Tamil 10 கிரீடம்

Sunday, June 28, 2009

வெகுஜன ஊடகங்களும் மொக்கைப் படங்களும்

சமீபகாலமாகவே மொக்கைப் படங்களுக்குப் போய் வருத்தத்தோடு நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நான் தியேட்டர் போய் பார்த்த கடைசிப் படம் ‘தசாவதாரம்'. அதற்குப் பிறகு தியேட்டர் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. சமீபகாலமாக வந்த படங்கள் அவை சம்பந்தப்பட்ட வெகுஜன ஊடகங்களின் போக்கு இவை இரண்டையும் வைத்து மிக இலகுவாக படங்களின் வெற்றி தோல்வியைக் கணித்து விடக்கூடியதாய் இருக்கிறது. உதாரணத்துக்கு, சூப்பர் ஸ்டார் மற்றும் அவர் இடத்தைப் பிடிக்கப் போராடும் இளைய தலைவலி, அந்தத் தலைவலியின் இடத்தைப் பிடிக்கக் கங்கணம் கட்டியுள்ள புரட்சித் தலைவலி ஆகியோரது படங்களைப் பார்ப்போம்.

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் வரலாறு காணாத கவரேஜ் பெற்ற படம் ‘குசேலன்'. குசேலனுக்கு முன் ரஜினியின் இரு படங்களும் இமாலய வெற்றி பெற்றன. சிவாஜி என்றொரு மொக்கைப் படம் ஷங்கரின் வியாபார தந்திரங்கள் காரணமாக பிய்த்துக் கொண்டு ஓடியது. அதற்கு முன் முன்னெப்போதும் ரஜினி படங்களில் இல்லாத ‘காம'நெடி தூவிய காமெடி காட்சிகளுடன் வந்த சந்திரமுகியும் நன்றாக ஓடியது. சந்திரமுகியின் வெற்றி தந்த போதையில் தனது இயக்கும் திறமையில் பெரும் நம்பிக்கை வைத்து ‘கத பறயும் போள்' படத்தை இயன்றளவு கற்பழித்த வாசு, மேலே நான் சொன்ன வெகுஜனப் பத்திரிகைகளிலெல்லாம் படத்தைப் பற்றிக் கொடுத்த பேட்டிகளை ஒரே ஒரு வசனத்தில் சுருக்கிச் சொன்னால் ‘இது இதுவரை உலக வரலாற்றிலேயே வராத ஒரு காவியம்'. கடைசியில் படம் உலக மகா மொக்கை. அப்போது கூட வாசுவின் பேட்டிகள் எல்லாம் வியாபார தந்திரம் என்று புரியாத தமிழ் சினிமா ரசிகனுக்கு தியேட்டர் சீட்டில் ஆப்பு செருகினார்கள் இளைய மற்றும் புரட்சித் தலைவலிகள்.
இளைய தலைவலியின் ‘குருவி' மற்றும் ‘வில்லு' இரண்டு படங்களைப் பற்றியும் படக்குழுவினர் வெகுஜன ஊடகங்களில் திரும்பத் திரும்பக் கூவியது ஒரே மேட்டர்தான். அதாவது, இதுவரை சொன்ன கதைகளை ஒரு புதிய கோணத்தில் சொல்கிறோம் என்று. படம் பார்த்த அனைவருக்குமே தெரிந்த ஒரே ஒரு விஷயம் அது எல்லாம் கப்ஸா என்பது மட்டுமே. இப்போ 'வேட்டைக்காரன்' பற்றிக் கூவத் தொடங்கிவிட்டார்கள். புரட்சித் தலைவலியின் ‘சத்யம்' இயக்குனர் ஒரு தத்துவம் உதிர்த்தார். படத்தில் நாலரை நிமிடப் பாட்டுக்காகவே தலைவலியும், நயன்தாராவும் சிக்ஸ் பாக் வைத்துக் கொண்டார்களாம் மூன்று நான்கு மாதம் கஷ்டப்பட்டு. அந்தப் பாடலுக்கு சிக்ஸ் பாக் வைக்க ஒதுக்கிய நேரத்தில் ஒரு இரண்டு மணித்தியாலமாவது கதை கேட்க ஒதுக்கியிருக்கலாம். அதே பாணி வசனங்களால் எதிர்பார்ப்பைக் கிளப்பிய தோரணை மக்களுக்கு ரோதனையாய் போனது. இப்படிப்பட்ட அனுபவங்களால், படம் பார்க்க முன்னரே அது மொக்கை படமா இல்லையா என்று தீர்மானிக்க சில வழிமுறைகளைக் கண்டுவைத்திருக்கிறேன்.

வாராவாரம் விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் படம் பற்றி கவரேஜ் வருகிறதா? தியேட்டர் பக்கம் தலைவச்சு படுக்காதீங்க. (மேலே சொன்ன படங்கள் நல்ல உதாரணம்)

'காஃப்பி வித் அனு' வில் படக்குழு வந்து படம் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்கிறார்களா? அந்தப் படம் நிச்சயம் மொக்கை. (சமீபத்திய உதாரணம் ‘ராஜாதி ராஜா'. மும்தாஜும், லாரன்ஸும் கொடுத்த பேட்டிபார்த்து ராஜாதி ராஜாவைப் பார்க்க இருந்தேன். பதிவர்களின் விமர்சனங்கள் காப்பாற்றின)

முதல் வாரம் படம் பார்க்க முடியவில்லையா? சன் டி.வி. அல்லது கொலைஞர் சாரி சாரி, கலைஞர் டி.வி. பாருங்க. படம் பற்றி ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புப் பார்வை என்று ஏதாவது போகிறதா? டாப் டென், திரை விமர்சனம் போன்ற நிகழ்ச்சிகளில் படம் பற்றி ஆஹா ஓஹோ என்கிறார்களா. படம் பார்த்தால் செத்தீர்கள். ஒன்று சன் டி.வி. குழுமம் தயாரித்த மொக்கை படமாய் இருக்கும்.. இல்லை கலைஞர் வசனம் எழுதுகிறேன் பேர்வழி என்று கொலை செய்வார்.

