Friday, 5 June 2009

நாங்களும் போடுவம்ல... 32 கேள்வி

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கென்ன தெரியும்...எங்க அப்பா அம்மா வச்ச பேர் இது. கீத் என்ற nick name அப்பாவின் கிரிக்கெட் ஆர்வதால் வந்தது.... Keith Miller அவரது favorite all-rounder. Nick Name ஐ விட நிஜப் பெயரான ‘கிருத்திகன்' ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இதுவரை வெறும் 29 பெற்றோர்கள் மட்டுமே உபயோகித்த பெயர் என 'Google' சொல்கிறது

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சமீபத்தில் நான் செய்யாத பிழை ஒன்றைக் காரணம் காட்டி அக்கா புருஷன் வம்புக்கிழுக்க எனக்குள்ளும் சாத்தான் வேதம் ஓதியது. வீட்டை விட்டு வெளியே போடா என்றான்... மூட்டை முடிச்செல்லம் கட்டிக்கொண்டு பாக்கெட்டில் கையை விட்டேனா வெறும் 4 டாலர் 77 சதம் மட்டும் இருந்தது... உத்தியோகம் வேறு இல்லையா, அப்பாவின் நிழலை நினைத்தேன்.... அழுதேன்..விடிய விடிய

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்.... ஆனா இப்பெல்லாம் கையால எழுதுறது எப்படி என்றே மறந்து விட்டேன்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா சமைத்த குத்தரிசிச் சோறும் மீன் குழம்பும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நிச்சயமா.... (என் நட்பின் கற்பு பற்றி என் நண்பர்களைக் கேளுங்கள்)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
Casuarina Beach, Jaffna மற்றும் Ontarioவின் சில Lake Beaches தவிர வேறெங்கும் குளித்ததில்லை.... அருவியில் குளிக்க கொள்ளை ஆசை

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பார்க்கும் நபர் ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்து

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: நல்ல நண்பன் நான்
பிடிக்காத விஷயம்: என்னோட கூடவே பிறந்து என்னை அணுவணுவாய்க் கொல்லும் அந்த சாத்தான் - முன் கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
அவள் முகம் கூட எனக்குத் தெரியாது... அதை நான் தெரிந்து கொள்ளமுன் அவள் தரும் கனவுகள் பிடித்திருக்கின்றன

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
ஒரு பெரிய லிஸ்ட்... அப்பா, அம்மா, தம்பி...அப்புறம் என் பள்ளிக்கூட நண்பர்கள்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பூப் போட்ட நீல T-shirt. என் உழைப்பில் வாங்கிய மிகச் சொற்ப பொருட்களில் ஒன்று

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணாளனே.. (ஆனந்த தாண்டவம்).

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நிச்சயமாகக் கறுப்பு..... அழுக்காக்கவே முடியாதல்லவா

14.பிடித்த மணம்?
நான் Gully Cricket ரொம்ப ஆடியிருக்கிறேன். Opening Bowler வேறு. அந்த புது Tennis Ball இல் ஒரு வாசம் வரும்.... அந்த வாசம் விளையாட்டின் மேலிருந்த காதலால் மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. அப்படி விளையாடிய மாலைப் பொழுதுகள் எல்லாம் தான் என் வசந்த காலங்கள்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
பெரியளவில் எனக்கு பதிவர் வட்டத்தில் நண்பர்கள் இல்லை. இருந்தும் ஒரு லிஸ்ட் இதோ:
john: நெடுநாள் நண்பன்.....
நசரேயன்: என்னை அவரது ‘கந்தசாமி' விமர்சனம் மூலம் முட்டாளாக்கியதற்காக
குடந்தை அன்புமணி: 'திருச்சேறையில் எனது கோடைக் காலங்கள்' கட்டுரைக்காக
சென்ஷி & நையாண்டி நைனா: காமெடி
ஹரிணி அம்மா & அமிர்தவர்ஷிணி அம்மா: தங்கள் பெண்குழந்தைகளின் பெயர்களை அடையாளமாக்கிக் கொண்டதால்....
(எனக்கும் 4, 5 அக்காமார் இருக்காங்க...அதில 3 பேர் பெண் குழந்தை பெற்றவர்கள் தான்.... ஆனா ரசனை சுழியம்.)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
யாருமே அனுப்பலை.... நானாத்தான் போட்டிருக்கேன்

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்: பார்க்க, விளையாட, செஸ்: விளையாட, Soccer, Tennis 2ம் பார்க்க... (நான் சானியா மிர்சா காலத்துக்கு முன்னமே பார்க்க ஆரம்பிச்சுட்டேங்கோ....)

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்... 2007 மே 26 தொடக்கம்.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
கொஞ்சமாவது யதார்த்தம் இருந்தால் பிடிக்கும். (ஆனா எல்லாப் படமும் பார்ப்பேன்... உதாரணம்: Crash (1996 Movie))

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஆனந்தத் தாண்டவம்

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் எழுதிய ‘சிலிர்ப்பு' என்ற சிறுகதை உட்பட 29 சிறுகதைகளின் தொகுப்பு. (வெளியீடு: காலச்சுவடு அறக்கட்டளை)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பெரும்பாலும் படம் இருப்பதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
இரண்டுமே மௌனம். தேவையான கணங்களில் பிடிக்கும், தேவையற்ற நொடிகளில் கடுப்படிக்கும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
எவ்வளவு தூரம் என்று தெரியாது. சிறிலங்கா யாழ்ப்பாணத்தில், நவிண்டில் என்னும் குக்கிராமம் to கனடா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அதை நான் எப்படிச் சொல்வது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
துரோகம், போலியான வாழ்வு. (விளக்கம் சொல்லணும்னா ஒரு நாலஞ்சு பதிவு வேணும்)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
நுவர-எலியா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாக (எல்லாருமே இதுதான் சொல்றாங்க இல்லே)...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மனைவின்னு ஒருத்தி வந்தப்புறம் சொல்றேனே....

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் உழன்று துன்பத்தில் மடிந்தவர் எவருமில்லை. (வைரமுத்துவுக்கு நன்றி)

9 comments:

Suresh said...

மிக அழகான உண்மையான பதில்கள் தமிழர்ஸில் வோட்டு போட்டாச்சு

தமிழ் said...

/32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் உழன்று துன்பத்தில் மடிந்தவர் எவருமில்லை. (வைரமுத்துவுக்கு நன்றி) /

உண்மை தான்

நன்றி நண்பரே

வெற்றி-[க்]-கதிரவன் said...

//16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
யாருமே அனுப்பலை.... நானாத்தான் போட்டிருக்கேன்//

-:) nallarukku

Unknown said...

சுரேஷ், பித்தன், திகழ்மிளிர்.. வரவுக்கும் வாக்குக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்

நசரேயன் said...

//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
அவள் முகம் கூட எனக்குத் தெரியாது... அதை நான் தெரிந்து கொள்ளமுன் அவள் தரும் கனவுகள் பிடித்திருக்கின்றன//
நானும் இப்படித்தான் ஒரு காலத்திலே கனவு கண்டேன்

Unknown said...

@நசரேயன்.... ஏன் தங்கமணி கனவில் வந்த ரேஞ்சில் இல்லையோ!!!!

SPIDEY said...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY DUDE

Anonymous said...

wooooow..............
no mre words ..
ennakku pidiththathu
ne neyakave erukinrai..
athan pirathipalippu
unnudaiya pathilkalil kankiren..

Unknown said...

வாழ்த்துக்கு நன்றி Spidey
John: நீயும் போடலாமே 32 கேள்விக்கு பதில்கள்