Saturday, 17 July 2010

பதிவுலகில் நான் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன்...

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பத்தில் Keith Kumarasamy பின்னர் கீத் குமாரசாமி, அடுத்து கிருத்திகன் குமாரசாமி, தொடர்ந்து Kiruthikan Kumarasamy கடைசியாக கிருத்திகன்

அந்தப் பெயர்தான் உங்கள் பெயரா? இல்லை பதிவில் தோன்றும் பெயரை வைக்க என்ன காரணம்?
அந்தப் பெயர்கள் என் பெயர்கள் அல்ல. என் பெயர் பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன். என்னுடைய பதிவுகளின் ‘ஆழத்தையும்’ ‘அர்த்தத்தையும்’ புரிந்துகொண்டு படைப்புலகம் வழங்கிய சின்னப் பட்டங்கள்தான் அந்தப் பெயர்கள்.

நீங்கள் தமிழ் வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
சிறுவயதில் இருந்தே நான் நிறைய எழுதுவேன். 1989ம் வருடம் தங்கவேலின் நேர்சரியில் ‘அம்மா’ (ammaa) எழுதியதைப் பார்த்தே ஜெயமணி ரீச்சர் சொன்னார்கள் “பிற்காலத்தில் நீ பெரிய பதிவனாக வருவாய்” என்று. அப்போது விதைக்கப்பட்ட கனவு செடியாகி, விருட்சமாகி வளர்ந்தது. மூன்றாம் வகுப்பில் தேன்மதி ரீச்சர் “what is your name?" என்று கேட்க “my name is Famous Blogger Kumarasamy Kiruthikan" என்று சொன்னேனாம். வீட்டில்கூட என்னை ‘பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன்’ என்றே அழைத்தார்கள். I eat pathivulagam, I drink pathivulagam, I sleep pathivulagam, I shit pathivulagam. அதோடு சின்ன வயதிலேயே என்னிடம் எதிர்ப்புக் குணம் நிறைய இருந்தது. அய்யோ பெருமாளே.. ஏன் ஜனங்களுக்கு இவ்வளவு அலட்சியம். யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருமே rulesஐ follow பண்ணுவதில்லை என்று விசனப்பட்டபடியே இருந்தேன். ஆகவே என் மக்களை, என் நாட்டை, ஏன் இந்த உலகத்தையே உய்விக்க, நான் பதிவுலகு வருவது தவிர வேறு எந்த option அவர்களுக்கு இருக்கவில்லை. பதிவுலகத்துக்கு வருவது நான் எடுத்த முடிவில்லை. மக்களாக எடுத்த முடிவு.

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடையவைக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?
இதற்குப் பதில் சொல்ல ஒரு வலைப்பதிவு காணுமா தெரியவில்லை. நான் எழுதிய படைப்புகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. ஏனென்றால் அவற்றை நான் தமிழ்மணம் மூலம் pdf கோப்புகளாக்கி ஐந்தாறு கணனி வன்தட்டுக்களில் சேமித்து வைத்திருக்கிறேன். அட, தமிழ் மணம் pdf என்றதும்தான் ஞாபகம் வருகிறது. திரட்டிகளில் என் பதிவை இணைத்ததன் காரணமாகவே நான் ‘மிகப் பிரபல பதிவர்’ ஆனேன். ஏன் என்னை ஒரு ஜந்து போல் பார்க்கிறீர்கள்? நான் சொல்கிற பொய் தெரிந்துவிட்டதா? அட. வலு கெட்டிக்காரர் நீங்கள். திரட்டிகளில் இணைந்தேன் பிரபலமானேன் என்பதெல்லாம் சுத்தப் பொய். பிரபலமாவதற்கு வேறுசில பிரபலமான வழிமுறைகள் இருக்கின்றன. விளக்குகிறேன் வாருங்கள்.


