Monday 12 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்

ஏதிலிகள் அமைப்பின் சுடரில் இருள் நிகழ்வு பல நல்ல அனுபவங்களையும் நண்பர்களையும் தரவல்லது. சென்ற சனி கூட நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். மெக்சிக்கோ தேசத்து ஏதிலி ஒருவர், பன்னாட்டு நிறுவனங்கள், மெக்சிக்கோ அரசின் ஆதரவுடன் தங்கள் பூர்வீக நிலங்களைச் சூறையாடுவது பற்றிச் சொன்னார். கனடாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளைத் துரத்தி நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மண்டபம் ஒன்றில் இன்னொரு பூர்வீகக் குடி மக்களின் நிலைபற்றி உச்சுக்கொட்டுகிறோம் என்கிற முரண்நகையை இளங்கோவிடம் சொன்னேன். ‘அதுவும் ஸ்காபுறோ உண்மையிலேயே பூர்வீகக்குடிகள் நிரம்ப வாழ்ந்த இடம்’ என்றார் இளங்கோ. அவரின் தகவலை எங்கே உறுதிப்படுத்தலாம் என்றெல்லாம் நான் தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை. சந்தேகப்படுபவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளலாம். அந்த மெக்சிக்கோ தேசத்து நண்பர் சொன்ன மாநிலத்தின் பெயர் சரியாகப் புரியவில்லை. Oaxaca வாகத்தான் இருக்கவேண்டும். Chiapas தமக்குப் பக்கத்து மாநிலம் என்று சொன்னதாக ஞாபகம், கோணேஸ் Chiapas பற்றிக்கேட்டபோது. அங்கே நடக்கிற பிரச்சினை என்ன என மேலும் அறிய கூகிளாண்டவரைக் கேட்டேன். ஓரளவு நெருங்கியதாக Mexico's Gaza என்ற இணைப்பை மட்டுமே தந்தார். கூகிளாண்டவரின் கொடுமையைப் பற்றி ட்விட்டரில் (கீச்சு என்றா அழைப்பர் இதை. இரமணிதான் சொல்லவேண்டும்) புலம்புகையில் அருண்மொழிவர்மன் “அம்படாது கீத் அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளே கூகிளில் கூட இடம்பெறும்” என்றார். அதுவும் சரிதான். வழமைபோலவே தன் வாசிப்புகள் பற்றிய கட்டுரை ஒன்றுக்கான இணைப்பும் தந்தார். அவரது கட்டுரையின் மூலவிடயங்கள் மூன்றில் ஒன்றான மூன்றாம் பாலினர் பற்றிய பகுதியில் சு. சமுத்திரம் எழுதிய “வாடா மல்லி” பற்றிச் சொல்லியிருந்தார். அந்த நாவல் ஆ.வி. யில் (இல்லை குமுதத்திலா?) தொடராக வந்த போது ‘ஒளித்திருந்து” வாசித்த ஞாபகம் இருக்கிறது, இப்போது சுதந்திரமான மறுவாசிப்புச் செய்யவேண்டும் என்றேன். கனடாவில் “வாடா மல்லி” எங்கே கிடைக்கும் தெரியவில்லை. அகிலனைத் தொல்லைப்படுத்தி இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டுமோ? ரொரன்ரோ பொது நூலகத்தில் சமுத்திரத்தின் ஒன்பது புத்தகங்கள் இருக்கின்றன. அவரின் முக்கியமான படைப்பான வாடாமல்லி இல்லை. என்ன செய்வது, பொது நூலகத்துக்கு நாங்கள்தானே புத்தகம் தேர்வு செய்கிறோம். என் உறவு ஒருவரும் புத்தகம் போடுகிறார். அடுத்த கோடைகாலத்திலிருந்து அநேகமாக வாடாமல்லி பொது நூலகத்தில் கிடைக்கலாம்.
*---*----*----*

