***தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதை நெருங்கியவை பற்றிய தொகுப்பு***
அரசியல்இலங்கையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 80,000 இலங்கையர்கள் வேலை இழந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 300,000 பேர் சொந்த வருமானத்தை இழந்திருப்பதாகவும் வேலை இழந்தவர்களுக்கான தேசிய மையம் (National Centre for Job Loosers) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக போரிலீடுபட்டிருந்த இலங்கை அரசுக்கு இந்தச் செய்தி ஒரு அதிர்ச்சி. ஆனால் அதை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்கள் என்பதை உற்று நோக்கினால் இலங்கை அரசாங்கத்தின் அற்புத நிர்வாகத் திறமையைப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமா உலக நாடுகள் அனைத்துக்கும் நல்ல தீர்வும் அதுதான். இலகுவான தீர்வு. பின்பற்றவேண்டிய நடைமுறைகள் இதோ:
- போர் அழிவைக் காரணம் காட்டி உலக வங்கியிடம் கடன் வாங்குங்கள்
- 50,000 பேரை ராணுவத்தில் சேருங்கள். 80,000 பேர் வேலை இழந்த மறு நொடியே 50,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு.
பொருளாதாரம்
கனேடிய நிறுவனங்கள் மிக வேகமாகப் பொருளாதார நெருக்கடிக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதாக கனடாவின் புள்ளிவிபரவியல் அமைப்பு (Statistics Canada) அறிவித்திருக்கிறது. சரியான முறையில் திட்டமிடப்பட்ட ஆட்குறைப்பு மூலம் இந்த நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ் அமைப்பு சொல்லும் இன்னொரு தகவல்தான் கொஞ்சம் கவலைப் படுத்துகிறது. என்னதான் ஆட்குறைப்பு மூலம் தங்களது Pay Rollல் பெருமளவு சேமித்தாலும், கனேடிய நிறுவனங்களின் விற்பனைத்திறன் வெகு வேகமாக வீழ்வடைவதால் மூலப்பொருட்கள் நிறுவனங்களுக்கே தேங்க ஆரம்பித்திருப்பதன் காரணமாக, செலவைக் குறைக்கும் பொருட்டு மேலும் ஆட்குறைப்புகள் இந்த நிறுவனங்களுக்கு அவசியமாகின்றது. இது ஒரு சாதாரண நபருக்கு நல்ல செய்தியல்ல. மேலும் கனேடிய நிறுவனங்களின் Labour Productivity அதிகரித்திருக்கிறது. இருந்த போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP), மனிதர்களின் வேலை செய்த நேரமும் (Hours Worked) கவலைக்கிடமான எதிர்மறை வளர்ச்சியையே காட்டுகின்றன. அது சம்பந்தமாக Stats Canada வெளியிட்ட ஒரு சிறிய வரைபடம் கீழே:
இதே வேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான பங்குச்சந்தை விலைகள் Toronto Stock Exchange குறியீட்டு எண்ணை தூக்கி நிறுத்தியிருப்பது கொஞ்சம் நிம்மதி அளிக்கும் செய்தி.
தொழில் நுட்பம்
Research In Motion (RIM) நிறுவனம் தனது Black Berry குடும்பத்தில் மேலும் ஒரு அங்கத்தவரை இணைக்கப் போகிறது. இந்தப் புதிய Smart Phone, Blackberry Tour என்று அழைக்கப்பட இருக்கிறது. சாதாரண பாவனையாளர்கள் Black Berry Curve பயன்படுத்தும் க்கும் பெரிய Corporate முதலாளிகள் பயன்படுத்தும் Black Berry Bold க்கும் இடைப்பட்ட ஒரு வர்க்கமாக இது இருக்குமாம். இதன்மூலம் இரு சாராரிடமும் இந்த புதிய Smart Phone ஐக் கொண்டு சேர்த்து RIMன் வருமானத்தை மேலும் கூட்டுவதற்குரிய ஒரு முயற்சிதான் இது என RIMஇன் Co-Chief Excecutive Jim Balsillie தெரிவித்திருக்கிறார். RIM தனது வலைத்தளத்தில் போட்டிருக்கும் Black Berry Tourன் படம் கீழே: (பாத்து ரசிக்கதாங்க முடியும் என்னால). இன்றைக்கு (ஜூன் 16 2009) இது வட அமெரிக்காவில் அறிமுகமாகிறது.விளையாட்டு
ICC T20 ன் அரையிறுதிக்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. முதல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து ஆகிய ஒரு சுலபமான அணிகளிடமும் பரிதாபமாகத் தோற்று இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. தோனியின் தலைக்கு குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்திய ரசிகர்கள். கொடும்பாவிகள் எரிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. Cricket is a great leveller. தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் மோத உள்ளன. ஏலவே சொன்னது போல ஸ்மித்தின் தென்னாபிரிக்கா தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன். இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிகளில் ஓய்வெடுக்க அனுமதி தருமாறு தோனியும், சச்சினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டிருக்கிறார்களாம். IPL போட்டிகளில் விளையாடியதால் அடைந்த உடல் ரீதியான களைப்பே தோல்விக்குக் காரணம் என்று இந்தியப் பயிற்றுவிப்பாளர் Gary Kirsten தெரிவித்த கருத்துக்கு இந்திய வாரியம் தாங்கள் எந்த வீரரையும் IPL ல் விளையாடுமாறு நிர்ப்பந்திக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறது. (மறுபடி ஆரம்பிச்சுட்டங்க).Confederation Cup Soccer தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகியிருக்கிறது. 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ‘A' குழுவில் ஸ்பெயின், ஈராக், தென்னாபிரிக்கா, நியூசீலாந்து அணிகளும், ‘B' பிரிவில் பிரேஸில், இத்தாலி, ஐக்கிய அமெரிக்க குடியரசு, எகிப்து அணிகளும் ஆடுகின்றன. முதல் இரு நாட்களில் ஸ்பெயின் நியூசிலாந்தை 5-0 என்றும் பிரேசில் எகிப்தை 4-3 என்றும், இத்தாலி ஐக்கிய அமெரிக்கக் குடியரசை 3-1 என்றும் தோற்கடித்தன. ஈராக் தென்னாபிரிக்கா ஆட்டம் 0-0 சமநிலையில் முடிந்தது.