பிரபல பதிவர்களைத் தேடிப்பிடித்தல்
எதிர்காலப் பிரபல பதிவரான நீங்கள் நிகழ்காலப் பிரபல பதிவர்களைத் தேடிப் பிடித்து அவர்களைப் பின் தொடரவேண்டும். அவர்களுக்கு ‘அக்கா, அண்ணா’ என்றெல்லாம் விளித்துப் பின்னூட்டம் இடவேண்டும். அதுவும் யாராவது ஒரு so called பிரபல பதிவர் பின்னூட்டம் போட்டால் ‘ஜென்ம சாபல்யம் அடைந்தேனே’ என்று பணியத் தெரிய வேண்டும் (பின்னூட்டம் படிக்கவும்). ஆகக்குறைந்தது ஒரு 300 வலைப்பதிவுகளையாவது தொடரவேண்டும். முடிந்தால் யாராவது பிரபல பதிவர்களைத் தாக்க முயலலாம். இப்படித் தாக்கும்போது அந்த வலைப் பதிவர்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தேடுதல் நலம். ‘சுனா தீனா’ என்ற பெயரைப் பெண்ணென்று நினைத்து ‘தோழி’ என்றெல்லாம் விளித்து ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டினால், வால்பையன் வந்து ‘முதல்ல அவரு தோழி சுகுணா கிடையாது!சுகுணா திவாகர் என்ற புனை பெயரில் எழுதும் பத்திரிக்கை நிருபர்!அவரு எழுதும் முன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்! என்று மூக்குடைப்பார். கவனமாக இருக்க வேண்டும்.

பின்னூட்ட மாயம்
வலைப் பதிவுகளைத் தொடரத் தொடங்கியதும், தொடர்கிற வலைப் பதிவர்களைப் புகழ்ந்து, குழைந்து பின்னூட்டம் இடவேண்டும். உதாரணமாக ஒரு சினிமா விமர்சனத்துக்கு ‘இன்னும் படம் பார்க்கவில்லை. அருமையான விமர்சனம்’ என்கிற Template பின்னூட்டம் மிக அவசியம். படத்தையே இன்னும் பார்க்கவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் அருமையா இல்லையா என்று சொல்வது என்றெல்லாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நீங்கள் பிரபலமாகமுடியாது. அதே போல் நீங்கள் தொடரும் பதிவர்களுக்கு வலையுலகத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, இல்லை வலையுலகத்தில் ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினை என்றாலோ வலியப் போய் கருத்துச் சொல்லவேண்டும். கருத்துகளில் காட்டமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால் மட்டுமே போதும். ‘பருத்தித்துறை வீதியில் கொடிகாமச் சந்தி கடந்ததும் கோப்பாய் வருகிறது’ போன்ற பிழைகளையெல்லாம் கவனிக்காமல் எதிராளியைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கவேண்டும். ’நான் தான் பர்ஸ்டா’ 'me the first' போன்ற அர்த்தம் மிகுந்த பின்னூட்டங்கள் தீராத் தேடலும், அதன் மூலம் கிடைக்கிற ஆழ்ந்த அறிவும் உங்களைத் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுபோகலாம்.


சினிமா விமர்சனம்
நிறைய சினிமா விமர்சனம் படித்து, அவரது பதிவில் கொஞ்சம், இவரது பதிவில் கொஞ்சம் என்று திருடி, படம் பார்க்காமலே ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதத் தெரியவேண்டும். முக்கியமாக 2004ல் வந்த ஒரு ஆங்கிலப் படத்தைச் சுட்டு 1996ல் தமிழில் படம் எடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை வைத்தேயாகவேண்டும். ஆங்கிலப் படங்களின் பெயர்களை எங்கேயாவது தேடிப்பார்த்து விக்கிபீடியாவில் கதைச் சுருக்கம் வாசிக்கப் பழகிக்கொள்ளல் நலம். கேபிள் சங்கரின் வலைப் பதிவுகளை வாசித்து சினிமாவின் technical terms கொஞ்சம் உருவிக்கொள்ளலாம். தொடர்ந்து சினிமாப் பதிவுகளில் காரசாரமாக விமர்சித்து புகழ் பெறலாம்.


சுயத்தை இழத்தல்
உங்களுடைய அடையாளங்களைத் துறந்து எழுதப் பழகவேண்டும். உங்கள் வழக்கில் இல்லாத சொற்களை எழுதப் பழகவேண்டும். ('டவுன்', '‘ஆல் சிலோன் டூர்', 'வேன்', 'ஆர்மி', 'செம பசி''ரொம்பவே', 'பூரா ரொம்பவே செக்ஸியாக குஜிலிங்க சிரிச்சது (அட, ஃபோட்டோல தாங்க). பின்னர் யாராவது கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்தத் தெரியவேண்டும். வாசிக்கிற ஒரு சாராருக்கு ஒரு நடையிலும், இன்னொரு சாராருக்கு இன்னொரு நடையிலும் எழுதத் தெரிந்திருத்தல் உத்தமம். ’என்னுடைய வாசகர்களுக்குத் தானே நான் எழுதமுடியும்?’ ‘இப்போது அங்கே இப்படித்தான் பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றெல்லாம் கேள்விகேட்டு வாயை அடைக்கவேண்டும். அப்படிக் கேள்விகேட்டால் பின்பக்கம் புண்ணாகும். அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. ’மாட்டாய்ங்க, வருவாய்ங்க, போவாய்ங்க, மக்கா போன்ற வட்டாரவழக்குச் சொற்கள் இருப்பது அவசியம். (ஆஷ்-அபி ஜோடி ச்சோ க்யூட்). உதாரணம் கேட்பீர்களேயாயின் இந்த வலைப் பதிவில் சனிக்கிழமை ஆவணி 8, 2009 க்கு முன்னான அனைத்துப் பதிவுகளையும் வாசித்துப் பார்க்கலாம். (ஆள் நல்ல யாவாரி)