இந்த தேசத்திலே புலம் பெயர்ந்த தமிழர்கள் கோடை காலங்களில் நடத்தும் ‘கிராம ஒன்றுகூடல்கள்’ பற்றிய விமர்சனம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. இவற்றை ஒழுங்கு செய்வது அந்தந்த ‘ஊர்ச்சங்கங்கள்’. நான் அவற்றைச் சாதிச்சங்கங்கள் என்றே பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஊரிலும் யார் ஆதிக்கசாதியாக இருந்தார்களோ அவர்கள்தான் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண்கூடு. நேரடியாக இல்லாவிட்டாலும் ‘அவரவர் உணவு அவரவர்க்கு’ போன்ற சில விசமத்தனங்கள் மூலம் சாதிப் பெருமை கொடிகட்டிப் பறக்கிறது என்பதுதான் உண்மை. சில நாட்கள் முன்பு இந்தியா சென்றுவந்த ‘காலம்’ செல்வம் அருளானந்தத்திடம் சில நண்பர்கள் கனடாவில் சாதி கொடிகட்டிப் பறக்கிறதாம் என்று கேட்டார்களாம். உண்மை நிலவரம் என்ன என்று ஏதிலிகள் கூட்டத்தில் செல்வம் கேள்வி எழுப்பினார். ‘கொடிகட்டிப் பறக்கிறது’ என்று ஒருவரைத்தவிர மற்றபேர் ஒப்புக்கொண்டோம். அந்த ஒருவர் மட்டும் ‘காங்கேசன்துறை ஊர்ச்சங்கத்தில்’ சாதி இல்லை. அதுதான் நான் பார்த்த சங்கம். அதனால் மற்ற இடங்களிலும் சாதி இல்லை என்று வாதிட்டார். தென்னாபிரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இந்தியக் குடிகளிடம் சாதி இல்லை என்று வாதிட்டார். நல்லவேளை கயானாவையும் உதாரணமாகக் காட்டி, “மொட்டைத்தலையும், முழங்காலும் ஒன்றே” என்று பிரகடனம் மட்டும் செய்யாமல் போனார். நண்பர் ஒருவர் எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு இன்னொரு நண்பரின் அழைப்பின் பேரில் போயிருந்தபோது ஏதோ ஒரு போட்டியில் இரண்டாவதாக வந்த ஆதிக்க சாதிப் பிள்ளைக்குத் தகப்பன் அடித்தாராம் ‘வேற்றுச் சாதிப் பிள்ளை முதலாவதாய் வர நீ இரண்டாவதாய் வந்தாய்’ என்று. நாங்கள் யார், “ஆதியிலும் புலையனல்ல, சாதியிலும் புலையனல்ல.. சவுதியில புலையனானேன்’ என்று கூத்துக்கட்டிய இனமல்லவா? மறப்போமா கோவணத்துப் பெருமைகளை?
*----*----*----*

IIFA விழாப் புறக்கணிப்பு பற்றிய இணையச் சண்டை ஒன்றில் நானும் வாயைக் கொடுத்து சூத்தைப் புண்ணாக்கிக்கொண்டேன். இன்னமும் மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்கிற வித்தை வரவில்லை என்னிடம். தலைகீழாய் நின்று யோசித்தும் IIFA விழாவின் வெற்றியால் இலங்கைத் தமிழன், அட தமிழன் என்ன தமிழன், ஒரு சாதாரண இலங்கைப் பிரசைக்கு பொருளாதார ரீதியாக என்ன நன்மை கிடைத்திருக்கும்? இல்லை அந்த விழா தோற்ற காரணத்தால் மேற்படி இலங்கைப் பிரசைகளுக்கு பொருளாதார ரீதியாக என்ன இழப்பு? மண்ணாங்கட்டி.... 30 வருசமாக சண்டையிலை கிழியாத சட்டையா IIFA க் காற்றில் கிழியப்போகுது? அதே பிரச்சினையில் நான் எழுப்பிய இன்னொரு கேள்வி, அசினுக்குத் தடை பிசினுக்குத் தடை என்றெல்லாம் போராட்டம் நடத்துகிற சீமான் போன்றவர்கள், இலங்கை மற்றும் இலங்கை சம்பந்தப் பட்ட இடங்களிலிருந்து தமிழ்த்திரைக்கு வருகிற பெருந்தொகைப் பணத்தைப் புறக்கணிக்கத் தயாரா? ‘தம்பி’ சூர்யாவுக்காக கொள்கை தளர்த்தியவராயிற்றே நம்மவர்?

