Thursday, 29 October 2009

பசுக் கொட்டாய்


பத்தாயிரம் பொன்னுக்கு
கொட்டாய் வாங்கி
இருபது பசு அடுக்கி
இருபதடி நிலம் ஒதுக்கி
அழகாகக் கொண்டாட

பண்ணையார் பரமசிவம் வந்து
பரிசாகக் கிடைத்த ஒரு பசுவை
இழுத்து நீ கொட்டாயில் விடு
அதுவாகும் இருபதென்று
உவப்புடனே சொல்லிச் சென்றான்

கொட்டாயும் வாங்கி,
கெஞ்சிக் கெஞ்சிப் பரிசாகப்
பசுவும் வாங்கி,
வாகாக இழுத்து வந்து
கொட்டாயில் விட்டேன்

ஐயகோ என் சொல்வேன்
ஐடியா சொன்னவன்
'நாமக்கல்' சிபி அல்ல,
'மாநக்கல்' சிபி என்று, அக்கணமே
உறைக்கலையே ஏன் எனக்கு?

13 comments:

  1. உங்கள் பசுவிற்க்கு நன்றிகள் ஆனால் அது ஆகவில்லை கொட்டாயில் இருபதாய் மாநக்கல் எல்லோரையும் ஏமாத்திவிட்டார்

    ReplyDelete
  2. ஹா ஹா...
    உங்கள் கதையை வந்தியண்ணாவின் பதிவில் வாசித்தேன்...
    'மாநக்கல்'... ஹா ஹா....

    ReplyDelete
  3. அது மாநக்கல் இல்லை.. உண்மை தான்..
    Drag and drop பண்ணினால் ஒரு மாற்றமும் நடக்காது..
    பசுவைப் பிடிச்சு நிலத்தில விட்டிட்டு பிறகு கொட்டகைக்குள்ள அடைக்காமல் Gift box இல் use ஐ click பண்ணி பசுவைத் தெரிவு செய்துவிட்டு கொட்டகையையும் தெரிவு செய்தால் gift box இலும் பசு இருக்கும்.. கொட்டகையிலும் பசு இருக்கும்..

    Bug கண்டுபிடிக்கும் வரை Giftbox அமுதசுரபி தான்...

    23 பசு இந்த முறையில கொட்டகையில அடைச்சு வைச்சிருக்கிறம்ல... :)

    ReplyDelete
  4. நன்றி சின்ன அம்மணி

    ReplyDelete
  5. அப்பிடித்தான் நினைக்கிறேன் வந்தியண்ணா.... ஆனா உவ சாயினி அது சாத்தியம் என்று சொல்லுறா... எங்களுக்குத்தான் சாமர்த்தியம் போதாதோ விவசாயத்தில்???

    ReplyDelete
  6. கனககோபி...
    உந்தாள் அதைக் கதையா வேற எழுதிப்போட்டுதே.... அடக் கறுமமே

    ReplyDelete
  7. சாயினி...
    என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.. ஒண்ணுமே புரியலை உலகத்தில...

    ReplyDelete
  8. ஒண்ணுமே ஆகலையே வால்பையல்... அதுதான் பிரச்சினையே

    ReplyDelete
  9. மாநக்கல் பண்ணிவிட்டீர்களே!

    ReplyDelete
  10. சத்தியமாக எனக்குத் தெரியாதபடியால் கேட்கிறேன்.
    உந்தப் பசுக்களை வைச்சு என்ன செய்யுறது? குடிக்கப் பால் தருமா?

    ReplyDelete
  11. சும்மா தெரியாதா சுபாங்கன்... எல்லாம் ஒரு விளாட்டுதான்

    ReplyDelete
  12. ஆதிரை அண்ணா...
    வெறும் பாலில்லை... ஸ்ரோபெரி பால், சொக்கலேற் பால் எல்லாம் தரும்

    ReplyDelete

சரி.. சமாதானமாப் போவோம்... பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க...