மொக்கை
மொக்கை என்ற பெயரில் ஏதாவது புலம்பத் தெரிய வேண்டும். அருமையான உதாரணம்.... ஹி ஹி.. இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது. (அதையும் சொல்லித்தான் தெரியோணுமே? என்ன சனமடா இது)


நானும் றவுடி
வலையுலகச் சண்டைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தல் மிக மிக அவசியம். பார்ப்பான், நர்சிம், மூர்த்தி, போலி, முல்லை, சுந்தர் மூக்கு, பர்தா, ரோசாவசந்த் போன்ற சில வரலாறுகளை இந்தப் பதிவை வாசிக்கிற புதிய பதிவர்கள் வாசிப்பது நலம். அப்படியென்றால்தான் இன்னொரு சண்டையில் கருத்துக் குருத்துச் சொல்லலாம். கமல்ஹாசன், மணிரத்னம் படங்கள் வருகிற காலங்களில் மிகவும் விழிப்பாக இருந்தால் உங்களை றவுடியாக நிலைநிறுத்திக்கொள்ளலாம். எந்த வலைச் சண்டைபற்றியும் துணிந்து பதிவிடுங்கள், திட்டு வாங்கியோ பாராட்டு வாங்கியோ பிரபலமாகலாம்.


Template இடுகைகள் மற்றும் விருதுகள்
‘பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அ ஆ இ ஈ உ ஊ இடுகையில் இருக்கிற ‘ம்’ என்ற எழுத்து என்னை எழுதத் தூண்டியது’ என்றோ, அல்லது ‘அன்பு அண்ணன் வந்தியத்தேவனின் அழைப்பை ஏற்று’ என்றோ ஆரம்பிக்கிற இடுகைகளை எழுதத் தெரியவேண்டும். (சுதனையும், வந்தியைம் போட்ட சண்டைக்கு வரமாட்டினம் எண்ட நம்பிக்கை) ஏனென்றால், அதற்கு ஒரு வலுவான காரணமிருக்கிறது. ஓமோம், வலுவான காரணமிருக்கிறது. (நன்றி: மெ.மு.). கண்ட கண்ட பேரில் விருதுகளை உருவாக்கி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது கொடுத்துக்கொள்ள வேண்டும். விருது பெறும்போதெல்லாம் ‘கத்துக்குட்டிக்கெல்லாம் விருது தந்த இன்னாருக்கு நன்றி’, ‘என்னைக் கௌரவப் படுத்திய அன்னாருக்கு நன்றி’ என்றெல்லாம் அவைக்கடங்க வேண்டும். விருதுகள் அத்தனையும் உங்கள் வலைப்பூவின் sidebar ஐ அலங்கரிக்கவேண்டும். (சுள்ளான் கொடுத்தது, கொக்கா C கொடுத்தது, அவர் தந்தது, இவரிட்ட வாங்கினது). இத்தனைக்கும் ஒரு விருதை நிறுவ Google images Microsoft paint இரண்டுமே போதுமானது.