சீமானை முழுமையாகத் திட்டக்கூட விட மாட்டேன் என்கிறார் இந்தக் கருணாநிதி. வழமை போலவே சீமான் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல ‘வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுகிறான்’ என்று உள்ளே போட்டுவிட்டார்கள். “தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது” என்பதுதான் சீமான் சொன்ன கருத்து. சீமானின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலை முட்டாள்தனமானது என்றாலும், இதுவே வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் என்றால், சத்தியராஜ் பேசிய பேச்சுக்கு (ஒகேனக்கால் பிரச்சினை) அவரைத் தூக்கிலல்லவா போட்டிருக்கவேண்டும். என்ன சத்தியராஜ் பாராட்டு விழாக்களில் கருணாநிதிக்கு நன்றாகப் பின்பக்கம் கழுவிவிடுவார். சீமான் அதைச் செய்வதில்லை.
*----*----*----*

சந்தேகம் ஒன்று

நிலவு பெத்த மகளும், நிலவின் அத்தை மகனும் காதல் செய்தல் Incest இல்லையா?
*----*----*----*

17 comments:

அருண்மொழிவர்மன் said...

இடைவெளிவிட்டு எழுதினாலும் அருமையான விடயங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

சிறிது இடைவெளிக்குப் பின்னர் நீங்கள் போட்ட எல்லாப் பதிவுகளுமே நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் கீத்

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு ..........வாழ்த்துகள்

மயூ மனோ (Mayoo Mano) said...

//ஒவ்வொரு ஊரிலும் யார் ஆதிக்கசாதியாக இருந்தார்களோ அவர்கள்தான் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண்கூடு//

மறுக்கவே முடியாத உண்மை...!
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...!

DJ said...

கீத்,
ஸ்காப‌ரோ என்றில்லை க‌ன‌டாவின் அநேக‌ ப‌குதிக‌ளில் பூர்வீக‌க்குடிக‌ளின் வாழ்வும் வ‌ள‌மும் சூறையாட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஸ்காப‌ரோவில் Seneca என்ற‌ tribes இருந்திருக்கின்ற‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் துர‌த்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஏன் இன்றும் கூட‌ க‌லிடோனியா(ஒன்ராரியோ) ப‌குதியில் இந்த‌ சூறையாட‌ல் நிக‌ழ்ந்துகொண்டிருக்க‌ அத‌ற்கு எதிரான‌ பூர்வீக‌க்குடிக‌ளின் எதிர்ப்பு மிக‌வும் ப‌ல‌மாக‌வும் இருக்கிற‌தை நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள்.
.....
ஏற்க‌ன‌வே பூர்வீக‌க்குடிக‌ளில் சூறையாட‌ப்ப‌ட்ட‌ நில‌த்திலிருந்து(ஸ்காப‌ரோ), இன்னொரு இட‌த்தில்(மெக்சிக்கோவில்) இருக்கும் பூர்வீக‌க்குடிக‌ளின் சூறையாட‌லைப் பேசுவ‌து நீங்க‌ள் குறிப்பிடுவ‌துபோல முர‌ண்ந‌கைதான்.அந்த‌ப் ப‌ழியை நாமெல்லோரும் ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டும், வேண்டுமாயின் த‌ப்புவ‌த‌ற்காய் அதை நாங்க‌ள் செய்ய‌வில்லை ஏற்க‌ன‌வே முத‌லில் வ‌ந்த‌ பிரித்தானிய‌ர்க‌ளும் பிரெஞ்சுக்கார‌ர்க‌ளும்தான் செய்தார்க‌ள் என‌ச் சொல்ல‌லாம்.

