவர் சொன்னார். அது அப்படியே செவ்வனே வளர்ந்தால் நன்று)

Unknown said...

சுபானு, அந்த மாணவரை உங்களது மட்டம் விலக்கி வைத்ததுக்குரிய காரணங்களைத் திரித்துக் கூறியிருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன்.

///ராகிங் என்பது நிட்சயமாகத் தேவை. ஆனால் அளவோடு.. இதுவே என்கருத்து.. அது ஒரு இனிய அனுபவம். நினைக்க நினைக்க சிரிப்பு வரவேண்டுமே தவிர மனதில் விரக்தியோ கோபமோ வெறுப்போ வரக்கூடாது... !//

உங்களது இந்தக் கருத்துக்கு உடன்படுகிறேன்... 100 சதவீதம் :)

Unknown said...

நிமல், ஐயங்களுக்குப் பதில் தந்ததுக்கு நன்றி

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

புல்லட்,
///ராகிங் என்று கூப்பிடும் சீனியரினை பாவம் பார்க்காமல் பொலிசில் பிடித்து குடக்க அனைவரும் முன்வரவேண்டும் என்பதே தற்போதைய தேவை///
கடுமையான பாதிப்போ புல்லட்டுக்கு?? (சும்மா பகிடிக்குச் சொன்னனான் மச்சான்)... நீங்களே கோபப் படேக்க எவ்வளவு மோசமா நடந்து கொண்டிருப்பார்கள் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. உங்களுக்கு முதல் மட்டத்திலிருந்து கொடுமையாக ராகிங் செய்வதற்கு எதிராக புதியவர்களை அறிவுறுத்தி நடத்திச் செல்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.. சந்தோசமாக இருக்கிறது.

பேராசிரியர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் மும்முரமாகச் செயற்படுவது சந்தோசமாக இருக்கிறது.

Unknown said...

ஆதிரை அண்ணா,
பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருந்தீர்கள். குறிப்பிட்ட பொடியனின் மன ஓட்டத்தை வைத்தே அவன் குழம்பிப் போய் இருப்பது தெரிந்தது.. அதனால்தான் அவனை நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கினேன்... உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லைய்ப்ப் தெரியாது, உங்கட பொடியள் வெடி கொழுத்தினது பற்றி ஒரு கொமெண்ட் நான் ஃபேஸ்புக்கில போட அதுக்கு நீங்கள் சொன்ன விளக்கம், கோபப் படாமல் விளக்கினீர்கள்... அது போலத்தான் இவனுக்கும் இதெல்லாம் பிழை என்றேன்... வாதம் செய்பவனோடு தொடர்ந்து மோதலாம், விதண்டாவாதக்காரனோடு?...

சாதாரண ஃபேஸ்புக்கில் எனக்கே இவ்வளவு கோபம் வந்தால், அவனைச் சும்மாவா ஒதுக்கி வைத்திருப்பார்கள் மேல்மட்ட மாணவர்கள்... நல்ல காலம் ஆளுக்கு ஒருத்தரும் அடி போடேல்லை.

மற்றது நான் அவன் பகிடி வதையால் தான் பாதிக்கப்பட்டதாக சொன்னபடியால்தான் உண்மையை அறிய எழுதினேன்... பாவம் அவனுக்குத் தெரியாது போல, எங்களுக்கும் அங்கே இன்றும் நட்புகள் இருப்பது. என்ன நான் முன்னரே சொன்ன மாதிரி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இருவரை அவன் தூக்கி எறிந்து பேசியது கன காலமாக உறுத்திக் கொண்டு இருந்தது... இப்போது உறுத்தல் குறைந்து விட்டது.

அருண்மொழிவர்மன் said...

வ்ணக்கம் கீத்,
அப்படியானால இது ஒரு சங்கிலித் தொடர் போல் நீளுமல்லவா... இந்தக் கொடுமை என்னோடு போகவேண்டும் என்று ஒருவன் யோசித்தாலே நின்றுவிடும்.. (சமீப காலத்தில் அப்படி யோசிக்கிறார்கள். அண்ணான் ஒருவர் சொன்னார். அது அப்படியே செவ்வனே வளர்ந்தால் நன்று)//

இதே கருத்தைத்தான் நானும் சொன்னேன் கீத். ஆனால் நான் சொன்ன விதத்தில் தெளிவிருக்கவில்லையோ தெரியாது. தான் பாதிக்கப்பட்டது தான் அவர் மற்றவர்களைப் பாதிக்கக் காரணம் என்றால் இது போன்றா சமாளித்தல்களாஇயே இவரைப் பாதித்தவர்களும் சொல்வார்கள் என்ற ரீதியில் நான் சொல்ல முயன்றேன்....

Unknown said...

அருண்மொழிவர்மன் அண்ணா..
நான் பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டேன். மன்னிக்கவும்.

///தான் பாதிக்கப்பட்டது தான் அவர் மற்றவர்களைப் பாதிக்கக் காரணம் என்றால் இது போன்றா சமாளித்தல்களாஇயே இவரைப் பாதித்தவர்களும் சொல்வார்கள்///
வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்கிறேன் :)))

பால்குடி said...

