இந்த சுவாரஷயமான விளையாட்டுக்கு என்னை அழைக்காமல் விட்ட அனைத்துத் துரோகிகளுக்கும் அனானி பகவான் தண்டனை வழங்கட்டும். லோஷன் அண்ணாவுக்கு இனிமேல் அனானி பகவான அருள் மட்டுமே வழங்குவார். லோஷன் அண்ணா செய்தது மாதிரியே மூலமான நிபந்தனைகளிலிருந்து விலகி எனக்குப் பிடித்த, பிடிக்காத ஆட்கள் பற்றிப் பதிவிட்டிருக்கிறேன்.
அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்: தமிழ் ஆட்களில் யாரும் இல்லை. சில தலைவர்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள், பேச்சு, நிர்வாகத்திறண் இவற்றைத் தாண்டி, பார்த்தவுடனே ஒரு ஈர்ப்புத் தோன்றும். ஆங்கிலத்தில் Charismatic Appeal என்று சொல்வார்கள். சே-குவேரா, ஜோன்.எஃப்.கென்னடி, ஆபிரஹாம் லிங்கன், ராஜீவ் காந்தி, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரிடம் அந்த ஈர்ப்பை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான ஈர்ப்புடன் இப்போது கண்ணில் தெரிபவர், பாரக் ஒபாமா. மீண்டும் சொல்கிறேன், இந்த ஈர்ப்புக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை.
பிடிக்காதவர்: பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இருவரைச் சொல்வேன். முதலாமவர் மாவை சேனாதிராசா. வீ.ஆனந்தசங்கரிக்கும் இவருக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். ஆனந்தசங்கரி ஒரு விஷயத்தில் உடன்பட மறுத்து அதைப் பொதுவில் சொன்னார். அவர் துரோகி. மாவை அதே விஷயத்தில் சங்கரியின் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாதபடியால், மக்கள் பிரதிநிதி. இரண்டாமவர் மக்கள் பிரதிநிதியாகப் பின்வாசல் வழியே நுழைந்த, எந்த ஆளுமைகளுமற்ற செல்வராசா கஜேந்திரன் என்கிற ஜந்து.
எழுத்தாளர்கள்
பிடித்தவர்: என்றைக்கும் இளைமையான சுஜாதாவை எப்போதுமே பிடிக்கும். உயிருடன் இருக்கும் பலரது எழுத்துக்களை வாசித்தாலும் இன்னும் எவரும் எனக்கு ஆதர்சமாகவில்லை என்பதே உண்மை.
பிடிக்காதவர்: தமிழ் எழுத்தாளர்களில் பிடிக்காதவர் என்று ஒருவரையும் கோடிட்டுக் காட்டமுடியாது. மேல் நாட்டில் இப்போது அடிக்கடி Best Sellers கொடுக்கும் டான் ப்ரவுணைப் பிடிப்பதில்லை. மதங்களுக்கெதிரான போராட்டத்தை இவரது நாவல்களைவிட வேறெதுவும் இவ்வளவு கொச்சையாகப் படம்பிடிப்பதில்லை.
சினிமா
பிடித்த நடிகன்: நாகேஷ் போய்விட்டார். இப்போது கமல் பிடிக்கும். புதிய தலைமுறை நடிகர்களில் பிரசன்னா. எல்லோரையும் விட ஏனோ எனக்கு லியோ டிகாப்ரியோவைப் பிடிக்கும்.
பிடிக்காத நடிகன்: திலகங்கள் இருவரையும் பிடிக்கவே பிடிக்காது. வம்பு செய்யும் சிம்பு என்கிற துஷ்ட ஜந்துவை இந்தப் பட்டியலில் சேர்க்கத் தயக்கமாய் இருந்தாலும் சேர்த்தே ஆக வேண்டும்.