ந‌ம்மால் நிச்சய‌ம் வ‌ர‌லாற்றில் மீண்டும் நுழைந்து எதையும் திருத்த‌வோ/திருப்ப‌வோ முடியாது. ஆனால் நாமிருக்கும் நிக‌ழ்கால‌ம் குறித்து கேள்விக‌ளை எழுப்ப‌லாம். ஏற்க‌ன‌வே பூர்விக‌க்குடிநில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌வ‌ர்க‌ள் ஏனின்று க‌ன‌டாவில் வ‌ந்து குடியேறும் புதிய‌வர்க‌ளை 'முறைய‌ற்ற‌ குடிவ‌ரவாள‌ர்க‌ள்'(Illegal Immigrants) என்ற‌ ப‌ட்ட‌ஞ்சும‌த்தி திருப்பி அனுப்புகின்றார்க‌ள் என்று நாம் கேட்ப‌த‌ற்கான‌ நியாய‌ம் இருக்கிற‌தென‌ நினைக்கிறேன். முக்கிய‌மாக‌ இவ்வாறான‌ ப‌ல‌ மெக்சிக்கோக்கார‌ர்கள் திருப்பி அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். இதைத்தான் G20 ப‌ற்றிப் பேசிய‌ தீபாவும் குறிப்பிட்டார். இன்று g20 protests ஊட‌க‌ங்க‌ளில் முக்கிய‌ம் கொடுப்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் இது middle-class white peopleன் பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து. ஆனால் இத‌ற்கு முன்ன‌ர் பூர்வீக‌க்குடிக‌ளின் நில‌ம் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌து குறித்தோ/ முறைய‌ற்ற‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் என்று சொல்லி எண்ண‌ற்றோர் அனுப்ப‌டுவ‌து குறித்தோ ந‌ட‌ந்த‌ எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் ப‌ற்றி இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் தீவிர‌மாக‌ப்
பேச‌ முன்வ‌ர‌வில்லை என்று கூறிய‌தை... நாம் அனைவ‌ரும் யோசிக்க‌வேண்டியிருக்கிற‌து. பூர்வீக‌குடியான‌ மெக்சிக்கோ ந‌ண்ப‌ர் த‌ம் நில‌ங்க‌ள் சூறையாடுப்ப‌டுவ‌து குறித்த‌ச் சொன்ன‌ அனைத்து விட‌ய‌ங்க‌ளும் இந்தியாவில் ச‌ட்டிஷ்கார் போன்ற‌ ப‌குதிக‌ளிலும் நிக‌ழ்ந்து இன்று ஆயுத‌ப்போராட்ட‌ங்க‌ளாக‌ நீட்சிய‌டைந்திருக்கின்ற‌ன‌ அல்ல‌வா?

இளங்கோ-டிசே said...

கீத்,
ஸ்காப‌ரோ என்றில்லை க‌ன‌டாவின் அநேக‌ ப‌குதிக‌ளில் பூர்வீக‌க்குடிக‌ளின் வாழ்வும் வ‌ள‌மும் சூறையாட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஸ்காப‌ரோவில் Seneca என்ற‌ tribes இருந்திருக்கின்ற‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் துர‌த்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஏன் இன்றும் கூட‌ க‌லிடோனியா(ஒன்ராரியோ) ப‌குதியில் இந்த‌ சூறையாட‌ல் நிக‌ழ்ந்துகொண்டிருக்க‌ அத‌ற்கு எதிரான‌ பூர்வீக‌க்குடிக‌ளின் எதிர்ப்பு மிக‌வும் ப‌ல‌மாக‌வும் இருக்கிற‌தை நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள்.
......
ஏற்க‌ன‌வே பூர்வீக‌க்குடிக‌ளில் சூறையாட‌ப்ப‌ட்ட‌ நில‌த்திலிருந்து(ஸ்காப‌ரோ) இன்னொரு இட‌த்தில்(மெக்சிக்கோவில்) இருக்கும் பூர்வீக‌க்குடிக‌ளின் நில‌ம் சூறையாட‌லைப் பேசுவ‌து நீங்க‌ள் குறிப்பிடுவ‌துபோல முர‌ண்ந‌கைதான்.அந்த‌ப் ப‌ழியை நாமெல்லோரும் ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டும், வேண்டுமாயின் த‌ப்புவ‌த‌ற்காய் அதை நாங்க‌ள் செய்ய‌வில்லை ஏற்க‌ன‌வே முத‌லில் வ‌ந்த‌ பிரித்தானிய‌ர்க‌ளும் பிரெஞ்சுக்கார‌ர்க‌ளும்தான் செய்தார்க‌ள் என‌ச் சொல்ல‌லாம்.