முதுகு சொறிதல், திரட்டிகள், ஓட்டு & கள்ள ஓட்டு, Hits Counter
ஒரு குழுமம் சேர்ப்பது நீங்கள் பிரபலமாக மிக அவசியம். அந்தக் குழுமம் மட்டுமே உங்களுக்கு ஓட்டுப் போட்டு திரட்டிகளில் முன்னுக்குக் கொண்டுவர அயராது உழைக்கும். முக்கியமாக தமிழ் மணத்தில் பல கள்ளப் பெயர்களில் கள்ள ஓட்டு போடத் தெரிந்திருந்தல் நீங்கள் எழுதுகிற எல்லா இடுகையும் ‘வாசகர் பரிந்துரையில்’ இடம்பெறும். அடுத்து ‘30,000 ஹிட்டுக்களை அள்ளிக்கொடுத்த், 300,000 ஹிட்டுக்களைக் கொட்டிக்கொடுத்த’ போன்ற வசனங்கள் எழுதத் தெரியவேண்டும். அப்படியென்றால்தான் வாசிக்கிறவன் எல்லாம் ‘இவன் பெரிய ஆள்’ என்று நம்புவான். ‘முலைக்கு வேலை’ என்று தேடி வந்தவனை ‘மூளைக்கு வேலை’ பக்கத்துக்கு கூகிளாண்டவர் அனுப்ப, அவன் தேடிய முலை இது இல்லை என்று அவன் 10-15 seconds மட்டுமே உலாவிவிட்டுப் போய்விடுவான். இதெல்லாம் hits counterல் one more visit தான். இந்த மாயைகளெல்லாம் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆகவே இந்த hits பற்றிப் பீற்றிக்கொண்டாலும் உங்களைப் பிரபல பதிவராகக் காட்டிக்கொள்ளலாம்.


இப்பிடியே எழுதிக்கொண்டிருந்தால் பதிவு முடிஞ்சமாதிரித்தான். அதாலை நீங்களும் பிரபலமாவதற்குரிய குறுக்கு வழிகளை, வழிகளை உங்கள் தேடல் மூலம் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டு (உ-ம்: யாரும் அழைக்காமலே தொடர்பதிவு எழுதுதல்).....


வலைப்பதிவு மூலம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததுண்டா?
யாரைப் பார்த்து என்ன கேள்வி. இவ்வளவு நேரமும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நிறைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவை யாரைக் காயப்படுத்தியதோ இல்லையோ என் குடும்பத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன. (மே.ப. வசனம் இந்தப் பதிவின் mood இலிருந்து மொத்தமும் விலகியது. நான் எழுதிய ஒரு பதிவுக்கு ‘கொப்பன் (கெட்டவார்த்தை) குமாரசாமி கள்ள உறுதி எழுதிற மாதிரி நீ மெய்யெண்டு புலம்புறாய் என்ற தன் பெயர் வெளியே சொல்லாக் கோழைகளின் பின்னூட்டம் காயப்படுத்தியது. என் கருத்தும் பெற்றவன் கருத்தும் ஒன்றில்லையே). Back to original mood.... முக்கால்வாசிப்பேர் நாங்கள் சொந்தக் கதைதான் எழுதுவோம். கூடப் படித்த நண்பனை சாதி காட்டிக் கொன்று போட்டுவிட்டு, சாதியை உடைக்க வசனம் பேசுவோம். Treadmill, Snooker, Cricket, Football, ARR Music, Slum dog Millionaire, Clooney, Star Movies, Star Sports, Coke, Pepsi குடிக்கிற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, ‘யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை’ என்போம். எங்கள் வீட்டுப் பெண்களை நாங்களே அடக்கிவிட்டு, ‘ஆணாதிக்க எதிர்ப்புப் பதிவு’ எழுதுவோம். ‘பெண்களை அடிமைப் படுத்தியதில் ஆண்களுக்குப் பெரும் பங்கு உண்டு’ என்பதை ஒரு ஆண் ஒப்புக்கொண்டு தன்னைச் சுய விமர்சனம் செய்ய முயன்றால் ‘பெண் விடுதலையில் ஆணுக்கென்ன அக்கறை. இது பெண்களை இன்னும் கோழையாக்கும் முயற்சி’ என்று கண்டிப்போம். மொத்தத்தில் ஒருத்தன் திருந்தினாலும் பிழை, திருந்தாவிட்டாலும் பிழை என்று உளறிக்கொட்டிக்கொண்டே...................... இருப்போம். இதெல்லாம் சொந்த அனுபவங்களைப் பகிர்தலும், பகிர்தலால் வருகிற வினைகளும்.


பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுகிறீர்களா? சம்பாதிப்பதற்கா?
சம்பாதிக்கத்தான். பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கத்தான். எப்படியாவது ஒரு நாளைக்கு பெரிய ‘இலக்கியவாதி’ ஆகி பணம் சம்பாதிக்கத்தான். (வேலை வெட்டி இல்லாமல் பொழுது போகாமல் திண்டது தினவெடுக்கத்தானே இருந்ததாலதானே வலையுலகுக்கே வந்தேன், அது தெரியாமல் கேள்வியைப் பார்)


மொத்தம் எத்தனை வலைப்பதிவுக்கு நீங்கள் சொந்தக்காரர்?
இரண்டுக்கு மேல் வைத்திருக்க வசதியில்லை. ஒரே ஒரு blogger id தான் இருக்கிறது. கண்டபடி திட்டிப் பின்னூட்டம் போட பல id களை எப்படி வேறு வேறு IP முகவரிகளைப் பயன்படுத்தி உருவாக்குவது என்றே தெரியவில்லை. ஒரு வலைப் பதிவில் நான் எழுதுவதையே சில சமயம் படிக்க முடிவதில்லை. இதுக்குள்ள எத்தனை வலைப்பதிவு என்று கேள்வி வேற....