அந்த மாணவனை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்கு தெரியும். அவன் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் அவன் தங்கிய வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. நால்வரில் மூவர் ஒரே பாடசாலையிலிருந்தும் இவன் ஹாட்லியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களாவர். ஒருவருட முடிவில் (அவர்களுக்கு அடுத்த வருட மாணவர்களின் உயர்தரப் பெறுபேறு வெளிவந்த பின்னர்) அவர்களுக்கிடையில் பாடசாலைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டு பிரதேசவாதம் ஆனது. ஒரு கட்டத்தில் அவனை வேறு இடத்துக்கு மாறும்படி ஆலோசனை கூறப்பட்டபோதும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. (தானும் இன்னுமொருவனுமே சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்ததென்றும் மற்றவர்கள் பிறகே வந்தனர் என்பது அவனது விவாதம்). ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையில் விவாதம் உச்சக்கட்டமாகி மற்றைய மாணவன் ஒருவன் கதிரையால் அடிக்கப்போகும் (அடிக்கவில்லை) நிலைக்கு சென்றது. அதனால் அவன் வீடு மாறினான்.

அதன் பின்னர் இவனது பதில் நடவடிக்கைகள்தான் பிழையானதாக இருந்தன. தன்னுடைய தங்குமிடத்தில் நடந்த பிரச்சினையை எல்லோருக்குமான பிரச்சினையாக மாற்றினான். பிரதேச வாதத்தை கையிலெடுத்தான். (மூவரில் ஒருவன் அவர்களுடைய மட்ட தமிழ் பிரதிநிதி என்பது வேறு விடயம்). அவர்களும் அதை மாணவர்கள் அனைவருக்குமான பிரச்சினையாக மாற்ற முன் நின்றார்கள். அதற்கிடையில் அடிதடியும் நடந்தது. ஆனால் அதற்கும் இந்தப் பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என என்னால் உறுதியாகக் கூற முடியும். பிரச்சினைகளை தொடர்ந்து வளர விடாமல் செய்வதற்காக அக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் படித்த இறுதியாண்டு மாணவர்களின் கூட்டத்தில் அவன் தமிழ் மாணவர் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவன் நடத்தைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டது உண்மையே. அக்காலத்திலேயே கீத் நீர் மாட்டுப்பட்டிருக்கிறீர். அவன் பாதிக்கப்பட்டது உண்மையே, ஆனால் அதை அவன் வெளிக்காட்டிய விதத்தால் (அவன் செய்ய முற்பட்ட பதில் நடவடிக்கைகளால்) அவனுக்கு உதவ முடியாத நிலை உருவாகியது. அது மற்றைய மாணவர்களை இவன் மேல் எதிராகத் திருப்ப வழிசமைத்துவிட்டது. மற்றும்படி இது பகிடிவதையுடன் சம்பந்தப்பட்டதல்ல (முன்னரே கருத்துக் கூறப்பட்டுள்ளது) பல்கலைக்கழகத்தைப் பற்றி படித்த மாணவர்கள் பலர் கருத்துரைத்திருக்கிறார்கள்.

Unknown said...

நன்றி பால்குடி... நீங்கள் பின்னூட்டம் இடவில்லையே என்றுதான் காத்திருந்தேன்.. இப்போ இன்னும் தெளிவாகிவிட்டது

Jeya-S said...

:(

Jeya-S said...

உண்மையில் வாசிக்கும் போது வேதனையாக இருக்கிறது சில விடயங்கள் ...அந்த மாணவனுக்கு நல்ல புத்திமதியை புகட்ட முடியாதா அவனது சக தோழர்களால் ...????

ஆனாலும் அவனது காதலிக்கு கொடுக்கப்பட்ட பகிடிவதை கொடுமை தான் ...நானும் ஒரு பெண் என்ற வகையிலும் பகிடிவதை என்ற பெயரில் வதை பட்டவர்களில் நானும் ஒருத்தி என்ற வகையிலும் கூறுகிறேன் அது கொடுமை தான்... அந்த தாக்கம் இப்போது கூட என்னில் உள்ளது .... பேசாமல் பகிடி வதைக்கு பதிலாக சித்திரைவதை என்று பெயரை வைத்து வதைக்கலாம்...

துணிவோடும், அக்கறையோடும் இந்த பதிவை இட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

ஜெயா..
திருத்த முயன்றார்களாம் முடியவில்லை

பால்குடி said...

தன்னுடைய காதலிக்கு கொடுக்கப்பட்ட கொடுமை என்பது அவனால் புனையப்பட்ட கதை என்றே அறிய முடிகிறது. அதற்காக பெண்களுக்கு எதுவுமே நடப்பதில்லை எனக் கூற வரவில்லை. அம்மாணவனுக்கு நண்பர்களின் சொல் கேட்டு, மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் பழக்கம் இயல்பாகவே குறைவு எனலாம். இவ்விடயத்திலும் அவனை நெறிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை.

priyanka87 said...

Very bad