பிடித்த நடிகை: ஸ்ரீதேவி (கண்டிப்பாக நடிப்புக்காக மட்டும் அல்ல என்பது உங்களுக்கே தெரியும்)
பிடிக்காத நடிகை: பெரிய லிஸ்ட் இருக்கிறது. முன்னணியில் ஆச்சி மனோரமா. இவர் எந்த பாஷயில் படம் நடித்தாலும் மகனிடம் உணர்ச்சி பொங்கப் பேசும்போது ஒரே நடிப்பு மட்டுமல்ல, ‘யெய்யா யெய்யா' என்று ஒரு வசனமும் வைத்திருக்கிறார். இவர் கிராமத்து அம்மாவாகவோ, பாட்டியாகவோ நடித்து இந்த ‘யெய்யா' போடாத படம் ஏதுமிருந்தால் சொல்லவும். இவருக்கு அடுத்ததாய் இருப்பது இவரைவிட மோசமாக எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் கலைராணி. அதைவிட உச்சக்கடுப்பு ‘மச்சாள்' மீது.
பிடித்த இயக்குனர்: தமிழில் மிகவும் ஆதர்சம் என்று சொல்கிற அளவுக்கு யாரையும் பிடிக்கவில்லை இதுவரை. என்னதான் பெரியளவு Classic Movies தராவிட்டாலும் மார்ட்டின் ஸ்கார்ஸசி படங்கள் என்னைக் கவர்ந்திருக்கிறன.
பிடிக்காத இயக்குனர்: ஒவ்வொரு இயக்குனரை ஒவ்வொரு விதத்தில் பிடித்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்கவே பிடிக்காமல் போய்விட்ட சிலர் இருக்கிறார்கள். விக்ரமன், சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு போன்றோர் இருக்கிறார்கள் அந்தப் பட்டியலில். சமீபத்திய புதுவரவு கௌதம் லூசுதேவ மன்னிக்கவும் கௌதம் வாசுதேவ மேனன். ‘ஒரு பெண் கனவில்கூடத் தன்னை ஒரு ஆடவன் கற்பழிப்பதாக நினைக்கிறாள்' என்று கதாநாயகிக்கு அறிமுகக்காட்சி வைத்த மாமேதை so called முருஹன் என்கிறவனையும் பிடிக்காது.
இசையமைப்பாளர்
பிடித்தவர்: இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றென்றும் 'இளைய'ராஜா.
பிடிக்காதவர்: பெரிய பட்டியல் காத்திருந்தாலும், இப்போதைக்குக் கடுப்புகளைக் கிளப்புபவர், எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்/கவிஞர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டைப் பாட்டுக்கோட்டையின் பின் வந்த அரசுகளையும், கவியரசுகளையும் ரசிப்பதுண்டு, ஆனால் பிடித்துப்போகவில்லை. கல்யாணசுந்தரத்திடம் இருந்த சமூக நோக்கு எனக்குப் பிடித்தது. ஒரு படைப்பாளிக்கேயுரிய தார்மீகக் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதால் இப்போதுள்ளவர்களில் அறிவுமதியைப் பிடிக்கும். உதாரணமாக ஞானிக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருப்பார்,
///கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.///
இந்தக் கோபம்தான் அறிவுமதி பக்கம் என்னை ஈர்த்தது. அதன்பின்தான் ஓரளவுக்கு அவரைப் பற்றிய தேடல்கள் என்னிடம் முளைத்தன.
பிடிக்காதவர்: எத்தனை பேர்??????????????????????? சமீபத்திய எரிச்சல் ரேனிகுண்டா படத்து ‘கந்தர்வனின் கோட்டை' பாடல் எழுதிய பிறைசூடன் மீது.
பாடகர்கள்:
பிடித்த பாடகன்: என்னதான் ஜேசுதாஸ் என்கிற ராட்சசன் இருந்தாலும் எஸ். பி. பாலசுப்ரமணியம் அசைக்கமுடியாத ஒரு சுவர்தான். (உருவத்திலும் சரி, சாதனையிலும் சரி).
பிடிக்காத பாடகன்: க்ரிஷ். இவரைப் பிடிக்காமல் போனது இவரது பாடல்களால் மட்டுமல்ல. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் செய்த அதிகப் பிரசங்கித்தனம் கடுப்பாக்கியது. வட மொழிப்பாடகர்கள் எவரையும் பிடிக்காது. சமீபத்திய வரவு சுரேஷ் வடேகார். யுகபாரதி ஒருவாறாக உருகி உருகி எழுதிய வரிகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். (திட்டில் பாதி பாடவைத்த வித்யாசாகருக்கு)
பிடித்த பாடகி: ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே', ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா'.......... மறக்க முடியுமா ஜானகியை. பி. சுசீலாவும், சித்ராவும், சாதனாவும் குறைந்தவர்களில்லை என்றாலும் ஒரு versatality க்கு ஜானக்கிக்கு அருகில் யாருமில்லை.