மற்றப் பதிவர்கள்மீது கோபம் அல்லது பொறாமை உண்டா? ஆம் என்றால், யாரந்தப் பதிவர்?
யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. ஒவ்வொருவரையும் போல் எழுதவேண்டும் என்ற ஒரு ஆர்வம் மட்டும் இருக்கிறது.............. நோ நோ.. யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. என்மீதுதான் எல்லாரும் பொறாமை கொண்டே அலைகிறார்கள். என்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடந்துகொண்டே இருக்கிறது. யாரும் என் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் அறிவேயில்லை. அதனால் எல்லாப் பதிவரிலும் கடும் கோபம்.


உங்களை முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? என்ன பாராட்டினார்?
என்னைப் பாராட்டாத ஆளே கிடையாது. என்னுடைய பல கட்டுரைகளைப் படித்துவிட்டு எர்னெஸ்டோ சே குவேரா பல தடவை தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். தாஸ்தயேவ்ஸ்கிக்கும், மிஷெல் பூக்கோவுக்கும், நீட்ஷேயுக்கும் என்னுடைய எழுத்துக்கள் என்றால் உயிர். யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, பெரியார் போன்றோர் என்னை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும் எனக்கு? (இந்தப் பெயர்களைத் தேடித்தந்த கூகிளாண்டவருக்கு நன்றி. என்னையெல்லாம் யார் பாராட்டினான்? அந்தளவுக்கு நான் கூட்டம் சேர்க்கவில்லை. சேர்த்த கொஞ்சப் பேரும் சும்மா ஒப்புக்குச் சப்பாணியாப் பாராட்டுறாங்களே ஒழிய ஒரு மசுத்துக்கும் பிரயோசனமில்லை. என்னால் தண்ணியும் வாங்கிக் கொடுக்கமுடியாது. பிறகு?) (நான் பாராட்டினேனே என்று இரமணி சொல்வது கேட்கிறது).


பதிவுலகத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
என்னத்தைச் சொல்ல. எல்லாரும் நல்லா இருங்கோ என்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கோ.. நல்லா முதுகு சொறியுங்கோ.. ஏலுமானளவுக்கு எதிர்க்கருத்து மட்டுமே சொல்லுங்கோ..... அவ்வளவுதான்.

38 comments:

  1. சொல்ல‍ மறந்துட்டேன்

    Me the first

    ReplyDelete
  2. க‌லக்க‍ல் பதிவு அண்ணா

    //யாரும் அழைக்காமலே தொடர்பதிவு எழுதுதல்//
    அவ்வவ், இதுவேறயா?


    ரசித்தேன் :)

    ReplyDelete
  3. வாவ். நேரில் கதைப்பது மாதிரி இருக்கிறது. வேகமான நடை.

    ReplyDelete
  4. ரொம்பவே ரசித்தேன் கீத், ரொம்ப உள்குத்து இருக்கிறது போல

    ReplyDelete
  5. பதிவுலக நிதர்சனத்தை ரசனையுடன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்... வாய்விட்டு சிரிக்க வைத்த பதிவு!, வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. me the firstu !

    - J.K

    ReplyDelete
  7. உங்களுக்கேயுரிய நக்கலுடன் நீங்கள் சொன்ன நிறைய விடயங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.

    அந்த குஜிலி போன்ற சொற்களை நீஙகள் எழுதியபோது எனக்குக் கூட பெயரிலியின் வாதங்கள் எனக்கும் சற்று அதீதமாகவே பட்டன, எனினும் அந்தச் சம்பவத்தின்பின்னர் தான் நிறைய விடயஙக்ள் தெளிவாயின. பெயரிலிக்கு நன்றிகள்



    அது போல ஹிட்ஸ் போன்ற விடயங்களிலும் எனக்கு முழுகவே உடன்பாடு

    கீத் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  8. உங்களுக்கு பகடி நன்றாக வருகிறது கிருத்திகன்.