இப்போதைக்கு இந்த மூன்றும் எனக்குத் தெரிந்த இலகு வழிகள்.


இதை விட இன்னொரு வருத்தமும் இருக்கிறது. விகடன் எப்போது படம் தயாரிக்கத் தொடங்கினார்களோ அன்றோடு தொலைந்து போனது அவர்களின் நேர்மையான விமர்சனம். 'துள்ளுவதோ இளமை' படத்துக்கு குப்பைத் தொட்டி ஒன்றைப் பின்னணிப் படமாக்கி விமர்சனம் எழுதிய விகடன் இப்போது இல்லை. தான் தூக்கி வளர்த்த பிள்ளைகளான ஷங்கரும் சுஜாதாவும் சேர்ந்து ‘பாய்ஸ்' படத்தை எடுத்த போது ‘மார்க் போடக்கூட தகுதியில்லாத படம்' என்று சுட்டிக்காட்டிய விகடன் இப்போது இல்லை. வெறுமனே சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களின் உத்தியோகபூர்வமற்ற பி. ஆர். ஓ க்களாக மாறிவிட்டார்கள் விகடன் குழுமம். அவர்களை அடியொற்றி குமுதமும் தொடர்கிறது. குங்குமத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நல்ல நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் தரமுயன்ற, கட்சிச் சார்பற்ற தொலைக்காட்சியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட விஜய் டி.வி. கூட சோரம் போகும் அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன. சாதாரண சினிமாக்களைப் பற்றிய செய்திகளைக்கூட நடுநிலையில்லாமல் பக்கசார்போடு சித்தரிக்கும் இவர்களின் மற்ற செய்திகளை எப்படி நம்புவது?

7 மறுமொழிகள்:

வந்தியத்தேவன் said...

அசத்தலான கருத்துக்கள். விகடனில் திரைவிமர்சனம் மட்டுமல்ல ஒன்லைன் விகடனில் பின்னூட்டத்தில் வரும் சில்ரின் கருத்துக்கள் கூட விஷத் தன்மை வாய்ந்தவை. பழம்பெரும் அரசியல் தலைவர்களை எல்லாம் தாறுமாறாக விமர்சிக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஓரளவு நடுநிலைமையாகவும் நேர்மையாகம் நடந்துகொண்டிருந்த மதன் திரைப்பார்வை ஏனோ இடை நிறுத்தப்பட்டுள்ளது.

சம் பிக்சர்ஸ்படமா ஓரிரு மாதம் பொறுத்த்திருங்கள் சன் டிவியில் விளம்பரங்களுக்கு இடையில் ஒளிபரப்புவார்கள். வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து சில வாரங்களேஆன(அவர்களே இப்படித்தான் அறிவிக்கிறார்கள்) ஆனந்த தாண்டவம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கந்தசாமிக்கும் ஓவர் பில்டப் கொடுக்கிறார்கள் ஊத்திக்கிறதோ தெரியவில்லை. நீங்கள் குரு என் ஆளூ, சர்வம், மஞ்சள் வெயில் போன்ற படங்கள் பார்க்கவில்லை மொக்கை நம்பர் ஒன் படங்கள்.

azhagan said...

It's all money brother. No use is trying to believe they are trustworthy.

Keith Kumarasamy said...

வந்தியத்தேவன்
குரு என் ஆளு, சர்வம் பார்த்தேன்... நீங்க சொன்ன மாதிரி மொக்கையோ மொக்கைதான்... கந்தசாமி பற்றிய என் கருத்தும் அதே... தசாவதாரம் கூட கமலின் ‘ஸ்டார் வல்யூ' காரணமாகத்தான் கொஞ்சமாவது ஓடியது.

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அழகன்

shabi said...

'துள்ளுவதோ இளமை' படத்துக்கு குப்பைத் தொட்டி ஒன்றைப் பின்னணிப் படமாக்கி விமர்சனம் எழுதிய விகடன் இப்போது இல்லை.///இந்த படத்திற்கு குப்பை தொட்டி இல்லை .. அந்த படம் இது காதல் வரும் பருவம்(கஸ்தூரி ராஜா இயக்கிய மகா மொக்கை)

Statistics said...

சார், நீங்க சூப்பர் ஸ்டாரை, புரட்சி தளபதியை சொல்வதெல்லாம் சரி ....அதெப்படி எங்கள் அண்ணன் இளைய தளபதி டாக்டர் விஜயின் படங்களை மொக்கை என்று சொல்லலாம்?
அயராத அரசியல் பணிகளுக்குகிடையிலும் அண்ணன் எங்களுக்காக எவ்வளவோ நல்ல படங்களை தருவதை நீங்கள் மறக்கலாமா?
இதற்க்கு பிராயச்சித்தமாக நீங்கள் எங்கள் மக்கள் இயக்கத்தில் தொண்டராக இணைய வேண்டும்... மேலதிக தவல்களுக்கு http://pullivibaram.blogspot.com/2009/06/blog-post_28.html

Keith Kumarasamy said...

ஷாபி... துள்ளுவதோ இளைமைக்கும் ஒரு குப்பைத் தொட்டி கொடுத்தார்கள்...

சும்மா காமெடி பண்ணாதீங்க புள்ளிவிபரம் (statistics)

tamil videos said...

nalla comedy..