பிடிக்காத பாடகி: சுசித்ரா முதலாகப் பலர். சுவர்ணலதாவைக்கூடப் பிடிக்காது. மூக்கால் அழுவார். அவர் பாடியதில் ஒரேயொரு விதிவிலக்காக ‘மாலையில் யாரோ மனதோடு பேச..' பாடல் பிடிக்கும்.
விளையாட்டு வீரர்கள்
பிடித்தவர்: என்றைக்கும், என்றென்றைக்கும், அவர் 60-70 'டக்' தொடர்ந்து அடித்தாலும்............ சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்தான். ஆனால் அடிக்கடி அவரைத் திட்டவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அது ஏன் என்பது ரகசியம்.
பிடிக்காதவர்: ஸ்ரீசாந்த். இவரை எப்போதாவது நேரில் கண்டால் அந்த நாளில் நான் கொலைகாரன் ஆகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஜிடானைத் தூண்டிவிட்டுக் கேவலம் செய்த மத்தறாஸி, Play Acting ல் பெயர் போன கிறிஸ்டியானோ ரொனால்டோ, டிடியேர் ட்ரொக்பா, கால்பந்தைவிட மொடலிங்கைப் பெரிதாக எண்ணிய டேவிட் பெக்காம் போன்றவர்களைப் பிடிப்பதில்லை.
பதிவர்கள்
பிடித்தவர்: ஒருமாதமாக இவர் பதிவு போடவில்லை. இவரது வலைப்பதிவு சமீபத்தில் எனக்கு அறிமுகமாகி என்னை நிரந்தர வாசகனாக்கியது. சென்று பாருங்கள் மா.சிவகுமாரின் 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' வலைப்பூ. அதிகபடசம் தொழில்நுட்பப் பதிவுகளே அவரது வலைப்பூவில் இருக்கும். திறவூற்று மென்பொருட்கள் பற்றி தமிழில் இவர் எழுதிய இந்தப் பதிவு போல் விரிவானதும், எளிமையானதுமான கட்டுரையை வாசித்த ஞாபகம் எனக்கில்லை. (அதற்காக மற்ற யாரையும் பிடிக்காது என்கிற முடிவுக்கு வரவேண்டாம்)
பிடிக்காதவர்:
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலகக் குரல் என்பதாலேயே இவரை வாசிக்க ஆரம்பித்தேன். சில இடங்களில் அருமையான கருத்துக்கள் சொல்வார். பார்ப்பன முகமூடிகளைக் கிழிப்பார். ஆதிக்க சாதி மனோபாவங்களைத் துவைப்பார். ஒரு கட்டத்தில் இவரிடமிருந்து ஒரு நச்சுத்தன்மை வெளிவர ஆரம்பித்தது. பார்ப்பனர்களையும், ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் தானே ஒரு நவீன பார்ப்பானாக மாறிப்போய்விட்டார். உதாரணத்துக்கு, பின்னூட்டமிட்ட பெண் பதிவரை ‘நீங்களெல்லாம் ஏன் இதற்குள் மூக்கை நுழைக்கிறீர்கள். போய்க் கவிதை எழுதுவதுதானே' என்கிற ரீதியில் புண்படுத்தினார். பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற பேரில் அந்த ஜாதியில் பிறந்த யாரையும் இழிவு படுத்த எந்த எல்லைக்கும் போவார். (உ-ம்: மணிரத்னம் ஹோட்டல் ருவாண்டா கதையைச் சுட்டு பம்பாய் என்ற பெயரில் எடுத்தார் என்று எழுதுவார். ஹோட்டல் ருவாண்டா வந்தது 2004ல், பம்பாய் வந்தது 1995 ல்). உங்களுக்கே தெரிந்திருக்கும் அவர் யாரென்று. கண்டுபிடியுங்கள் பார்ப்போமே!! சின்னதாக ஒரு க்ளூ தரவா? அவரது பெயர் சுகுணா என்று ஆரம்பித்து திவாகர் என்று முடியும்.