    ReplyDelete
  9. பதிவுலகை தோலுரித்துக் காட்டியாச்சுது கீத்.


    எங்கடை சனம் நரம்பில்லாதா நாக்காலை நாலு விதமாக் கதைக்கிற சனம் தானே?உதையெல்லாம் கணக்கெடுக்கப் படாது கீத்

    ReplyDelete
  10. நன்றி சுபாங்கன்.... yeah yeah.. U the firstuuuuu

    ReplyDelete
  11. @அனாமிகா...
    ஹா ஹா... இதுவும் படம் பார்க்கவில்லை விமர்சனம் அருமை மாதிரிப் பின்னூட்டமோ??? :))

    ReplyDelete
  12. யோகா...
    உள்குத்தா???? அப்பிடியெண்டால்? நான் அப்பாவி பாருங்கோ

    ReplyDelete
  13. தோழி...

    வாயை விட்டுடாதீங்கோ... இறுக்கிப் பிடியுங்கோ

    ReplyDelete
  14. ///அந்த குஜிலி போன்ற சொற்களை நீஙகள் எழுதியபோது எனக்குக் கூட பெயரிலியின் வாதங்கள் எனக்கும் சற்று அதீதமாகவே பட்டன, எனினும் அந்தச் சம்பவத்தின்பின்னர் தான் நிறைய விடயஙக்ள் தெளிவாயின. பெயரிலிக்கு நன்றிகள்///

    அருண்மொழிவர்மன்... ஹா ஹா. காலம் கடந்தாவது ஞானம் வந்தால் பரவாயில்லைதானே!!!! :))

    ReplyDelete
  15. நன்றி தர்ஷன்

    ReplyDelete
  16. ///எங்கடை சனம் நரம்பில்லாதா நாக்காலை நாலு விதமாக் கதைக்கிற சனம் தானே?உதையெல்லாம் கணக்கெடுக்கப் படாது கீத்///

    வடலியூரான்...
    தொப்பி எனக்கும் அளவு.

    ReplyDelete
  17. JK
    நீங்கள் ஆறாவது... வளீக்சா

    ReplyDelete
  18. என்ன நையாண்டி என்ன நக்கல் துணிச்சல் மிக மிக அதிகம்தான். ஒரு பதிவரும் தப்பவில்லை போலிருக்கிறது. நீங்க தொடராத பதிவா. நீங்க தூக்காத சொம்பா?

    நல்ல சொறியல். உங்க அரிப்புக்கு சொறிந்து விட நீங்க எதிர்பார்ப்பது போல் யாராவது வருவார்கள். காத்திருக்கவும் வெண்ணையைக் கையில் வைத்துக்கொண்டு.

    நல்ல பிழைப்பு.

    ReplyDelete
  19. ///என்ன நையாண்டி என்ன நக்கல் துணிச்சல் மிக மிக அதிகம்தான். ஒரு பதிவரும் தப்பவில்லை போலிருக்கிறது. நீங்க தொடராத பதிவா. நீங்க தூக்காத சொம்பா?

    நல்ல சொறியல். உங்க அரிப்புக்கு சொறிந்து விட நீங்க எதிர்பார்ப்பது போல் யாராவது வருவார்கள். காத்திருக்கவும் வெண்ணையைக் கையில் வைத்துக்கொண்டு.

    நல்ல பிழைப்பு.///

    அய்யோ அய்யோ.. அனானி நீங்கள் பாவம். நான் கொடுத்திருக்கிற தொடரல், சொம்பு தூக்கல் எல்லாமே என்னுடைய செம்பு தூக்கல்களைத்தான். அதுகூடத் தெரியேல்லை எண்டா நான் என்ன சொல்ல??

    ReplyDelete
  20. பாவன் அனானிக்கு நல்லா சுட்டுட்டுது. நான் என்னைத்தானே கிண்டல் செய்தேன்?? ஏன் அவருக்கு சுடுகுது. ஆளும் என்னைமாதிரியே சொம்பு தூக்கி, குண்டிகழுவி, பீதுடைக்கிற ஆளோ????

    ReplyDelete
  21. Kiruththikan, I felt like you sat in front of me and telling this. Well said Article.. and I agree with you...!

    ReplyDelete
  22. கீத் உன்னைத் தம்பியாகப் பெற்றதில்(வலையுலகில்) பெருமை அடைகின்றேன்.
    என்னையும் வம்புக்கு இழுத்தபடியால் கடுமையான கண்டனங்கள். சில விடயங்களை புட்டுபுட்டு வைத்திருக்கின்றாய்.