ந‌ம்மால் நிச்சய‌ம் வ‌ர‌லாற்றில் மீண்டும் நுழைந்து எதையும் திருத்த‌வோ/திருப்ப‌வோ முடியாது. ஆனால் நாமிருக்கும் நிக‌ழ்கால‌ம் குறித்து கேள்விக‌ளை எழுப்ப‌லாம். ஏற்க‌ன‌வே பூர்விக‌க்குடிநில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌வ‌ர்க‌ள் ஏனின்று க‌ன‌டாவில் வ‌ந்து குடியேறும் புதிய‌வர்க‌ளை 'முறைய‌ற்ற‌ குடிவ‌ரவாள‌ர்க‌ள்'(Illegal Immigrants) என்ற‌ ப‌ட்ட‌ஞ்சும‌த்தி திருப்பி அனுப்புகின்றார்க‌ள் என்று நாம் கேட்ப‌த‌ற்கான‌ நியாய‌ம் இருக்கிற‌தென‌ நினைக்கிறேன். முக்கிய‌மாக‌ இவ்வாறான‌ ப‌ல‌ மெக்சிக்கோக்கார‌ர்கள் திருப்பி அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். இதைத்தான் G20 ப‌ற்றிப் பேசிய‌ தீபாவும் குறிப்பிட்டார். இன்று G20 ஊட‌க‌ங்க‌ளில் முக்கிய‌ம் கொடுப்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் இது middle-class white peopleன் பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து. ஆனால் இத‌ற்கு முன்ன‌ர் பூர்வீக‌க்குடிக‌ளின் நில‌ம் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌து குறித்தோ/ முறைய‌ற்ற‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் என்று சொல்லி எண்ண‌ற்றோர் அனுப்ப‌டுவ‌து குறித்தோ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் குறித்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் தீவிர‌மாக‌ப் பேச‌ முன்வ‌ர‌வில்லை என்ப‌து ப‌ற்றி நாம் யோசிக்க‌வேண்டும் என்று தீபா கூறிய‌து நாம் அனைவ‌ரும் க‌வ‌னிக்க‌வேண்டிய‌ முக்கிய‌ புள்ளி. பூர்வீக‌குடியான‌ மெக்சிக்கோ ந‌ண்ப‌ர் த‌ம் நில‌ங்க‌ள் சூறையாடுப்ப‌டுவ‌து குறித்த‌ச் சொன்ன‌ அனைத்து விட‌ய‌ங்க‌ளும் இந்தியாவில் ச‌ட்டிஷ்கார் போன்ற‌ ப‌குதிக‌ளிலும் நிக‌ழ்கின்ற‌ன‌ அல்ல‌வா?

dj said...

கீத்,
ஸ்காப‌ரோ என்றில்லை க‌ன‌டாவின் அநேக‌ ப‌குதிக‌ளில் பூர்வீக‌க்குடிக‌ளின் வாழ்வும் வ‌ள‌மும் சூறையாட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஸ்காப‌ரோவில் Seneca என்ற‌ tribes இருந்திருக்கின்ற‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் துர‌த்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஏன் இன்றும் கூட‌ க‌லிடோனியா(ஒன்ராரியோ) ப‌குதியில் இந்த‌ சூறையாட‌ல் நிக‌ழ்ந்துகொண்டிருக்க‌ அத‌ற்கு எதிரான‌ பூர்வீக‌க்குடிக‌ளின் எதிர்ப்பு மிக‌வும் ப‌ல‌மாக‌வும் இருக்கிற‌தை நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள்.
......
ஏற்க‌ன‌வே பூர்வீக‌க்குடிக‌ளில் சூறையாட‌ப்ப‌ட்ட‌ நில‌த்திலிருந்து(ஸ்காப‌ரோ) இன்னொரு இட‌த்தில்(மெக்சிக்கோவில்) இருக்கும் பூர்வீக‌க்குடிக‌ளின் நில‌ம் சூறையாட‌லைப் பேசுவ‌து நீங்க‌ள் குறிப்பிடுவ‌துபோல முர‌ண்ந‌கைதான்.அந்த‌ப் ப‌ழியை நாமெல்லோரும் ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டும், வேண்டுமாயின் த‌ப்புவ‌த‌ற்காய் அதை நாங்க‌ள் செய்ய‌வில்லை ஏற்க‌ன‌வே முத‌லில் வ‌ந்த‌ பிரித்தானிய‌ர்க‌ளும் பிரெஞ்சுக்கார‌ர்க‌ளும்தான் செய்தார்க‌ள் என‌ச் சொல்ல‌லாம்.