20 comments:
:)). நல்லாருக்கு கிருத்திகன்
எனக்கு பிடித்த பல விடயங்கள் உங்களுக்கு பிடிக்க வில்லை, அதுதான் இந்த தொடர்பதிவின் வெற்றி. ஒவ்வொருவரது ரசனையும் ஒவ்வொரு மாதிரி.
நல்லா அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...
பிடிச்சிருக்கு... எனக்கும் பிடிச்சிருக்கு!!
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தமிழ் ஆள்!!!
//(உ-ம்: மணிரத்னம் ஹோட்டல் ருவாண்டா கதையைச் சுட்டு பம்பாய் என்ற பெயரில் எடுத்தார் என்று எழுதுவார். ஹோட்டல் ருவாண்டா வந்தது 2004ல், பம்பாய் வந்தது 1995 ல்).
படம் 2004 இல் வந்தாலும், 1994 லில் நடந்த சம்பவம்.
பார்க்க,
http://en.wikipedia.org/wiki/Hotel_rwanda
(நான் அந்த படம் பார்க்க வில்லை.
ஆனால் எனக்கு தெரிந்த வரையில், மணிரத்னம் நடந்த அ எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களை / கதைகளை த்தான் படமெடுப்பார். அவர் ஒரு சிறந்த படைப்பாளி.)
உங்க பதில்கள் நல்லாயிருக்கு!!
நான் தான் 100வது பாலோவர்ஸ்?ஏதாவது இனிப்பு கொடுங்க...
///எனக்கு பிடித்த பல விடயங்கள் உங்களுக்கு பிடிக்க வில்லை///
அதனால்தான் யோகா உலகம் என்றைக்குமே புதுமையாக இருக்கிறது. ///ஒவ்வொருவரது ரசனையும் ஒவ்வொரு மாதிரி///
எல்லோருக்கும் ஒரே ரசனை இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்....
நட்புக்கு நன்றி
கலையரசன்..
அப்பிடின்னா பிடிக்காதது உனக்கும் பிடிக்கலையா... அவ்வ்வ்வ்வ்வ். (அய் ஒரு வழியா ஒரு மொக்கை போட்டாச்சு)
அனானி...
தமிழரசியல்வாதிகளில் பிடித்தவர்கள் தற்சமயம் யாருமில்லை என்று சொல்லவந்தேன். மொழி சறுக்கிவிட்டது.
அஹோரி...
நான் இங்கே சொல்லவந்தது மணிரத்னத்தில் படைப்பாற்றல் பற்றியல்ல.
Mrs. Menagasathia
புகழ்வதற்கு நன்றி... தொடர்வதற்கு நன்றி.... நான் கூட சதமடித்திருக்கிறேன். உங்கள் வலைப்பூவில் இன்னொரு பிந்தொடர்பவரைச் சேர்த்ததுதான் நான் தரும் இனிப்பு
பிடித்ததும் பிடிக்காததும் பற்றி நல்ல ஆழமான விளக்கத்துடன் வந்த உங்கள் பதிவுக்கு ஒருசபாஷ் போடலாம்.உங்கள் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது . நட்புடன் நிலாமதி
நன்றி கிருத்திகன்.. உங்களை அழைத்தது வீண்போகவில்லை..
ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்தேன்..
உங்கள் ரசனைகள் பல என்னுடன் முரண்பட்டாலும், சொன்ன காரணங்கள் அருமை.
அறிவுமதியை எனக்கும் பிடிக்கும்.. அவரது நேர்மை,எளிமை, உதவும் மனப்பாங்குக்காக..
உங்கள் பரந்த வாசிப்பு அனுபவம், ஆங்கிலத் திரைப்பட அறிவும் புலப்பட்டது.. கலக்குங்கள்.
அனானி பகவான் அருள் பெற்ற லோஷன் என்று இனிமேலும் போடணுமா?