    இன்னும் சில விடயங்கள் :
    பதிவுலகில் நாலு இடமும் அடிபட்ட பதிவர்கள் (சிம்பிளாக பிரபல பதிவர்கள்) மேல் பொய்யான குற்றச் சாட்டு இட்டு யாருமே எட்டிப்பார்க்காத தங்கள் வலையை விளம்பரப்படுத்தல்.
    தமக்கு தாமே போலி வலைகளை வடிவமைத்துவிட்டு போலீஸுக்கு போவேன் இன்டெர்போலில் புகார் இடுவேன் என நீலிக் கண்ணீர் வடித்தல்.
    பேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான போலி புரொபைல்ஸ்(பல பெண் பெயர்களில்) வைத்துக்கொண்டு தமது ஸ்டேடசுக்க்கு தாமே மெசேஜ் இட்டு சுய இன்பம் அடைதல்.
    தம்மை சாரு ஜெயமோகன் நிலையில் வைத்துக்கொண்டு வளர்ந்துவரும் அல்லது பிரபலமான ஏனையவர்களின் மேல் காழ்ப்புணர்வில் சமூகப் பொறூப்புள்ள பதிவுகள் எழுதவும் என நக்கலடித்தல்.
    ஈழத்து பதிவர் என்றால் புலி எனவும் இந்தியப் பதிவர்கள் என்றால் திமுக அடிவருடி அம்மா அடிவருடி பார்ப்பன் எனவும் திட்டுதல்.

    இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றன, பலருக்கு பதிவுலகம் ஒரு விதமான போதையைக் கொடுத்திருக்கின்றது.

    ReplyDelete
  23. ஆஹா.., ஓஹோ.., பேஸ்.. பேஸ், ரொம்ப நன்னா இருக்கு உங்க பதிவு.

    இந்த சண்டை போடுரதத்தவிர, காக்கா பிடிக்கிற மாதிரியான, உங்களின் பல ஆலோசனைகளை நான் பின்பற்றி வருகிறேன்.

    * நான் பிரபலம் ஆய்யிருவேனா சார்...?.
    * எனக்கு கவுஜ எழுத வராது, வேற யாராவது எழுதுன கவுஜகள கட்&பேஸ்ட் பண்ணி, அதுல க-னவுக்கு பதிலா கா-வன்னா, கி-னாவுக்கு பதிலா கீ-யன்னானு மாத்தி பதிவு போட்டா சண்டைக்கு வருவாங்களா சார்.

    நீங்கள் மெண்மையானவர் என்பது உங்களின் எழுத்துக்களிலிருந்து தெரிகிறது. அந்த மெண்மை எனக்கு அளிக்கும் பதிலிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், உங்கள்...


    ( அப்பாடா, இன்னிக்கு காலையில கண்ணுல பட்ட முதல் பதிவுலேயே மொக்கய போட்டாச்சி, இனி சந்தோஷமா ஆபீசு கிளம்பலாம்....)

    ReplyDelete
  24. //ஹா ஹா... இதுவும் படம் பார்க்கவில்லை விமர்சனம் அருமை மாதிரிப் பின்னூட்டமோ??? :))//

    Nallathukku kaalam illai enpathu irthu thaana?

    I said the write up was wow. Should not I say something nice when its nice. I opposed few views (may be many views). It does not mean I have to oppose you in everything. Silly goose =)

    I even noticed the paragraph which was completely written for my comments. Yet, I wrote what I felt to write. You cant accept it, do you?

    ReplyDelete
  25. அட...
    ஒரு தொடர்பதிவுக்கு உரித்தான பதிவொன்றில் வேறு எவரையும் அழைக்காமல் தன்னுடன் நிறுத்திக்கொண்ட சுயநலவாதி ஐயா நீங்கள்!

    ReplyDelete
  26. //@அனாமிகா...
    ஹா ஹா... இதுவும் படம் பார்க்கவில்லை விமர்சனம் அருமை மாதிரிப் பின்னூட்டமோ??? :))
    //

    கிழிஞ்சுது கிருஷ்ணகிரி...
    புரியுது... புரியுது!!!

    ReplyDelete
  27. வரிகள் ஒவ்வொன்றிலும் அனாலும் நக்கலும் சம விகிதத்தில் இருக்கு..
    கலக்கல்.
    நாங்கள் ஒவ்வொருவருமே இதுக்குள் ஒவ்வொரு வகை.