ந‌ம்மால் நிச்சய‌ம் வ‌ர‌லாற்றில் மீண்டும் நுழைந்து எதையும் திருத்த‌வோ/திருப்ப‌வோ முடியாது. ஆனால் நாமிருக்கும் நிக‌ழ்கால‌ம் குறித்து கேள்விக‌ளை எழுப்ப‌லாம். ஏற்க‌ன‌வே பூர்விக‌க்குடிநில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌வ‌ர்க‌ள் ஏனின்று க‌ன‌டாவில் வ‌ந்து குடியேறும் புதிய‌வர்க‌ளை 'முறைய‌ற்ற‌ குடிவ‌ரவாள‌ர்க‌ள்'(Illegal Immigrants) என்ற‌ ப‌ட்ட‌ஞ்சும‌த்தி திருப்பி அனுப்புகின்றார்க‌ள் என்று நாம் கேட்ப‌த‌ற்கான‌ நியாய‌ம் இருக்கிற‌தென‌ நினைக்கிறேன். முக்கிய‌மாக‌ இவ்வாறான‌ ப‌ல‌ மெக்சிக்கோக்கார‌ர்கள் திருப்பி அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். இதைத்தான் G20 ப‌ற்றிப் பேசிய‌ தீபாவும் குறிப்பிட்டார். இன்று G20 ஊட‌க‌ங்க‌ளில் முக்கிய‌ம் கொடுப்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் இது middle-class white peopleன் பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து. ஆனால் இத‌ற்கு முன்ன‌ர் பூர்வீக‌க்குடிக‌ளின் நில‌ம் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌து குறித்தோ/ முறைய‌ற்ற‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் என்று சொல்லி எண்ண‌ற்றோர் அனுப்ப‌டுவ‌து குறித்தோ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் குறித்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் தீவிர‌மாக‌ப் பேச‌ முன்வ‌ர‌வில்லை என்ப‌து ப‌ற்றி நாம் யோசிக்க‌வேண்டும் என்று தீபா கூறிய‌து நாம் அனைவ‌ரும் க‌வ‌னிக்க‌வேண்டிய‌ முக்கிய‌ புள்ளி. பூர்வீக‌குடியான‌ மெக்சிக்கோ ந‌ண்ப‌ர் த‌ம் நில‌ங்க‌ள் சூறையாடுப்ப‌டுவ‌து குறித்த‌ச் சொன்ன‌ அனைத்து விட‌ய‌ங்க‌ளும் இந்தியாவில் ச‌ட்டிஷ்கார் போன்ற‌ ப‌குதிக‌ளிலும் நிக‌ழ்கின்ற‌ன‌ அல்ல‌வா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருண்மொழிவர்மன்..

எழுதத்தான் வேண்டும். சில விடயங்களின் அரைகுறைப் புரிதல் காரணமான தயக்கங்கள் விலகும்வரை இன்னும் இன்னும் வாசிக்கப்போகிறேன்

Unknown said...

நன்றி rk guru

Unknown said...

நீங்கள் சொன்ன கருத்துக்களோடு உடன்படுகிறேன் டி.சே. இந்தப் பதிலை நீங்கள் வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒரு கேள்வி உங்களிடம்...

Consumerism, Capitalism... கொஞ்சம் குறிப்புகள் தரமுடியுமா? (ஒற்றுமை வேற்றுமை அப்படி ஏதாவது. என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் அவை தொடர்பில் வாசித்தறியக்கூடிய புத்தகங்களைப் பரிந்துரையுங்கள்)

அருண்மொழிவர்மரே... நீங்கள் படித்தாலும் இதை உங்களுக்குமான வேண்டுகோளாகக் கொள்க

Anonymous said...

ஏனையவர்களைப் போலவே IIFA பற்றி மேலோட்டமான, குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். கொழும்பிலிருந்துகொண்டு சில அறிவுக் கொழுந்துகள் இப்படித்தான் எதிர்ப்பு நடவடிக்கைகளை எள்ளி நகையாடிக்கொண்டிருந்தன.

தமிழ்த்திரையுலகத்தினதும் சீமானதும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் அதன் பெறுபேறும் எம்மைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியென்பதே எனது கணிப்பு. அது தனியே பொருளாதாரத்தோடு மட்டும் சார்ந்ததில்லை. காந்தி கதர்ச் சட்டைகளை எரித்தது பிரித்தானியாவைப் பொருளாதாரத்தில் வீழ்த்தவா?

சூர்யாவின் குறிப்பிட்ட படம் தொடர்பில் சீமான் அளித்த விளக்கத்தில் ஓரளவு நியாயமிருப்பினும்கூட அதைத் தவறென்றே வைத்துக்கொள்வோம். அதற்காக சீமான் விமர்சிக்கப்பட வேண்டியவரேயன்றி, அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு மற்ற நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாது. தமிழகத்தின் மற்ற வாய்ச்சவடால் பேர்வழிகளைப் போலன்றி சீமான் ஓரளவாவது செய்துகாட்டினார் என்றே சொல்வேன்(சீமானும் வாய்ச்சவடால் பேர்வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை).