கஜன் பின்கதவால் mp ஆனார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை jaffna இல் ஒரு இலச்சதிட்க்கும் அதிகமான வாக்குகளால் தெரிவானவர் அவர்.வாக்களித்த அனைவருமே புலிகளுக்கு பயந்து வாக்களித்தார்கள் ஏன்பது
முட்டாள் தனம்.
பொங்குதமிழ் நிகழ்வை கடுமையான உயிர் அச்ருதல்களுக்கும் மத்தியில் செய்து காட்டியவர் .தென்மரசியில் மக்கள் பணயக் கைதிகளை இராணுவதால் பிடிக்கப்பட்ட போது university மாணவர்களின் உதவியுடன் அவர்களை மீட்க கடுமையாக உழைத்தவர்.யாழில் பல்வேறு மக்கள் பிரச்னை களில் களத்தில் நேரடியாய் நின்று உழைத்தவர் .
so plz try to knw something before u say some thing
//நான் கூட சதமடித்திருக்கிறேன். உங்கள் வலைப்பூவில் இன்னொரு பிந்தொடர்பவரைச் சேர்த்ததுதான் நான் தரும் இனிப்பு//மிக்க நன்றி சகோ உங்கள் அன்பான பரிசுக்கு..சந்தோஷம் நீங்களும் உங்க நண்பரையும் இணைந்ததற்க்கு.நன்றிகள் பல....
அருண்...
இவ்வளவுக்கு அப்பாவியாக இருப்பீர்கள் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. எங்கள் ஊரில் இருந்த பொன்னம்பல வித்தியாலய வாக்குச்சாவடியில் மட்டும் கஜனுக்காக விழுந்த கள்ள வாக்குகள், மூத்தவிநாயகர் சந்தியில் நான் நின்ற ஒன்றரை மணியில் மட்டும் முப்பதுக்கு மேல். எவ்வளவு முறைகேடாகக் கஜன் வென்றார் என்று எல்லோருக்கும் தெரியும். பொங்குதமிழை முன்னின்று செய்த பலரைப் பின்னுக்குத் தள்ளித் தன்னைத் தலைவனாகச் சித்தரிக்க முயன்று தானாகவே மாட்டுப்பட்டு, இப்போது பின்கதவால்தான் நாடாளுமன்றம் வந்தார். இவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய விதத்தின் பின்விளைவுகள் இப்போது தெரியாது. யாழ்ப்பாணத்துக்கும் சேர்த்து இன்னொரு தேர்தல் வரும்போது இவருக்கு எப்படி வாக்களிக்க வைக்கப்பட்டோமோ, அதே போல் ஈ.பி.டி.பி. காரர்கள் வாக்களிக்க வைப்பார்கள். அப்போதும் நீங்கள் ‘குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் பின்கதவால் வரவில்லை. அங்கே போராடினார், இங்கே கிழித்தார்' என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டாவிட்டால் சரி.
///நன்றி கிருத்திகன்.. உங்களை அழைத்தது வீண்போகவில்லை..///
இந்தத் தொடர் பதிவு எனக்குப் பிடித்திருந்தது. யாராவது அழைப்பார்கள் என்று பார்த்தேன்... கடைசியாக அழைத்துப் பாலை வார்த்தீர்கள். அதற்கு முதலில் நான் நன்றி சொல்லவேண்டும் லோஷன் அண்ணா.
ஆங்கிலத் திரைப்படங்கள் கொஞ்சம் இலகுவாக இங்கே கிடைக்கிறன. அவ்வளவே. மற்றபடி நான் கத்துக்குட்டி
எனக்கும் என்றன்றும் பிடிச்சது சச்சின்.... எஸ்.பி .பி யையும் பிடிக்கும். இளயராஜா என்றைக்குமே ராஜா தான்...
அப்படி எண்டு சொனால் ஸ்ரீ lankavil உள்ள anaithu mp களுமே பிடிக்காமல் போய் இருக்கவேணும்,இல்லையா?
நான் யாருக்கும் வக்காலத்து வாங்க தேவை இல்லை but கஜனை ஒரு ஜந்து சொனத்தில் உடன்பாடு கிடையாது (not only kajan but also all person )
Post a Comment