வட அமெரிக்காவின் புகழ் பெற்ற Stanly Cup Ice Hockey போட்டித் தொடரை Pittsburg Penguins அணி வென்றது. 7 போட்டிகள் கொண்ட இறுதியாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் Detroit Red Wings அணியை வெற்றிகொண்டு ஸ்டேன்லி கோப்பை இறுதியாட்டத் தொடரை 4 போட்டிகளுக்கு 3 போட்டிகள் என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே போல் National Basketball Association போட்டித் தொடரின் இறுதியாட்டத் தொடரை Los Angeles Lakers அணி 99-86 என்ற கணக்கில் Orlando Magics அணியை தோற்கடித்து 4 போட்டிகளுக்கு 1 போட்டி என்ற கணக்கில் கைப்பற்றியது.
பொழுதுபோக்கு
செல்வராகவனின் இயக்கத்தில், G.V. பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி சிவகுமார், ரீமா சென், ஆண்ட்ரியா ஜெர்மையா, ரா. பார்த்திபன் நடிப்பில் உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பாடல்கள் ஜூன் 14 வெளியிடப்பட்டன. இரண்டு Background Scoreகள் உட்பட 10 Track கள். பெரும்பாலானவை பழைய செல்வராகவன் படப் பாடல்களை நினைவுபடுத்துகிறன. ஒரு பாடல் யுவனின் ‘அடடா வா அசத்தலாம்' பாடலை நினைவுபடுத்துகிறது. ஆனால் 3 இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களை வைரமுத்து எழுதி விஜய் ஜேசுதாஸ், P. B. ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பாடிய பாடல்கள் படம் பற்றிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியுள்ளன. இசைவெளியீட்டு விழாவுக்கு செல்வாவோடு ‘டூ' விட்ட யுவனும் வந்திருந்தார். பாடல்கள் பற்றிய எனது பார்வ இங்கே.
நயன்தாரா பிரபுதேவா காதல் மேட்டர் ஊரெல்லாம் சந்தி சிரிக்கிறது. அவர்களின் திருமணப் படம் என்று ஒன்றை ஒரு பத்திரிகை வெளியிட அவர்கள் மீது வழக்குப் போடுவேன் என நயன்தாரா மிரட்டியிருக்கிறார்.
Univercell Vijay Awards வெற்றி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன். ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நடிகை நயன்தாரா. மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த திரைக்கதையாளர் ஆகிய நான்கு விருதுகளை நடிகர் கமல்ஹாசன் பெற்றார். சூர்யாவுக்கு விருது வழங்கும் போது 'சிவகுமார் எனது அண்ணன் என்றும், சூர்யா தான் பெறாத மகன்' என்றும் கமல் கூற, சிவகுமார் கண்கலங்க ஒரு Emotional Sequence அங்கே அரங்கேறியது. மற்ற வெற்றியாளர்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
நயன்தாரா பிரபுதேவா காதல் மேட்டர் ஊரெல்லாம் சந்தி சிரிக்கிறது. அவர்களின் திருமணப் படம் என்று ஒன்றை ஒரு பத்திரிகை வெளியிட அவர்கள் மீது வழக்குப் போடுவேன் என நயன்தாரா மிரட்டியிருக்கிறார்.
Univercell Vijay Awards வெற்றி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன். ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நடிகை நயன்தாரா. மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த திரைக்கதையாளர் ஆகிய நான்கு விருதுகளை நடிகர் கமல்ஹாசன் பெற்றார். சூர்யாவுக்கு விருது வழங்கும் போது 'சிவகுமார் எனது அண்ணன் என்றும், சூர்யா தான் பெறாத மகன்' என்றும் கமல் கூற, சிவகுமார் கண்கலங்க ஒரு Emotional Sequence அங்கே அரங்கேறியது. மற்ற வெற்றியாளர்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
மற்றவை
புதிதாக Blog ஆரம்பித்திருக்கும், ஆரம்பிக்க நினைக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு Show Dial Jaya TV என்ற பெயரில் ஜெயாவில் ஒளிபரப்பாகியது. மூத்த பதிவர் Cableசங்கர் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
5 comments:
சூப்பர் காக்டெயில்..கலக்குங்க
வணக்கம் கிருத்திகன்
தங்களுடைய பதிவுகள் நன்றாக உள்ளது.
பள்ளிக்காலத்தில் இருந்த அதே கிரிக்கெட் ஆர்வம் சூப்பர். கனடா வாழ்க்கை எப்படி?
இப்படிக்கு
பள்ளி நண்பன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவன் மற்றும் வர்மன். பள்ளி நண்பன் வர்மனா?? எனக்கு ஒரே ஒரு வர்மனை ஞாபகம்.. அது ஜெயவர்மன்.. அவன் லண்டனில் அன்றோ இருக்கிறான்?
im tharjanan (varman).
@வர்மன்..
நிருபரே.. நீங்களா அது.. வருகைக்கு நன்றிகள்
Post a Comment