-வசந்தன்.

Unknown said...

வசந்தன்...
என் கேள்விகளில் குதர்க்கமில்லை. IIFA நடந்தாலோ நடக்காமல் விட்டாலோ கூடிய விலைவாசி கூடித்தான் இருக்கும். கோதுமை மா விலை கூடிவிட்டது அதனால் சாதாரண ஈழத்தமிழனுக்கு உணவில்லையாம். IIFA நடந்திருந்தாலும் நடந்திருக்காவிட்டாலும் அதே கோதுமை மா விலை கூடித்தானிருக்கும். நான் இலங்கையில் இருந்த வரைக்கும் வீட்டில் அரிசிமா தான் சாப்பிட்ட ஞாபகம். எப்போது கோதுமை மா இலங்கைத் தமிழரின் தேசிய உணவானது என்று தெரியவில்லை. நான் IIFA ந் பொருளாதாரத் தாக்கம் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன். மற்றது எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே கொஞ்சமாவது மாறாமை இருந்தால் என்ன என்ற கேள்விதான் மொத்தமாக இலங்கைத் தமிழர்கள் மூலம் கிடைக்கிற சினிமா வருமானத்தைப் புறக்கணிப்பார்களா என்ற கேள்வியின் உள்நோக்கம்.இன்னொன்று.. சீமானது எதிர்ப்பு நடவடிக்கை என்று சொல்லுங்கள். இதுக்குள்ள தமிழகத் திரையுலகத்தை எல்லாம் சேர்க்க வேண்டாம் வசந்தன்

காந்தி ‘கதர்ச் சட்டைகளை’ எரித்த தகவல் புதிதாக இருக்கிறது. விதேசிச் சட்டைகளைத்தானே எரித்தார்? இல்லையா வசந்தன்.

Anonymous said...

//மொத்தமாக இலங்கைத் தமிழர்கள் மூலம் கிடைக்கிற சினிமா வருமானத்தைப் புறக்கணிப்பார்களா என்ற கேள்வியின் உள்நோக்கம்.//
அவர்களுக்கு வரும் வருமானத்தை அவர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?

ஐப்பாவைப் பற்றிய தெளிவான பதிலைப் பின்னூட்டத்தில் கொடுத்ததை விட பதிவில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் பதிவை வாசிக்கிற எல்லோரும் பின்னூட்டத்தையும் வாசிப்பினம் என்று சொல்லமுடியாதே.

Unknown said...

இலங்கை சம்பந்தமான எதுவுமே வேண்டாம் என்றால், இலங்கை மூலம் வருகிற வருமானம் ஏன அனாமிகா? இதற்குப் பேர்தான் பிழைப்புவாதம்.

Anonymous said...

இல்லை கிருத்திகன். இன்னும் தெளிவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு வருமானம் கொடுக்காதே என்று சொல்வதற்கும் தமிழர்களிடம் (அவர்களாகப் போய்ப் பார்க்கும் படத்திற்கு) காசு எடுப்பதற்கும் முடிச்சு போடுகிறீர்கள். படம் வேண்டாம் என்று புறக்கணிக்க வேண்டியவர்கள் நாங்கள் (அவர்களில் கடுப்பிருந்தால்). அவர்களிடம் நீங்கள் வைக்கும் கேள்வியில் எனக்கு லொஜிக் இல்லாத மாதிரித் தான் இருக்கிறது.

Unknown said...

அனாமிகா...
இலங்கையில் திரையிடப்படும் இந்தியத் திரைப்படங்களுக்கும், இலங்கைப் பொருளாதாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா??? Materiality Concept எல்லாம் போட்டுக் குழப்பாமல் யோசியுங்கள். இலங்கையில் திரையிடப்படும் அந்தப் படங்களுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? அந்த வருமானத்துக்கும் இலங்கைப் பொருளாதாரத்துக்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? (இலங்கைத் தமிழர்கள் முழுப்பேரும் வெளிநாட்டுக் காசில்தான் படம் பார்க்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்)

பால்குடி said...

சில விடயங்கள் சிந்திக்க வைத்தன.