    உங்கள் சுய கிண்டல்,கேள்வி+சுய &பொது விமர்சனங்களை ரசித்தேன் :)

    btw அனானி அட்டாக் ஆரம்பிச்சிட்டுது போல..
    நடக்கட்டும்..

    ReplyDelete
  28. நன்றி நதியானவள்

    ReplyDelete
  29. வந்தி...
    எனக்கு நீங்க சொறிய உங்களுக்கு நான் சொறிய அதைப் பாத்து மற்றவைக்கு சொறிய... உங்களை இழுக்காமல் வேறை ஆர இழுக்க??? அவ்வ்வ்வ்...

    ///பதிவுலகில் நாலு இடமும் அடிபட்ட பதிவர்கள் (சிம்பிளாக பிரபல பதிவர்கள்) மேல் பொய்யான குற்றச் சாட்டு இட்டு யாருமே எட்டிப்பார்க்காத தங்கள் வலையை விளம்பரப்படுத்தல்.
    தமக்கு தாமே போலி வலைகளை வடிவமைத்துவிட்டு போலீஸுக்கு போவேன் இன்டெர்போலில் புகார் இடுவேன் என நீலிக் கண்ணீர் வடித்தல்.
    பேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான போலி புரொபைல்ஸ்(பல பெண் பெயர்களில்) வைத்துக்கொண்டு தமது ஸ்டேடசுக்க்கு தாமே மெசேஜ் இட்டு சுய இன்பம் அடைதல்.////

    உங்களை இப்பிடிப் புலம்ப வச்சது அவரோ??? இவரோ????

    ReplyDelete
  30. Jey...

    நோக்கு கவுஜ எழுத வருமோ இல்லியோ தெரியலடா அம்பி.. அந்த காப்பி பேஸ்ட் மெத்தட்கூட எவ்வளவு நல்லதுன்னு நேக்குத் தெரியாதுடா... ஆனா, என்னய மாதிரீயே நன்னா காக்கா புடி. (அய்யோ... திரும்பவும் வேதாளம் முருங்கமரம் ஏறுதே... என்ன செய்ய)

    ReplyDelete
  31. ///Nallathukku kaalam illai enpathu irthu thaana?

    I said the write up was wow. Should not I say something nice when its nice. I opposed few views (may be many views). It does not mean I have to oppose you in everything. Silly goose =)

    I even noticed the paragraph which was completely written for my comments. Yet, I wrote what I felt to write. You cant accept it, do you?///

    என்ன அனாமிகா.... நிம்மதியா நக்கல் அடிக்கவும் விடமாட்டன் எண்டு நிக்கிறீர் :))

    ReplyDelete
  32. @அனாமிகா
    ///I even noticed the paragraph which was completely written for my comments. Yet, I wrote what I felt to write. You cant accept it, do you?///

    I may disagree with what you say, but I'll defend to the death your right to say it. (Voltaire aka Francois-Marie Arouet)

    ReplyDelete
  33. ///அட...
    ஒரு தொடர்பதிவுக்கு உரித்தான பதிவொன்றில் வேறு எவரையும் அழைக்காமல் தன்னுடன் நிறுத்திக்கொண்ட சுயநலவாதி ஐயா நீங்கள்!///

    ஆதிரை... அதான் சொல்லியாச்சே... நீங்களா இழுத்துவைத்து எழுதலாம் என்று:))

    ReplyDelete
  34. ///வரிகள் ஒவ்வொன்றிலும் அனாலும் நக்கலும் சம விகிதத்தில் இருக்கு..
    கலக்கல்.
    நாங்கள் ஒவ்வொருவருமே இதுக்குள் ஒவ்வொரு வகை.

    உங்கள் சுய கிண்டல்,கேள்வி+சுய &பொது விமர்சனங்களை ரசித்தேன் :)

    btw அனானி அட்டாக் ஆரம்பிச்சிட்டுது போல..
    நடக்கட்டும்..///

    எங்களை நாங்கள் விமர்சிப்பதில் இருந்துதான் மாற்றங்கள் ஆரம்பிக்கும் இல்லையா லோஷன் அண்ணா???

    அது சரி.. நான் ‘முரளி அம்மா’ பதிவில் கேட்ட ஐட்டம் கிடைக்குமா???

    ReplyDelete
  35. நன்றி ஜமாலன்

    ReplyDelete
  36. எல்லார் டவுசர்களை கிழிச்சுட்டிங்க போங்க..:P

    ReplyDelete
  37. பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
    மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

    http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

    ReplyDelete

சரி.. சமாதானமாப் போவோம்... பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க...